தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தொக்கா சிக்கிய சிவசங்கரி.. நடு வீட்டில் நிற்க வைத்து ரைடு விட்ட எழில்.. கயல் இன்றைய எபிசோட்

தொக்கா சிக்கிய சிவசங்கரி.. நடு வீட்டில் நிற்க வைத்து ரைடு விட்ட எழில்.. கயல் இன்றைய எபிசோட்

Nov 02, 2024, 06:43 AM IST

google News
எழில் தீபாவளி சீர் செய்யுமாறு கேட்டதாக சிவசங்கரி மூர்த்தியிடம் கூறியதை அறிந்து எழில் அவர் அம்மாவிடம் கேள்வி எழுப்புகிறார்.
எழில் தீபாவளி சீர் செய்யுமாறு கேட்டதாக சிவசங்கரி மூர்த்தியிடம் கூறியதை அறிந்து எழில் அவர் அம்மாவிடம் கேள்வி எழுப்புகிறார்.

எழில் தீபாவளி சீர் செய்யுமாறு கேட்டதாக சிவசங்கரி மூர்த்தியிடம் கூறியதை அறிந்து எழில் அவர் அம்மாவிடம் கேள்வி எழுப்புகிறார்.

கல்யாணம், கத்தி குத்து என அனைத்து பிரச்சனைகளும் முடிந்த பின், தற்போது தான் கயல் சற்று நிம்மதியாக இருந்தார். இவரின் திருமணம் நல்லபடியாக முடிந்ததை நினைத்து கயலின் குடும்பமே சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தது.

பிரச்சனையை ஆரம்பித்து விட்ட சிவசங்கரி

அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத எழிலின் அம்மா சிவசங்கரி, என்ன பிரச்சனை செய்யலாம் என்றே யோசித்து வந்தார். அப்போது தான், எழில் தனக்கு தீபாவளி சீராக நகைகள் போட வேண்டும் என கூறியதாக, சிவசங்கரி, மூர்த்தியிடம் நேரடியாக கூறியுள்ளார்.

இதைக் கேட்ட மூர்த்தி, செய்வது அறியாது நடந்தவற்றை அவரது மனைவி தனத்திடம் கூறியுள்ளார். இதை அவர்களது குழந்தை தூங்காமல் கேட்டுக் கொண்டிருக்கிறது.

தனத்திடம் உண்மையைக் கூறும் மூர்த்தி

அந்த சமயத்தில், தலை தீபாவளிக்கு மாப்பிள்ளை நம்ம வீட்டுக்கு வந்திருக்காரு. அவருக்கு நாம ஏதாவது நகை செஞ்சி போடணும் என மூர்த்தி தனத்திடம் கூறுகிறார். இதைக்கேட்ட தனம், நம்ம மாப்பிள்ளை இதெல்லாம் எதிர்பார்க்க மாட்டாறு என நம்பிக்கையோடு தனம் சொன்னார்.

ஆனால், மூர்த்தியோ மாப்பிள்ளை தான் இதையெல்லாம் செய்ய சொன்னார் எனக் கூறி தனத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.

உஷாரான கயல்

இதையடுத்து, எழில் மூலமாக ஏதோ பிரச்சனையை உண்டு பண்ண சிவசங்கரி முடிவு செய்துவிட்டதை அறிந்த கயல், நடுவீட்டில் அனைவர் முன்னிலையிலும் வைத்து எழிலிடம் பேசுகிறார். தீபாவளிக்கு பெண் வீட்டு சைடில் இருந்து செயின் போடணும்ன்னு நீ கேட்டியா என எழிலிடம் நேரடியாகவே கேட்டிருப்பார் கயல்.

நடு வீட்டில் நிற்க வைத்து கேள்வி கேட்ட எழில்

இவற்றை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த எழிலின் அம்மா சிவசங்கரி பிரச்சனை நடக்கும் இடத்திற்கு ஓடி வந்து பார்ப்பார். அப்போது, எழில், அவரது அம்மாவிடம் நான் தீபாவளிக்கு நகை எதிர்பார்க்கிறேன்னு நீங்க மூர்த்திகிட்ட சொன்னீங்களா எனக் கேட்கிறார். இதையடுத்து எழிலுக்கும் அவரது அம்மாவிற்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது.

இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

ரொமான்ஸ் மோடில் எழில்

முன்னதாக, வெளியான கயல் எபிசோடில், எழில் தலைக்கு எண்ணெய் வைக்க கயலும், அவரது உடனபிறப்புகளும் முயற்சிக்கும் குறுப்புத்தனமான காட்சிகள் இடம்பிடித்துள்ளன. கயலிடமும், அவளது உடன்பிறப்புகளுடனும் சிக்கிக் கொள்ளாமல் அங்கும் இங்குமாக ஓடுகிறார் எழில். இறுதியில் கால் உடைந்தது போல் கதறும் கயலை பார்த்து பதட்டமாக அவள் அருகே வருகிறான் எழில். அப்போது அவனை பிடித்துக்கொள்ளும் கயல், இது ஆக்டிங் என கூற, மற்றவர்களும் எழிலை தப்பிக்க விடாமல் இறுக்கி பிடித்து கொள்கிறார்கள். ஒரு வழியாக எழில் தலையில் கயல் எண்ணெய் வைப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை