தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vaazhai Ott Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை..ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை! ஓடிடி ரிலீஸ் எப்போது?

Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை..ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை! ஓடிடி ரிலீஸ் எப்போது?

Sep 12, 2024, 02:30 PM IST

google News
Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் இந்த ஆண்டில் வசூலை குவித்து வெற்றி படமாக மாறியுள்ளது.
Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் இந்த ஆண்டில் வசூலை குவித்து வெற்றி படமாக மாறியுள்ளது.

Vaazhai OTT Release: பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழை பொழிந்து, ரசிகர்களை பெரிதும் கவர்ந்த வாழை திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் இந்த ஆண்டில் வசூலை குவித்து வெற்றி படமாக மாறியுள்ளது.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் என இதுவரை இயக்கிய மூன்று படங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநராக இருப்பவர் மாரி செல்வராஜ். இந்த படங்களை தொடர்ந்து புதுமுகங்களை வைத்து அவர் இயக்கியிருக்கும் படம் வாழை.

கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததுடன், விமர்சக ரீதியாக பாராட்டை பெற்றது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களும் இந்த படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

வாழை தார் தூக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கையை மையப்படுத்தி வெளியாகியிருக்கும் இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜே. சதீஷ் குமார் ஆகியோர் மட்டுமே தெரிந்த நடிகர்கள் நடித்துள்ளார்கள். சந்தோஷ் நாரயணன் இசையில் படத்தின் பாடல்களும் வரவேற்பை பெற்றுள்ளன.

மாரி செல்வராஜ் வலுவான திரைக்கதை, எதார்த்த காட்சி அமைப்புகள் வாழை படத்தை அனைத்து தரப்பினரையும் பார்க்க தூண்டியது. ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிய இந்த படம் ரூ. 35 கோடிக்கு மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூலை ஈட்டியது.

வாழை ஓடிடி ரிலீஸ்

எந்த பெரிய நடிகர்கள் இல்லாத போதிலும் ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமாக மாறிய வாழை ஓடிடியில் வெளியாக இருக்கிறது. அதன்படி வாழை திரைப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் உருவாக இருக்கிறது. முதலில் இந்த படம் தமிழில் மட்டும் வெளியாகும் என தெரிகிறது. மற்ற மொழிகளில் படம் பின்னர் வெளியிடப்படும் என கூறப்படுகிறது.

வாழைக்கு கிடைத்த பாராட்டு

வாழை படம் வெளியாவதற்கு முன்பு பிரபலங்களுக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இதை பார்த்தவர்கள் பலரும் படத்தை பாராட்டியுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர்கள் ஷங்கர், மணிரத்னம், பாலா, நடிகர்கள் விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன் உள்பட பலரும் படத்தை மனதாரா பாராட்டினர். இதனால் படத்துக்கு நல்ல வரவேற்பும் கிடைத்ததோடு, வசூலையும் வாரி குவித்துள்ளது.

வாழை கதை சர்ச்சை

வாழை படத்தின் கதை தன்னுடைய சிறுகதையை ஒட்டி அமைந்திருப்பதாக எழுத்தாளர் சோ தர்மன் பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில், “வாழை படத்தை பார்த்த என்னுடைய நண்பர்கள் என்னுடைய வாழையடி சிறுகதையில் இருக்கும் விஷயங்கள் அப்படியே வாழை படத்தில் இருப்பதாக கூறினார்கள். வாழை படத்தில் உள்ள அனைத்தையுமே நான் என்னுடைய சிறுகதையில் 10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிவிட்டேன். ஆனால், படத்தில் சினிமாவுக்காக சில விஷயங்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. என்னுடைய கதையை மாரி செல்வராஜ் படிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால், சிறுவனுடைய உழைப்பு, தரகர், கூலி உயர்வு, ரஜினி - கமல் என எல்லாமே கிட்டத்தட்ட என் சிறுகதையில் இருப்பவை அப்படியே அதில் இருக்கின்றன. ஆகையால் நான் தான் அதற்கு முழு உரிமையானவன்” என்று பேசினார்.

மாரிசெல்வராஜ் பதிலடி

இதற்கு பதிலடி கொடுத்திருக்கும் மாரிசெல்வராஜ் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில், “வாழைக்காய் சுமை தூக்கும் தொழிலாளர்களை பற்றி எழுத்தாளர் சோ தர்மன் அவர்கள் எழுதிய வாழையடி என்கிற சிறுகதையை இப்போதுதான் வாசித்தேன். நல்ல கதை… அனைவரும் வாசிக்க வேண்டும் . எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களுக்கு நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலம் வாழை திரைப்படத்துக்கு புதிய சர்ச்சை உருவாக்கியது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி