ஓடிடியில் வருகிறது தங்கலான்..அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்! தாமதம் ஏன் எனவும் விளக்கம்
Oct 17, 2024, 10:30 PM IST
ரசிகர்களில் நீண்ட நாள் காத்திருப்புக்கு பதில் அளிக்கும் விதமாக தங்கலான் ஓடிடி ரிலீஸ் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர், தாமதம் ஏன் எனவும் விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாள் எதிர்பார்ப்புக்கு பின் தீபாவளி ஸ்பெஷலாக ஓடிடியில் வருகிறது தங்கலான்
திரையரங்குகளில் வெளியான படங்கள் ஒரு மாதத்துக்கு பிறகு ஓடிடி தளங்களில் தற்போது வெளியாகி வருவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டில் வெளியான முன்னணி ஹீரோக்கள் படங்களில், பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்த படங்கள், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்கள் வரிசை கட்டி ஓடிடி தளங்களில் வெளியாகியுள்ளன.
அதன்படி, டாப் ஹீரோவின் லேட்டஸ்ட் ஓடிடி வெளியீடாக தளபதி விஜய்யின் தி கோட் நெட்பிளிக்ஸ் தளத்தில் கடந்த 3ஆம் தேதி வெளியானது. இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றதோடு ஓடிடி ரிலீஸுக்காக காத்துக்கொண்டிருக்கும் படமாக தங்கலான் படம் உள்ளது.
உறுதியான தங்கலான் ஓடிடி ரிலீஸ்
தங்கலான் படம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதியே படம் ஓடிடியில் வெளியாவதாக இருந்த நிலையில் பல்வேறு காரணங்கலளால் தள்ளிப்போனது. விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்பட பலர் நடித்து பீரியட் ஆக்ஷன் திரில்லர் படமாக பா. ரஞ்சித் இயக்கியிருக்கும் இந்த படம் தீபாவளி வெளியீடாக நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.
படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகிவில்லை என்றாலும், தீபாவளி ட்ரீட்டாக படம் ஓடிடியில் ஸ்டிரீமிங் ஆகும் என தங்கலான் பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.
பைனான்ஸ் பிரச்னை இல்லை
தங்கலான் ஓடிடி ரிலீஸுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், "தங்கலான் திரைப்படத்தில் புத்த மதம் குறித்து புனிதமாகவும், வைணவம் பற்றி நகைச்சுவையாக சித்தரிக்கும் விதமாகவும் படத்தில் காட்சிகள் உள்ளன. இதனால் 'தங்கலான்' ஓடிடியில் வெளியானால் இரு பிரிவினர் இடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது என குறிப்பிட்டு இருந்தார்".
இதற்கிடையே பைனான்ஸ் பிரச்னை காரணமாக படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அது தவறான தகவல் என விளக்கம் அளித்துள்ளார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.
தங்கலான் கதை
வட ஆற்காடு வேப்பூர் கிராமத்தில் தங்கலான் முனி (விக்ரம்) தன்னுடையை மனைவி கங்கம்மா, ( பார்வதி) குழந்தைகள் மற்றும் தன் சனத்தோடு, தனக்கான நிலத்தில் பயிர் செய்து நிம்மதியாக வாழ்ந்து வருகிறான். இதனை பார்த்து பொறுக்காத ஊர் மிராசு, சூழ்ச்சி செய்து, அவனையும் அவனது மகன்களையும் பண்ணை அடிமையாக பணி அமர்த்துகிறார். இதற்கிடையே வரும் ஆங்கில துரை கிளவ்ன் (டேனியல்) அந்தக் காட்டில் இருக்கும் தங்கத்தை எடுக்க ஊராரின் உதவியை கேட்கிறார். மிராசின் அடிமையாக இருப்பதை விட, துரைக்கு உதவி செய்து கூலி வாங்கி, ரோஷத்தோடு வாழ நினைக்கிறான் தங்கலான். இதனையடுத்து அவனுடைய மகன் அசோகன் மற்றும் ராமானுஜம் வழியில் அந்தனன் ( பசுபதி) உள்ளிட்டோர் செல்கின்றனர்.
ஒரு கட்டத்தில் அவனுடன் ஊராரும் சேர்ந்து கொள்கின்றனர். ஆனால், அங்கிருக்கும் தங்கத்தை தன் உயிராக பாதுகாத்து நிற்கின்றனர் ஆரத்தியும் ( மாளவிகா) அவனது குழுவும். பொன்னை நெருங்க வரும் நபர்களின் உயிர்களை காவு வாங்கும் அவர்களை மீறி, இறுதியில் தங்கலான் குழு தங்கத்தை எடுத்தார்களா? இல்லையா? அதன் பின்னர் என்ன ஆனது என்பது படத்தின் கதை.
டாபிக்ஸ்