தகராறில் முடிந்த தலை தீபாவளி.. பழிக்கு ஆளான எழில்.. சிவசங்கரியின் பக்கா பிளான்.. கயல் இன்றைய எபிசோட்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  தகராறில் முடிந்த தலை தீபாவளி.. பழிக்கு ஆளான எழில்.. சிவசங்கரியின் பக்கா பிளான்.. கயல் இன்றைய எபிசோட்

தகராறில் முடிந்த தலை தீபாவளி.. பழிக்கு ஆளான எழில்.. சிவசங்கரியின் பக்கா பிளான்.. கயல் இன்றைய எபிசோட்

Malavica Natarajan HT Tamil
Nov 01, 2024 12:25 PM IST

தலை தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாரான எழில், மாமியார் வீட்டில் தீபாவளி சீர் கேட்டதாக அவரது அம்மா கொளுத்திப்போட கொண்டாட்ட வீடே கலவரமாகியுள்ளது.

தகராறில் முடிந்த தலை தீபாவளி.. பழிக்கு ஆளான எழில்.. சிவசங்கரியின் பக்கா பிளான்.. கயல் இன்றைய எபிசோட்
தகராறில் முடிந்த தலை தீபாவளி.. பழிக்கு ஆளான எழில்.. சிவசங்கரியின் பக்கா பிளான்.. கயல் இன்றைய எபிசோட்

அத்தையை எச்சரிக்கும் கயல்

இதை அறிந்த கயல், கல்யாண கோலத்திலேயே மருத்துவமனைக்கு குடும்பத்தினருடன் சென்று பதைபதைக்கிறாள். அதே சமயத்தில், அண்ணன் மூர்த்தியின் இந்த நிலைக்கு தனது மாமியார் சிவசங்கரி காரணமாக இருக்கலாம் என நினைத்து அவரையும் எச்சரித்து வந்தார்.

இந்நிலையில், கயல் திருமணமான இந்த சமயத்தில் தான் அவருக்கு தந்தை ஸ்தானத்தில் உடனிருக்க வேண்டும் எனக் கூறி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வந்தார் மூர்த்தி. இதை தனது வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்ட சிவசங்கரி, கயல் குடும்பத்தாரிடம், கல்யாண சீராகவோ, தீபாவளி சீராகவோ கயல் குடும்பத்தினர் இதுவரை எதுவும் செய்யவில்லை எனக் கூறி கலவரத்தை கிளப்பியுள்ளார். இதனால், வீடே இரண்டாக மாறும் அளவு பிரச்சனை உருவாக இருக்கிறது என சிவசங்கரி நினைத்துள்ளார்.

கலைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்

இந்நிலையில், திருமணம் முடிந்த கையோடு கயலும் எழிலும் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தயாராகினர். காலை எழுந்து எழிலுக்கு தலையில் எண்ணெய் வைப்பது, குளிக்க வைப்பது, புத்தாடை உடுத்தி கொண்டாட்டத்திற்கு தயாராவது என வீடே விழாக்கோலம் பூண்டது.

கலவரத்தை தூண்டிய சிவசங்கரி

இந்த சமயத்தில் சிவசங்கரி, கயல் குடும்பத்தினரிடம் எழில் தீபாவளி சீர் செய்யுமாறு கேட்டதாக கூறியுள்ளார். இதைக்கேட்ட கயலின் அண்ணி தனத்திற்கு ஆத்திரம் தாங்க முடியாமல் போனது. தான் எவ்வளவு செய்தாலும் சிலருக்கு அது போதுமானதாக இருப்பதில்லை என முகத்தை திருப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார். தனது அண்ணியின் இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம் என புரியாமலே கயல் தவித்துவரும் நிலையில், கயலுக்கும் எழிலுக்கும் அவரது அண்ணன் மூர்த்தி தீபாவளி சீராக தங்கச் செயினும், மோதிரமும் அணிவிக்கிறார். இந்த நடைமுறைகளை எல்லாம் ஏன் இன்னமும் செய்கிறீர்கள் என எழல் கேட்க, நாங்கள் எவ்வளவு செய்தாலும் சிலருக்கு அது போதவில்லையே என கோபம் கொள்கிறார். இதையடுத்து, தன்னை சுற்றி நடப்பது என்ன என்பதை ஓரளவுக்கு கயலால் புரிந்துகொள்ள முடிந்தது.

எழல் மீது விழுந்த பழி

அதற்குள் தீபாவளி எழில் தான், தங்களிடம் தீபாவளி சீர் கேட்டதாக சபையிலேயே போட்டு உடைக்க, எழில் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். தான் அதுபோன்று கூறவே இல்லை. என் மீது வீண் பழி சுமத்துகிறார்கள் என எழில் முறையிட்டுள்ளார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிவசங்கரி, எழில் வீட்டில் உள்ளோரிடம் சண்டையிட்டார்.

இந்நிலையில், திபாவளி சீரின் பெயரை வைத்து வீட்டில் நடந்த குழப்பத்திற்கு யார் காரணம், தனது அத்தை சிவசங்கரி இந்த வாய்ப்பை பயன்படுத்தி என்ன செய்தார், அவரின் கொடூர செயல்களை தடுத்து தன் குடும்பத்தின் மீது விழுந்த பழியை நீக்குவது எப்படி என கயல் சிந்தித்து வருகிறார். இதுகுறித்த ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

ரொமான்ஸ் மோடில் எழில்

முன்னதாக, வெளியான கயல் எபிசோடில், எழில் தலைக்கு எண்ணெய் வைக்க கயலும், அவரது உடனபிறப்புகளும் முயற்சிக்கும் குறுப்புத்தனமான காட்சிகள் இடம்பிடித்துள்ளன. கயலிடமும், அவளது உடன்பிறப்புகளுடனும் சிக்கிக் கொள்ளாமல் அங்கும் இங்குமாக ஓடுகிறார் எழில். இறுதியில் கால் உடைந்தது போல் கதறும் கயலை பார்த்து பதட்டமாக அவள் அருகே வருகிறான் எழில். அப்போது அவனை பிடித்துக்கொள்ளும் கயல், இது ஆக்டிங் என கூற, மற்றவர்களும் எழிலை தப்பிக்க விடாமல் இறுக்கி பிடித்து கொள்கிறார்கள். ஒரு வழியாக எழில் தலையில் கயல் எண்ணெய் வைப்பது போல் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.