Tamil Serial Actor: ‘சீரியலின் பிதாமகன்.. டபுள் செஞ்சுரி அடித்த பூவிலங்கு மோகன்’ யார் இவர்? முழு விபரம் இதோ!-unforgotten tamil serial actor poovilangu mohan acter over 200 tv serials says small screen only showcased my talent - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Tamil Serial Actor: ‘சீரியலின் பிதாமகன்.. டபுள் செஞ்சுரி அடித்த பூவிலங்கு மோகன்’ யார் இவர்? முழு விபரம் இதோ!

Tamil Serial Actor: ‘சீரியலின் பிதாமகன்.. டபுள் செஞ்சுரி அடித்த பூவிலங்கு மோகன்’ யார் இவர்? முழு விபரம் இதோ!

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Aug 21, 2024 12:37 PM IST

Unforgotten Tamil Serial Actor: சினிமாவில் அறிமுகமானாலும் சின்னத்திரை தான் எனது திறமையை வெளிக்காட்டியது என்று கூறியிருக்கிறார் நடிகர் பூவிலங்கு மோகன். 200க்கும் அதிகமான சீரியலில் நடித்த இவர் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட சித்தி, மர்மதேசம் போன்ற தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Tamil Serial Actor: ‘சீரியலின் பிதாமகன்.. டபுள் செஞ்சுரி அடித்த பூவிலங்கு மோகன்’ யார் இவர்? முழு விபரம் இதோ!
Tamil Serial Actor: ‘சீரியலின் பிதாமகன்.. டபுள் செஞ்சுரி அடித்த பூவிலங்கு மோகன்’ யார் இவர்? முழு விபரம் இதோ!

தமிழ் சினிமாவில் சுமார் 100க்கும் மேற்பட்ட படங்களில் இவர் நடித்திருந்தாலும், படங்களை காட்டிலும் டிவி சீரியல்கள் மூலம் தமிழ் மக்களின் வீடுகளில் குடிபெயர்ந்தவராக இருந்துள்ளார்.

சிறந்த துணை நடிகர்

1980களில் சினிமாக்களில் நடித்து வந்த பூவிலங்கு மோகன் ஹீரோவுக்கு இணையான கதாபாத்திரங்களில் இரண்டாவது ஹீரோ அல்லது துணை நடிகராக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்க வைத்துள்ளார். பல படங்களில் பரிதாபத்துக்குரிய கேரக்டர்களில் தோன்றி முத்திரை பதித்த நடிகராக இருந்து வந்துள்ளார்.

பாலசந்தர் இயக்கத்தில் பல படங்களில் நடித்து வந்த பூவிலங்கு மோகனுக்கு அஜித்தின் 25வது படமான அமர்க்களம் கம்பேக் படமாக அமைந்தது. இதற்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ் டிவிகளில் ஒளிபரப்பான பல்வேறு சீரியல்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

சீரியலில் பிஸியான நடிகர்

சரத்குமார் நடிப்பில் 1993இல் வெளியான வேடன் படத்துக்கு பின்னர் சீரயல் பக்கம் சென்ற பூவிலங்கு மோகன் அங்கு பிஸியான நடிகராக வலம் வந்தார். 90களில் முக்கிய சீரல்களாக இருந்த மர்மதேசம் சீரிஸில் விடாது கருப்பு, சொர்ண ரேகை, பாலசந்தர் இயக்கிய ஜன்னல், கங்கா யமுனா சரஸ்வதி போன்ற ஹிட் சீரியல்களில நடித்தார்.

இவரது சீரியல் பயணத்துக்கு ஆரம்ப புள்ளிகளில் ஒன்றாக தூர்தர்ஷனில் ஒளிபர்பபான விழுதுகள் என்ற தொடர் அமைந்திருந்தது.

இந்திய டிவி சீரியல்களில் அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தமிழ் சீரியலாக திகழும் சித்தி தொடரில் இவர் மருதப்பன் என்ற கதாபாத்திரத்தில் தோன்றி நடிப்பில் பட்டையை கிளப்பியிருப்பார். சித்தி வெற்றியை தொடர்ந்து அதே டீமுடன் அண்ணாமலை சீரயலில் நடித்தார்.

இதைத்தொடர்ந்து சன்டிவியில் திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியலில் மயில்வாகனம் என்ற கேரக்டரில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனங்களை கவர்ந்திருப்பார்.

சன் டிவி மட்டுமல்லாம் ராஜ் டிவி, ஜெயா டிவி, கலைஞர் டிவி, ஜீ தமிழ் என பல்வேறு டிவி சேனல்களில் ஒளிபரப்பான முக்கிய தொடர்களிலும் நடித்துள்ளார்.

பூவிலங்கு மோகன் புதிய தொடர்கள்

பூவிலங்கு மோகன் சீரியல் பயணம் இன்று வரையிலும் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் அண்ணா என்ற தொடரிலும், தூர்தர்ஷன் தமிழில் ஒளிபரப்பாகும் தாயம்மா குடும்பத்தார் என்ற தொடரிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கொண்டிருக்கிறார்.

சின்னத்திரை தான் எனது திறமையை வெளிக்காட்டியது

"கோமல் சுவாமிநாதன் ட்ரூப்பில் சுமார் 2, 500 மேடை நாடகங்களில் நடித்துள்ளேன். எனது நான்காவது படமாக வெளியான பூவிலங்கு எனக்கு பிரேக் கொடுத்தது. அதன் பின்னர் பூவிலங்கு மோகன் ஆனேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை காட்டிலும் வாய்ப்பு தேடி நான் எந்த டைரக்டர்களையும் அணுகியதில்லை.

நான் சீரியல்களில் பிஸியாக நடித்த வந்த காலகட்டத்தில் திரைப்படங்களில் கவனம் செலுத்த முடியாமல் போனது. முன்னணி ஹீரோக்கள் பலருடனும் இணைந்து நடித்திருப்பதையே சினிமாவுக்கு நான் செய்த பெரும் சாதனையாக பார்க்கிறேன்.

சின்னத்திரை தான் எனது திறமையை வெளிக்காட்டியுள்ளது. சினிமாக்களை விட சீரயலில் தான் அதிகமாக நடித்துள்ளேன். 200க்கும் மேற்பட்ட தொடர்களில் தமிழில் இருக்கும் பெரும்பாலான சேனல்களுக்காக நடித்துள்ளேன். சீரியலில் நடித்ததன் மூலம் ஆண்டு முழுவதும் பிஸியான நடிகனாக வலம் வந்துள்ளேன்" என்று பிரபல ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் பூவிலங்கு மோகன் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, சின்னத்திரை ரசிகர்களால், குறிப்பாக 90 காலகட்டத்தில் ஒளிப்பரப்பான தொடர்களில் தவிர்க்க முடியாத நடிகராகவும், மறக்க முடியாத நடிகராகவும் பூவிலங்கு மோகன் இருந்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.