தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  20 Years Of Perazhagan: 2 ஜோடிகளின் காதல்.. மாற்றுத்திறனாளியாக நடித்த சூர்யா..மறுக்கப்பட்ட தேசிய விருது - பேரழகனின் கதை

20 Years Of Perazhagan: 2 ஜோடிகளின் காதல்.. மாற்றுத்திறனாளியாக நடித்த சூர்யா..மறுக்கப்பட்ட தேசிய விருது - பேரழகனின் கதை

Marimuthu M HT Tamil

May 07, 2024, 07:39 AM IST

20 Years Of Perazhagan: பேரழகன்(Perazhagan) திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.
20 Years Of Perazhagan: பேரழகன்(Perazhagan) திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

20 Years Of Perazhagan: பேரழகன்(Perazhagan) திரைப்படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.

20 Years Of Perazhagan: ஏ.வி.எம் தயாரிப்பில், இயக்குநர் சசி சங்கர் இயக்கத்தில், யுவன் சங்கர் ராஜா இசையில், சூர்யா மற்றும் ஜோதிகா ஆகியோர் இரட்டை வேடங்களில் நடித்து, 2004ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி வெளியான திரைப்படம், பேரழகன்(Perazhagan). இப்படத்தில் விவேக், மனோரமா, மனோ பாலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்ததற்காக, சூர்யா சிறந்த நடிகருக்கான ஃபிலிம் பேர் விருதை வென்றார். ஜோதிகா, தமிழ்நாடு அரசின் மாநில விருதினை வென்றார். படம் வெளியாகி 20ஆண்டுகள் ஆகும் நிலையில் இப்படம் குறித்து பேச எண்ணற்ற விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பேசலாம்.

ட்ரெண்டிங் செய்திகள்

KamalHaasan: ‘சென்னை சொந்தம்.. இந்தியன் 2 அப்படி இருக்கும்.. தோனியிட்ட பிடிச்ச விஷயம் இது..’: கமல்ஹாசன் சொன்ன சீக்ரெட்

Actress Husband Also Died: தெலுங்கு நடிகை பவித்ரா ஜெயராம் உயிரிழந்த சோகத்தில் கணவரும் நடிகருமான சந்திரகாந்த் அகால மரணம்!

Kavin In Vetrimaaran Film: ஆஹா..வெற்றிமாறன் தயாரிக்க.. ஆண்ட்ரியா நாயகியாக நடிக்க.. பெரிய ஹீரோவான கவின்!

Siddharth: ‘சித்தா’ கொடுத்த பம்பர் ஹிட்; சிவகார்த்தியேனின் நெருக்கமானவருக்கு டேட் கொடுத்த சித்தார்த்! - அறிவிப்பு உள்ளே!

பேரழகன் திரைப்படத்தின் கதை என்ன?: பேரழகன் திரைப்படம் 2002ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'குஞ்சிக்கோனன்' திரைப்படத்தின் மறு உருவாக்கம் ஆகும்.

இப்படத்தில் கார்த்திக் என்னும் கரடுமுரடான கல்லூரி மாணவர், தனது கிளாஸ்மேட் பிரியாவை காதலிக்கிறார். பிரியாவும் கார்த்திக்கை காதலிக்கிறார். கார்த்திக்கை போன்ற தோற்றம் கொண்ட ஆனால் முதுகில் கூன் விழுந்து காணப்படும் மாற்றுத்திறனாளி சின்னா எனும் பிரேம் குமார், தனது கிராமத்திலுள்ளவர்கள் பேச டெலிபோன் பூத் வைத்துள்ளார். தனது தோற்றத்தைப் பிறர், கிண்டல் அடிக்காமல் இருக்க, தன்னம்பிக்கையாக நடந்துகொள்கிறார். சின்னா தனது நண்பன் குழந்தைசாமி என்னும் திருமணத் தரகர் மூலம், தனது கல்யாணத்திற்கு வரன் தேடுகிறார்.

