Thangalaan: இது பக்கா மாஸ்.. சியான் விக்ரம் உழைப்பு வீண் போகல - தங்கலான் பட வசூலின் சாதனை
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Thangalaan: இது பக்கா மாஸ்.. சியான் விக்ரம் உழைப்பு வீண் போகல - தங்கலான் பட வசூலின் சாதனை

Thangalaan: இது பக்கா மாஸ்.. சியான் விக்ரம் உழைப்பு வீண் போகல - தங்கலான் பட வசூலின் சாதனை

Aarthi Balaji HT Tamil
Aug 30, 2024 02:42 PM IST

Thangalaan: உலகளவில் ' தங்கலான் ' திரைப்படம், 100 கோடி ரூபாய் வசூலை கடந்து சாதனை படைத்து இருக்கிறது.

Thangalaan: இது பக்கா மாஸ்.. சியான் விக்ரம் உழைப்பு வீண் போகல - தங்கலான் பட வசூலின் சாதனை
Thangalaan: இது பக்கா மாஸ்.. சியான் விக்ரம் உழைப்பு வீண் போகல - தங்கலான் பட வசூலின் சாதனை

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான ' தங்கலான் ' திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். 

புதுமையான திரை மொழி

கோலார் தங்க வயல் பின்னணியில் உருவான இந்த திரைப்படம் கடந்த நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒடுக்கப்பட்ட மக்களின் யதார்த்த வாழ்வியலையும், ஆதிக்கத்திற்கு கட்டுப்பட்டு உரிமைகளுக்காக போராடிய அவர்களின் போராட்ட வாழ்வியலை மாய யதார்த்தம் மற்றும் புதுமையான திரை மொழியால் உருவாக்கப்பட்டு இருந்தது.

இதில் சீயான் விக்ரமின் அர்ப்பணிப்புடன் கூடிய கடின உழைப்பை கண்களை இமைக்க மறந்து, அகல விரித்து.. கண்டு ரசித்து, வியந்து பாராட்டாதவர்களே இல்லை எனலாம். இது அவருடைய ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் புதிய அனுபவத்தை அளித்தது.

தங்கலான் பட வசூல்

இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று திரையரங்குகளில் வெளியான ' தங்கலான்'  ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப பாக்ஸ் ஆபீசில் வெற்றி பெற்ற திரைப்படமாகவும் சாதனை படைத்தது. இந்த திரைப்படம் இதுவரை உலகளாவிய அளவில் பாக்ஸ் ஆபீசில் 100 கோடி ரூபாயை கடந்து புதிய வசூல் சாதனையை நோக்கி பயணத்தை தொடர்கிறது.

அந்த மனசு தான் சார் கடவுள்

இந்த மைல்கல்லைக் கொண்டாடும் வகையில், படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் ஒரு பிரமாண்டமான நிகழ்வுக்கு கூடினர், அங்கு விக்ரம் தொகுப்பாளராகப் பங்கேற்று பார்வையாளர்களுக்கு ஆடம்பரமான விருந்து வழங்கினார். விக்ரம் தனிப்பட்ட முறையில் தனது குழுவினருக்கு உணவு பரிமாறினார்.

சீயான் விக்ரமின் 'தங்கலான்' திரையரங்குகளில் வெளியான முதல் நாளில் உலகளவில் 26 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இது சீயான் விக்ரமின் திரையுலக பயணத்தில் அவருடைய திரைப்படங்களுக்கு கிடைத்த சிறந்த முதல் நாள் வசூலாக அமைந்தது.

செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி ரிலீஸ்

'தங்கலான்' தமிழகத்தில் மட்டும் இல்லாமல் ஆந்திரா - தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் வெற்றி பெற்றது. இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் வட இந்திய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் வெளியாகிறது. இதனால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.