Director Vetrimaaran: வட சென்னை 2 பற்றி தெரியாது! வாடிவாசல் பட வேலையை செய்கிறேன் - வெற்றிமாறன் பகிர்ந்த அப்டேட்-director vetrimaaran shares on vada chennai 2 and vaadivasal movie update - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Vetrimaaran: வட சென்னை 2 பற்றி தெரியாது! வாடிவாசல் பட வேலையை செய்கிறேன் - வெற்றிமாறன் பகிர்ந்த அப்டேட்

Director Vetrimaaran: வட சென்னை 2 பற்றி தெரியாது! வாடிவாசல் பட வேலையை செய்கிறேன் - வெற்றிமாறன் பகிர்ந்த அப்டேட்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 13, 2024 06:40 PM IST

தனுஷின் வட சென்னை 2, சூர்யாவின் வாடிவாசல், விடுதலை 2 ஆகிய படங்கள் குறித்த அப்டேட்டை இயக்குநர் வெற்றிமாறன் பகிர்ந்துள்ளார். வாடிவாசல் படம் குறித்து உலா வந்த வதந்தித்து முற்றுப்புள்ளியும் வைத்துள்ளார்.

இயக்குநர் வெற்றிமாறன்
இயக்குநர் வெற்றிமாறன்

வாடிவாசல் அப்டேட்

இதுகுறித்து இயக்குநர் வெற்றி மாறன் கூறியதாவது, "வட சென்னை 2 படம் பற்றி இப்போதைக்கு எனக்கு தெரியாது. நான் எடுத்து முடித்திருக்கும் விடுதலை இரண்டாம் பாகம் கூட எப்போது ரிலீஸ் செய்யப்படும் என தெரியாது. அடுத்து வாடிவாசல் படத்துக்காக பணியாற்ற இருக்கிறேன். அந்த படத்துக்கு அடுத்து தான் என்ன என்பது தெரியவரும்" என்றார்.

வாடிவாசல் பற்றி தயாரிப்பாளர் தாணு

வாடிவாசல் படம் குறித்து அதன் தயாரிப்பாளர் தாணு ஏற்கனவே இந்தியா டூடே ஊடகத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், "வாடிவாசல் படத்துக்காக மிக பெரிய திட்டம் உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த படத்துக்காக கவனம் செலுத்தி வருகிறோம். முன் தயாரிப்பு பணிகளே மிக பெரிய அளவில் நடந்துள்ளன. படம் குறித்த சில அறவிப்புகளை எதிர் வரும் நாள்களில் வெளியிடுவோம்" என்று தெரிவித்திருந்தார்.

அதன்படி படத்தின் அறிமுக விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு விளையாட்டை பற்றிய படமாக வாடிவாசல் உருவாக இருக்கும் நிலையில், இதற்காகவே ஜல்லிக்கட்டு வீரர்களிடம் ஏறுதழுவதல் பயிற்சியை நடிகர் சூர்யா மேற்கொண்டார்.

அந்த பயிற்சியின் காட்சிகள் அடங்கியதாக, இந்த அறிமுக விடியோ அமைந்திருந்தது. வாடிவாசல் படத்தில் ஆண்ட்ரியா, இயக்குநர் அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

கைவிடப்பட்ட வாடிவாசல்

வாடிவாசல் அறிவிப்புக்கு பின்னர் சூர்யாவின் அடுத்த படங்களாக கங்குவா, புறநானுாறு, கார்த்திக் சுப்பராஜ் புதிய படம் என அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகின. ஆனால் வாடிவாசல் குறித்து எந்த தகவலும் வெளியாகாத நிலையில் படம் கைவிடப்பட்டாத செய்திகள் வெளியாகின.

தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இயக்குநர் வெற்றிமாறன் கூறியிருக்கும் தகவல் அமைந்துள்ளது.

அதேசமயம் வடசென்னை 2 குறித்த அவர் கூறியிப்பது ரசிகர்கள் மத்தியல் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த படத்தின் இரண்டாம் பாகம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சூர்யாவின் அடுத்தபடம்

சூர்யா நடிப்பில் கடைசியாக எட்டுத்திக்கும் துணிந்தவம் படம் கடந்த 2022இல் வெளியானது. இதே ஆண்டில் வெளியான விக்ரம், ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் ஆகிய படங்களில் சூர்யா கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

இதைத்தொடர்ந்து 2023இல் சூர்யா நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. இந்த ஆண்டில் சூர்யா நடிப்பில் பேண்டஸி ஆக்‌ஷன் படமாக உருவாகி வரும் கங்குவா வெளியாக இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாக இருக்கும் சூர்யா படமாக இருப்பதால் ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.