அம்மாவை முட்டாளாக்கும் அன்பு.. கரையானை வைத்து ஆனந்தி எடுக்கும் பாடம்.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
என்னைக் காப்பாற்ற உங்கள் அம்மாவை முட்டாளாக்குவது நல்லதல்ல என ஆனந்தி அன்புவிற்கு அறிவுரை கூறியுள்ளார்.

கோகிலாவைக் காப்பாற்ற முயன்று ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி அன்புவின் உதவியுடன் அவரது வீட்டில் தங்கியுள்ளார். சமீப காலமாக அன்புவின் நடவடிக்கையால் சந்தேகமடையும் அவரது அம்மா, அன்புவின் அறையில் இருந்து வேறொருவருடைய செல்போனை எடுத்ததால், மீண்டும் அன்பு மேல் சந்தேகமடைகிறார். இதுகுறித்து அன்புவிடம் பலமுறை கேட்டும் அவர் ஆனந்தியைக் காப்பாற்ற உண்மையை மறைக்கிறார்.
உண்மையை சொல்ல நினைக்கும் ஆனந்தி
இதனால், மிகுந்த கவலை அடையும் ஆனந்தி, அன்புவின் அம்மாவிடம் உண்மையை கூறி விடலாம் என நினைக்கிறார். அந்த சமயத்தில் அவர், அன்பு செய்யும் தவறுகளை எடுத்துரைக்கிறார். என்னை பிரச்சனையில் இருந்து காப்பாற்ற நீங்கள் எடுக்கும் முயற்சி எனக்கு புரிகிறது.
தொடர்ந்து பொய் சொல்லும் அன்பு
சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட நீங்கள் உங்கள் அம்மா மற்றும் தங்கச்சியிடம் அவ்வளவு பொய் சொல்கிறீர்கள். அவ்வளவு திட்டு வாங்குகிறீர்கள். அவர்களின் காலில் விழுந்து கெஞ்சுகிறீர்கள்.