தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அன்பு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட நினைக்கும் ஆனந்தி.. ஆசையை நிறைவேற்றுவாரா அன்பு? சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

அன்பு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட நினைக்கும் ஆனந்தி.. ஆசையை நிறைவேற்றுவாரா அன்பு? சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

Nov 01, 2024, 02:11 PM IST

google News
ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய ஆனந்தி, அன்பு குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆசைப்படுவதாக அவரது தங்கையிடம் தனது ஆசையை ஆனந்தியிடம் கூறியுள்ளார்.
ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய ஆனந்தி, அன்பு குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆசைப்படுவதாக அவரது தங்கையிடம் தனது ஆசையை ஆனந்தியிடம் கூறியுள்ளார்.

ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய ஆனந்தி, அன்பு குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆசைப்படுவதாக அவரது தங்கையிடம் தனது ஆசையை ஆனந்தியிடம் கூறியுள்ளார்.

ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனந்தி, அன்புவின் வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அன்புவின் அம்மாவும் தங்கையும் வெளியூரில் இருந்து திரும்பி வந்ததால், வீட்டில் ஆனந்தி இருப்பதை கூற முடியாமல், ஆனந்தியையும் வெளியில் அனுப்ப முடியாமல் அன்பு தவித்து வந்தார்.

போனால் சிக்கும் அன்பு

இதற்கிடையில், ஆனந்தியை மகேஷிடம் அன்பு அழைத்துச் சென்ற சமயத்தில், ஆனந்தியின் அம்மா அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அன்புவும் ஆனந்தியும் வீட்டிலேயே போனை வைத்துவிட்டு சென்றதால், அது அடித்துக் கொண்டே இருந்தது. இதனால், போன் சத்தம் கேட்டு அன்புவின் அறைக்கு வந்த அவரது அம்மா திகைத்து போனார். இது அன்புவின் போன் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், இது யாருடைய போன், எதற்காக அன்பு ரூமில் இருக்கிறது என சந்தேகதத்தில் இருக்கிறார்.

கார்மெண்ட்ஸில் பிரச்சனை

இந்நிலையில், மகேஷ் கார்மென்ட்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தர அறிவுறுத்திய நிலையில், கம்பெனி நஷ்டத்தில் செல்வதால் ஆயிரம் ரூபாய் மட்டும் போனஸ் தர அறிவுறுத்தியதாகக் கூறி திட்டமிட்டே சதி செய்தனர்.

இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தி, கம்பெனி எப்போது லாபத்தில் செல்கிறதோ அப்போதே நாங்கள் போனஸ் வாங்கிக் கொள்கிறோம் என அதிரடியாகக் கூறினார். இதை மற்ற பணியாளர்களும் ஆதரித்ததால், அனைவரும் போனஸ் வாங்க மறுத்தனர்.

இதை அறிந்து கொண்ட மகேஷ், ஆனந்தி முன்னிலையில், அனைத்து பணியாளர்களையும் அழைத்து தீபாவளி போனஸ் குறித்து பேசியிருப்பார்.

ஆனந்திக்கு புடவை பரிசளிக்கும் மகேஷ்

இந்நிலையில், அந்த பஞ்சாயத்தை எல்லாம் தீர்த்த மகேஷ், தனது காதலி ஆனந்திக்காக புதிய சேலை ஒன்றை வாங்கித் தருவார். அதை அணிந்து வந்த ஆனந்தியை மகேஷ் பார்த்து ரசித்துக் கொண்டிருப்பார். அதுமட்டுமில்லாமல், ஆனந்தியுடன் தன்னை சேர்த்து போட்டை ஒன்று எடுத்துத் தருமாறு மகேஷ் அன்புவிடம் கேட்பார். அவரும் வேறு வழி இல்லாமல் போட்டோ எடுத்துத் தருவார்.

இவை அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த அன்புவிற்கு அவர் மேலே கோபம் வரும். காரணம் ஆனந்தி மேல் வைத்திருக்கும் காதல் ஒருபுறமும், மகேஷிற்கு அளித்த வாக்கு ஒருபுறமும் அவரை நிம்மதி இல்லாமல் தவிக்க விடுகிறது.

ஆனந்திக்காக ஏங்கும் அன்பு

அதுமட்டுமல்லாமல், வீட்டில் உள்ள அனைவருக்கும் அன்பு தீபாவளிக்கு புது ஆடைகளை வாங்கி வருவார். அதை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கும் அன்புவின் அம்மா, ஆனந்திக்காக எடுத்த புடவையையும் பார்ப்பார்.

இந்தப் புடவை மிகவும் அழகாக இருக்கிறது. யாருக்கு வாங்கினாய் என கேட்கும் போது, அன்பு ரூமில் இருக்கும் ஆனந்தியை நோக்கி கை காட்டுவார். இதனால், நாம் சிக்கிக் கொள்ளப் போகிறோமோ என ஆனந்தி அச்சப்படுவார்.

ஆனந்தியின் ஆசை

மேலும், ஆனந்தி, அன்பு, அன்புவின் தங்கை ஆகிய 3 பேரும் இரவு மாடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது, தனக்கு உங்கள் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட வேண்டும் என்ற ஆசை இருப்பதாக தெரிவித்திருப்பார். இதைக்கேட்ட அன்புவின் தங்கை அதற்கான ஏற்பாட்டை செய்வதாக கூறியிருப்பார்.

அன்பு ஆனந்திக்காக எடுத்த புடவையை கொடுப்பாரா? ஆனந்தி ஆசைப்பட்டபடி அன்புவின் குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாடினாரா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி