Vadivukkarasi: ‘சிவா உங்கிட்ட வாய்ப்பு கேட்டதுக்கு நீ.. அட போப்பா..’ - ஓப்பனாக பேசிய வடிவுக்கரசி
May 24, 2024, 02:18 PM IST
Vadivukkarasi: அது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அதனால் படப்பிடிப்பிற்கு சென்ற உடனே இயக்குநருக்கு நன்றி கூறினேன். அந்தப்படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இருக்கிறார்கள் - ஓப்பனாக பேசிய வடிவுக்கரசி!
Vadivukkarasi: வெற்றிமாறன் எழுதியிருக்கும் கதையில், நடிகர் சூரி நடித்திருக்கும் திரைப்படம் ‘கருடன்’. இந்தப் படத்தை ‘எதிர் நீச்சல்’, ‘காக்கிச் சட்டை’, ‘கொடி’, ‘பட்டாசு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கி இருக்கிறார்.
இந்தப்படத்தில் அவருடன், நடிகர்கள் சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தன், ஷிவதா, ரோஷினி ஹரிபிரியன், சமுத்திரக்கனி, மைம் கோபி, ஆர்.வி.உதயகுமார், வடிவுக்கரசி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்தப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது.
சிவகார்த்திகேயனோடு நடிக்க வில்லை
நிகழ்ச்சியில் நடிகை வடிவுக்கரசி பேசும் போது, “மேடையில் உட்கார்ந்து இருக்கும் அனைவரும் என்னுடைய குழந்தைகள்தான். கொஞ்சம் தாமதமாக வந்திருந்தால் கூட, என்னுடைய பிள்ளைகளை பார்த்திருக்க முடியாது. சிவகார்த்திகேயனோடுதான் நான் இன்னும் நடிக்கவில்லை. சூரிக்குள் இருக்கக்கூடிய நடிகரை நமக்கு கண்டுபிடித்துக்கொடுத்த வெற்றிமாறனுக்கு, நான் இந்த இடத்தில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
கருடன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்னதாகதான், நான் இந்தப்படத்தில் நடிக்க கமிட் செய்யப்பட்டேன். அப்போதே நினைத்தேன். நாம் யாரோ ஒருவருக்கு மாற்றாக நடிக்கப்போகிறோம் என்று. இருந்தாலும் பராவாயில்லை, நடிக்கலாம் என்று சொல்லி கிளம்பிச்சென்றேன். இப்போதுள்ள இளம் நடிகர்கள், இயக்குநர்கள் எங்களை போன்ற நடிகர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள்.
மேக்கப் கிடையாது - வாய்ப்புக்கேட்டு அலுத்து விட்டது
அது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அதனால் படப்பிடிப்பிற்கு சென்ற உடனே இயக்குநருக்கு நன்றி கூறினேன். அந்தப்படத்தில் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி ஆகிய இருவரும் இருக்கிறார்கள் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. எனக்கு அது மிகவும் சந்தோஷமாக இருந்தது. டைரக்டர் மேக்கப் கிடையாது என்றார். அப்படி சொன்ன உடனேயே எனக்கு பெருநிம்மதியாக இருந்தது.
இந்தப்படம் நடித்துக்கொண்டிருக்கும் போது, ஒரு நாள் விடுதலை திரைப்படத்தை ஜீ தமிழ் சேனலில் பார்த்தேன். அதை பார்த்த உடன், அதில் நடித்திருப்பது சூரியா என்று அவ்வளவு ஆச்சரியமாக இருந்தது. நான் தப்பாக பார்க்கிறோமோ என்று சொல்லி, மீண்டும் அருகில் சென்று பார்த்தேன். அடுத்த நாள் அவரை பார்த்த உடன் நான் அவரை கட்டிப்பிடித்துக்கொண்டேன்.
சமாதானம் செய்தார்
வெற்றிமாறனிடம், அவர்தான் இந்த கேரக்டருக்கு பொருந்துவார் என்று எப்படி தோன்றியது என்று கேட்டேன். இந்தப்படத்தில் நான் அவ்வளவு சந்தோஷமாக நடித்தேன். இதே போல வரும் காலத்தில் சிவகார்த்திகேயனுடன் நடிப்பேன் என்று எதிர்பார்க்கிறேன். எனக்கு அவரிடம் சொல்லி, சொல்லி.. வாய்ப்பு கேட்டு, கேட்டு... அட போப்பா என்று ஆகி விட்டது என்றார்.
இதனையடுத்து எழுந்து சென்ற சிவகார்த்திகேயென், அவரை சமாதானம் செய்தார். மேலும் பேசிய அவர் விஜய்சேதுபதியோடு இடம், பொருள், ஏவல் திரைப்படத்தில் நடித்த போது எனக்கு ஸ்பெஷலாக மட்டன் பிரியாணி வாங்கி தந்தார். அவன் மிகவும் நல்ல பையன் என்றார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
டாபிக்ஸ்