பிரியாவின் தந்தை டி.சி.பி நாயர், அவரது காதலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, கார்த்திக்கும் பிரியாவும் வீட்டைவிட்டு வெளியேற முடிவு செய்கின்றனர். இதில் திடீர் டிவிஸ்ட்டாக, டி.சி.பி.நாயரால் தாக்கப்பட்ட ரவுடி வரதன், அவரைப் பழிவாங்க நினைத்து, அவரது மகள் பிரியாவை கொன்று விடுகிறார். இறுதியாக, கார்த்திக்கின் மடியில் பிரியாவின் உயிர் பிரிகிறது. இதனைப் பார்த்த ஒரே சாட்சியாக,சின்னா இருக்கிறார். மேலும், இதனை வெளியில் சொன்னால் சின்னாவை கொன்றுவிடுவதாக வரதன் மிரட்டுகிறார்.

பிரியாவின் கொலையில் துரதிர்ஷ்டவசமாக கார்த்திக் ஜெயிலுக்குப் போகிறார். இருந்தாலும், பிரியாவின் தந்தையான டி.சி.பி.நாயரை சந்தித்து நடந்த உண்மைகளைச் சொல்கிறார், சின்னா.

இதற்கிடையே செண்பகம் என்னும் பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் சின்னாவும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். சின்னாவின் நீண்ட முயற்சிக்குப் பிறகு பார்வை பெறுகிறார், செண்பகம்.

அது பிரியாவின் கண்கள் என்பது இறுதியில் தெரியவருகிறது. ஜெயிலில் இருந்து வெளியில் வரும் கார்த்திக்குக்கும் சின்னாவுக்கும் இடையே, செண்பகம் யாருக்கு உரிமையானவர் எனப் போட்டி வருகிறது. இருந்தாலும், தன் தோற்றத்தை செண்பகம் விரும்பமாட்டாள் என்று நினைத்து, யாருக்கும் தெரியாத இடத்தில் போய் தங்குகிறார். 

இதைக்கண்டு வேதனைப்படும் நண்பன் குழந்தைசாமி, சின்னாவைக் கொண்டு வந்து, செண்பகத்தின் முன் நிறுத்துகிறார். செண்பகமும், சின்னாவை பார்வைப்பெற்றதற்குப் பின்பும், ஏற்றுக்கொள்கிறாள்.

இந்த தகவலை அறிந்த ரவுடி வரதன், சின்னாவைக் கொல்ல முயற்சிக்கிறான். ஏற்கனவே, தனது காதலி பிரியாவைக் கொன்ற கடுப்பில் இருந்த கார்த்திக், இடையில் புகுந்து வரதனை அடித்துக் கொல்கிறார். மேலும் செண்பகம் மற்றும் சின்னாவின் காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார். இறுதியில், செண்பகம் - சின்னாவுடன் ஜோடி சேர்கிறார். கார்த்திக் வரதனை கொன்ற வழக்கில் ஜெயிலுக்குச் செல்கிறார்.

நடித்தவர்களின் விவரம்:

இப்படத்தில் கார்த்திக் மற்றும் சின்னா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யாவும், செண்பகம் மற்றும் பிரியா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களில் ஜோதிகாவும் நடித்திருந்தனர். 

குழந்தைசாமியாக விவேக்கும், பிரியாவின் தந்தை டி.சி.பி ஆக தேவனும் நடித்து இருந்தனர். சின்னாவின் பாட்டியாக மனோரமாவும்; பிரியாவின் பாட்டியாக சுகுமாரியும் நடித்துள்ளனர். இப்படத்தில் ’அம்புலி மாமா’ என்னும் பாடலில், சின்னாவின் மனைவி கேரக்டரில் மாளவிகா சிறப்புத்தோற்றத்தில் நடித்திருப்பார்.

இப்படத்துக்குண்டான இசையினை யுவன் சங்கர் ராஜா அமைத்துள்ளார். அதில் அம்புலி மாமா என்னும் பாடல் பலரால் கவனம் பெற்றது.

இப்படம் ரீமேக் படம் என்பதால் நடிகர் சூர்யாவுக்கு, தேசிய விருது மறுக்கப்பட்டது. ஆனால், இப்படத்தின் மூலம் ஒரு தனித்துவமான நடிகராக உருவெடுத்தார், சூர்யா. 

’பேரழகன்’ படம் வெளியாகி 20 ஆண்டுகளைத் தொட்டாலும், இப்படம் இன்று தொலைக்காட்சியில் போட்டாலும் ரசிக்கும்படியாக இருக்கும்!

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி