தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vikram: தங்கலான் படக்குழுவினருடன் தண்ணீரில் ஆட்டம் போட்ட விக்ரம்

Vikram: தங்கலான் படக்குழுவினருடன் தண்ணீரில் ஆட்டம் போட்ட விக்ரம்

Aarthi V HT Tamil

Dec 06, 2022, 12:48 PM IST

நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருடன் ஒகேனக்கல் தண்ணீரில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகிறது.
நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருடன் ஒகேனக்கல் தண்ணீரில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகிறது.

நடிகர் விக்ரம் தங்கலான் படக்குழுவினருடன் ஒகேனக்கல் தண்ணீரில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகிறது.

நடிகர் விக்ரம் நடிப்பில், இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இதில் விக்ரமிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து படத்தை தயாரித்து வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Aavesham OTT: ரூ. 150 கோடி வசூல் செய்த ஆவேஷம்.. ஓடிடியில் எப்போது ஸ்ட்ரீமிங்கிற்கு கிடைக்கும்?

Archana Bigg Boss: என் ஹீரோ.. இறுதியாக சீரியல் நடிகருடன் காதலில் விழுந்த அர்ச்சனா

Karthigai Deepam: கார்த்திக்,தீபாவின் சாந்தி முகூர்த்தம்!அபிராமியின் சர்ப்ரைஸ் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்

20 Years Of Perazhagan: 2 ஜோடிகளின் காதல்.. மாற்றுத்திறனாளியாக நடித்த சூர்யா..மறுக்கப்பட்ட தேசிய விருது - பேரழகனின் கதை

இதில் பார்வதி, பசுபதி, ஹரிகிருஷ்ணன் அன்புதுரை உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். படத்திற்கான முதல் கிளிம்பஸ் வீடியோ கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

அது படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. விரைவில் படத்தின் முதல் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தங்கலான் படத்தின் படப்பிடிப்பு தர்மபுரியில் உள்ள ஓசூரில் நடைபெற்று வருகிறது. இதில் விக்ரம், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினருடன் கலந்து கொண்டுளார்.

இந்நிலையில் விக்ரம், பா.ரஞ்சித் உள்ளிட்ட படக்குழுவினர்கள் ஒகேனக்கல் அருவியில் ஜாலியாக குளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

இது குறித்து விக்ரம் வெளியிட்ட பதிவில், “இன்று ஒகேனக்கல் அருகில் #\Thangalaan படப்பிடிப்பு.கடினமாக இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. தண்ணீர் வா வா என்று அழைத்தது.

‘Pack-up’ என்று கேட்டதும் ஒரே குதி..தண்ணீரில். என் நண்பர்களை விடுவேனா என்ன?! அய்யோ வேண்டாம் என்று பதறிய சிலர் கடைசியல் தண்ணீரை விட்டு வர மறுத்துதான் மிச்சம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.