கயல் - எழில் இடையே பூக்கும் ரெமான்ஸ்..மூர்த்தி, எழிலிடம் டபுள் கேம் ஆடும் சிவசங்கரி! இன்று நடக்கப்போவது என்ன?
கயல் தீபாவளி ஸ்பெஷல் ப்ரிவியூ விடியோ வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், இன்றைய எபிசோட் அப்டேட்டாக கயல் - எழில் இடையே பூக்கும் ரெமான்ஸ், மூர்த்தி, எழிலிடம் டபுள் கேம் ஆடும் சிவசங்கரி என ப்ரோமில் காட்சிகள் இடம்பிடித்துள்ளன

கயல் சீரியலில் இருந்து இன்று வெளியான ப்ரோமோவில், கயல் இல்லாமல் அவரது குடும்பம் எவ்வளவு கஷ்டப்படும் என்று எழிலிடம் பரிதாபத்தை வெளிப்படுத்தும் விதமார பேசுகிறார் சிவசங்கரி. இப்படி பேசிவிட்டு அடுத்த காட்சியில் கயல் அண்ணன் மூர்த்த தங்கைக்காக எதுவும் செய்ய தயார் என சிவசங்கரியிடம் சொல்கிறான். அதற்கு, கல்யாணத்திலேயே உங்கள் யோக்யதை தெரிந்து விட்டதே என சிவசங்கரி கடிந்து கொள்கிறாள்.
ஒரே நேரத்தில் மகனிடம் பரிவு காட்டுவது போலவும், கயல் குடும்பத்தாரிடம் எரிந்து விழுந்து டபுள் கேம் ஆடுகிறாள் சிவசங்கரி. இதற்கிடையே தன்னை கட்டிப்பிடிக்க வரும் எழிலை கண்டு வெட்கத்தில் யாராவது பார்த்துவிடுவார்கள் என கயல் சொல்ல, இருவருக்கு இடையே ரெமான்ஸ் பூக்கிறது. இப்படியாக இன்று எபிசோட் காட்சிகள் இடம்பெற இருக்கிறது.
கயல் தீபாவளி ஸ்பெஷல்
கூடுதலாக கயல் ப்ரிவியூ விடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் தீபாவளி கொண்டாட்டம் களைகட்டி கொண்டிருக்க, எழில் தலைக்கு எண்ணெய் வைக்க கயலும், அவரது உடனபிறப்புகளும் முயற்சிக்கும் குறுப்புத்தனமான காட்சிகள் இடம்பிடித்துள்ளன.