"மிரட்டலா நடிச்சிருக்காங்கப்பா” - கார்த்திக் சுப்பராஜ் பாராட்டிய ஓடிடி த்ரில்லர்.. யார் ஹீரோ..? - முழு விபரம் உள்ளே!
கார்த்திக் சுப்பராஜ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் "ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” த்ரில்லர் திரைப்படம் கவனம் ஈர்த்து இருக்கிறது.

மிரட்டலா நடிச்சிருக்காங்கப்பா” - கார்த்திக் சுப்பராஜ் பாராட்டிய த்ரில்லர்.. யார் ஹீரோ..? - முழு விபரம் உள்ளே!
‘பீட்சா’, ‘ஜிகிர்தண்டா’ ‘இறைவி’ ‘பேட்ட’ ‘ஜிகிர்தண்டா -2 ’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி, தமிழ் சினிமாவின் முன்னணி படைப்பாளியாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக இருக்கும் “ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்” சீரிஸை பார்த்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
இந்த சீரிஸின் டிரெய்லர் யூடியூப்பில் 10 மில்லியன் பார்வைகளைக் குவித்து இருக்கிறது. ஒன்பது எபிசோட்கள் கொண்ட இந்த சீரிஸ், டார்க் ஹ்யூமர் த்ரில்லர், சஸ்பென்ஸ், மர்மம் என ஆச்சரியத்தில் ஆழ்த்தும் திருப்பங்களுடன் கூடிய தொடராக உருவாகி இருக்கிறது.