Malavika Mohanan: பரிசு கலாச்சாரம்.. நடிகர்களுக்கு அங்கீகாரம்! நடிகைகளுக்கு வைக்கப்படும் குறி - மாளவிகா மோகனன் பளிச்
Malavika Mohanan: தென் இந்திய சினிமாக்களில் நிலவும் பரிசு கலாச்சாரம் நடிகர்களுக்கு அங்கீகாரம், மரியாதையை தருகிறது. நடிகைகள் இந்த விஷயத்தில் சமமாக நடத்தப்படுவதில்லை. மாறாக பாக்ஸ் ஆபிஸ் தோல்வி அதிஷ்டமில்லாத நடிகை முத்திரை நடிகைகளுக்கு வைக்கப்படும் குறியாக இருப்பதாக நடிகை மாளவிகா மோகனன் கூறியுள்ளார்.

தமிழில் பேட்ட, மாஸ்டர் படங்களில் தோன்ற தனது அற்புத நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு. மோகனன் மகளான இவர் தாய்மொழியான மலையாளம், தமிழ், இந்தி படங்களில் நடித்துள்ளார்.
விக்ரமுடன் இவர் இணைந்து நடித்த தங்கலான் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. படத்தில் மாளவிகா மோகனன் சூனியக்காரியாக மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
இந்த படத்தை தொடர்ந்து மாளவிகா மோகனன் நடிப்பில் கடந்த மாதம் யுத்ரா என்ற பாலிவுட் படம் வெளியானது. ஆக்சல் திர்ல்லர் படமான இதில் கவர்ச்சி தரிசனம் வெளிப்படுத்தியிருந்தார். இதையடுத்து பாலிவுட் பப்பிள் என்ற பிரபல பாலிவுட் ஊடகத்துக்கு மாளிவிகா மோகனன் பேட்டி அளித்துள்ளார். அதில் தென் இந்தியா சினிமாக்கள், ஷாருக்கானை சந்தித்தபோது வாங்கிய திட்டு உள்பட பல்வேறு விஷயங்களை பேசியுள்ளார்.