Box office Today: வாழை கொடுத்த மர்மகுத்து! - வசூலில் திண்டாடும் சூரியின் கொட்டுக்காளி! - உண்மையான வசூல் என்ன?
Box office Today: வாழை மற்றும் கொட்டுக்காளி படங்களின் வசூல் சார்ந்த விபரங்களை பார்க்கலாம்.

வாழை வசூல் எவ்வளவு?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் வாழை. சிறுவயதில் தான் சந்தித்த அனுபவங்களின் தொகுப்பை கதையாக மாற்றி, இந்தப்படத்தில் அவர் காட்சிகளாக வைத்து இருக்கிறார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருக்கும் இந்தப்படம், தற்போது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
Sacnilk தளம் வெளியிட்டு இருக்கும் தகவலின் படி, முதல் நாளில் 1.15 கோடி வசூல் செய்த வாழைத்திரைப்படம், இரண்டாவது நாளில் 2.50 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. தொடர்ந்து படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்த நிலையில், முதல் வார முடிவிலேயே 8.8கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் படம் வெளியான 11 வது நாளான நேற்றைய தினம், வாழைத்திரைப்படம் 1.15 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது. இதன் மூலம் வாழைத்திரைப்படம் மொத்தமாக இந்தியாவில் 27.5 கோடி ரூபாயும், உலகளவில் 32 கோடி ரூபாயும் வசூல் செய்திருக்கிறது.
கொட்டுக்காளி திரைப்படம்
இதற்கு போட்டியாக களமிறங்கிய கொட்டுக்காளி திரைப்படம் படம் வெளியான 11 நாளான நேற்று வெறும் 0.01 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருக்கிறது. ஆக, மொத்தமாக பார்க்கும் போது இந்தியாவில் இதுவரை கொட்டுக்காளி திரைப்படம் 1.42 கோடி ரூபாயும், உலகளவில் 1.60 கோடியும் மட்டுமே வசூல் செய்திருக்கிறது