பேன்ட் ஷர்ட் போட்ட ஆனந்தி.. ரொமான்டிக்காக பேசும் மகேஷ்.. இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பேன்ட் ஷர்ட் போட்ட ஆனந்தி.. ரொமான்டிக்காக பேசும் மகேஷ்.. இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல்

பேன்ட் ஷர்ட் போட்ட ஆனந்தி.. ரொமான்டிக்காக பேசும் மகேஷ்.. இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல்

Malavica Natarajan HT Tamil
Updated Oct 24, 2024 12:08 PM IST

ஆனந்தியை முதல்முறை பேன்ட் ஷர்ட்டில் கண்ட மகேஷ் அவரை வைத்த கண் வாங்காமல் பார்த்துடன் அவரிடம் ரொமான்டிக்காக பேசியுள்ளார்.

பேன்ட் ஷர்ட் போட்ட ஆனந்தி.. ரொமான்டிக்காக பேசும் மகேஷ்.. இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல்
பேன்ட் ஷர்ட் போட்ட ஆனந்தி.. ரொமான்டிக்காக பேசும் மகேஷ்.. இன்றைய சிங்கப்பெண்ணே சீரியல்

ஆனந்தியை பாசமாக கவனிக்கும் அன்பு

அங்கு ஆனந்திக்கு பாசமாக தோசை சுட்டுக் கொடுத்து பார்த்துக் கொள்கிறார் அன்பு. மேலும், ஆனந்தியை அவரது ரூமிலேயே தங்க வைத்து தேவையானவற்றை கவனித்து கொண்டார்.

இதற்கிடையில் வெளியூர் சென்றிருந்த அன்புவின் அம்மாவும் தங்கையும் உடனே திரும்பிவர செய்வதறியாது முழிக்கிறார் அன்பு. இந்நிலையில் அம்மாவிற்கு தெரியாமல் ஆனந்தியை எப்படி வீட்டில் வைத்து சமாளிக்கப் போகிறோம் என அன்பு நினைக்கிறார்.

அன்புவிற்காக சமைக்கும் ஆனந்தி

இந்த சமயத்தில் தான் ஆனந்தி, பசியோடு உள்ள அன்புவிற்கு அவல் செய்துகொடுத்து சாப்பிட வைக்கிறார். அந்த சமயத்தில் அவரது அம்மா வெளியே வர சாப்பாட்டு மேஜைக்கு அடியில் ஒளிந்து கொள்கிறார்.

பின், அடுத்த நாள் காலையில், ஆனந்தியிடம் தன்னுடைய உடைகளை கொடுத்து போட்டுக் கொள்ள சொல்கிறார். அப்போது தான் அவரின் அம்மாவிடமிருந்து தப்ப முடியும் எனவும் கூறினார்.

இதையடுத்து, அன்புவும் ஆனந்தியும் எப்படியோ வீட்டிலுள்ள அம்மாவை ஏமாற்றிவிட்டு வெளியில் கிளம்பினர்.

ஆனந்தியை மாடர்ன் உடையில் பார்த்த மகேஷ்

பின் அவர்கள் இருவரும் மகேஷை சந்தித்தனர். அப்போது தான் மகேஷ் முதன் முதலாக ஆனந்தியை பேன்ட் ஷர்ட்டில் பார்க்கிறார். தொடர்ந்து அவரை பார்த்து மகேஷ் சிரித்துக் கொண்டே இருந்ததால், ஏன் இப்படி சிரிக்கிறீர்கள். இதெல்லாம் நான் இதற்கு முன் அணிந்ததே இல்லை என தன்பக்க நியாயத்தை சொல்கிறார்.

இதையடுத்து, மகேஷ் அன்பிடம் ஏன் அவர் இந்த உடை அணிந்துள்ளார் எனக் கேட்க, வீட்டில் உள்ள அவரது அம்மாவை சமாளிக்க இப்படி செய்ததாக கூறியுள்ளார்.

ரொமான்டிக்காக பேசும் மகேஷ்

பின் அவரையே பார்த்து சிரித்துக் கொண்டிருந்ததை அறிந்த ஆனந்தி, நீங்கள் ஆண்களைப் போல் பேன்ட் ஷர்ட் அணிந்த பெண்களை பார்த்ததே இல்லையா என கேள்வி எழுப்புகிறார்.

அதற்கு, பேன்ட் ஷர்ட் போட்ட பெண்களை எல்லாம் பார்த்து போர் அடித்ததால் தான் எனக்கு தாவணி பாவாடை போட்ட உன்னா பிடித்தது என கூறிவிடுகிறார். இதைக் கேட்ட உடனே ஆனந்திக்கும் அன்புவிற்கும் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றனர்.

பின் மகேஷ் உன்னுடைய அறியாமை, உன்னுடைய பேச்சு, உன் குடும்பத்தை பிடித்தது எனக் கூறினார். பின், ஆனந்தி உங்களுக்கு பிடித்த மாதிரி தாவணி பாவாடைக்கு மாற வேண்டுமே எனக் கேட்க, அன்பு தன்னிடம் தாவணி பாவாடை இருப்பதாகக் கூறியுள்ளார்.நிலைமையை உணர்ந்த மகேஷ், அவர்களை ஹோட்டலுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார். இதற்கான ப்ரோமோவை சன் டிவி வெளியிட்டுள்ளது.

 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.