தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  ஒரு பாடலுக்காக எம்.ஜி.ஆர். இவ்வளவு ரிஸ்க் எடுத்தாரா? 52 டியூன்கள் போட்டும் திருப்தி இல்லை.. கடைசியில் பாடல் செம ஹிட்!

ஒரு பாடலுக்காக எம்.ஜி.ஆர். இவ்வளவு ரிஸ்க் எடுத்தாரா? 52 டியூன்கள் போட்டும் திருப்தி இல்லை.. கடைசியில் பாடல் செம ஹிட்!

Divya Sekar HT Tamil

Sep 26, 2024, 10:29 AM IST

google News
Story of Song : எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்துவார். பாடல் யார் எழுத வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யார் பாட வேண்டும் என்பதில் எல்லாம் அவர் மிகுந்த கவனத்துடன் இருப்பார்.
Story of Song : எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்துவார். பாடல் யார் எழுத வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யார் பாட வேண்டும் என்பதில் எல்லாம் அவர் மிகுந்த கவனத்துடன் இருப்பார்.

Story of Song : எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்துவார். பாடல் யார் எழுத வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யார் பாட வேண்டும் என்பதில் எல்லாம் அவர் மிகுந்த கவனத்துடன் இருப்பார்.

நடிகராக பல பரிமாணங்களில் பெரும் வெற்றிகளை தமிழ் சினிமா வரலாற்றில் கொடுத்திருக்கிறார் எம்.ஜி.ஆர். அவரது நடிப்பில் வெளியான 'எங்க வீட்டுப் பிள்ளை' படத்தின் சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்தது 'அடிமைப்பெண்'.

தன் படங்களின் மீது ரசிகர்களின் எண்ணத்தை மாற்ற 'அடிமைப் பெண்' திரைப்படத்தின் பெரும்பாலான காட்சிகளை ஓகேனக்கல் நீர்வீழ்ச்சி, ஜெய்ப்பூர் அரண்மனை, ராஜஸ்தான் பாலைவனம், ஊட்டி என பல இடங்களில் படமாக்கினார் எம்.ஜி.ஆர்.

முதன் முதலாக எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடிய பாடல்

அடிமைப்பெண் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஆயிரம் நிலவே வா' பாடலை முதன் முதலாக எம்ஜிஆருக்காக எஸ்.பி பாலசுப்பிரமணியம் பாடியிருந்தார். இப்படத்தில் 'அம்மா என்றால் அன்பு' என்ற பாடலை ஜெயலலிதா பாடி இருந்தார்.

அதிநவீன தொழிநுட்ப வசதிகள் இல்லாத காலத்தில் படமாக்கப்பட்ட 'அடிமைப் பெண்' படத்தில் வெற்றிக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருந்ததால் 175 நாட்கள் ஓடி அந்த ஆண்டின் ஒரே வெள்ளிவிழா படமாக அசத்தியது. சென்னை நகரில் முதன்முதலாக நான்கு திரை அரங்குகளில் திரையிடப்பட்டு, 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படமும் இதுதான். இரட்டைவேடத்தில் நடித்து பெரும் வெற்றி பெற்ற 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்தின் வசூல் சாதனையை 'அடிமைப் பெண்' முறியடித்து புதிய சாதனை படைத்தது.

ரிஸ்க் எடுத்து பாடலை உருவாக்குவார்

 எம்.ஜி.ஆர் தனது படங்களில் இடம்பெறும் பாடல்களில் அதிக கவனம் செலுத்துவார். பாடல் யார் எழுத வேண்டும், எப்படி இருக்க வேண்டும், யார் பாட வேண்டும் என்பதில் எல்லாம் அவர் மிகுந்த கவனத்துடன் இருப்பார். அவருக்கு மனதிற்கு பிடிக்கவில்லை என்றால் அப்பாடல் நன்றாக வரும் வரை காத்திருந்து ரிஸ்க் எடுத்து பாடலை உருவாக்குவார்.

40 முறை மாற்றியிருக்கிறார்

அந்த வகையில், அடிமைப் பெண் படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் தனக்கு திருப்தியாக இல்லை என்பதால் 40 முறை மாற்றியிருக்கிறார். கேவி மகாதேவன் மொத்தம் 52 டியூன்களை போட்டு காட்டினாராம். ஆனால், அது எதுவும் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. மகாதேவன் 53வதாக போட்ட டியூனைத்தான் எம்.ஜி.ஆர் தேர்ந்தெடுத்தார்.

எஸ்.பி.பி பாடியும் திருப்தி அடையாத எம்.ஜி.ஆர், கடைசியாக அந்தப் பாடலை டி.எம்.எஸ் பாடியிருகிறார்.  அந்த பாடல் செம ஹிட் ஆனது. அந்த பாடல்தான், 'தாயில்லாமல் நானில்லை தானே எவரும் பிறந்ததில்லை' என்ற பாடல். எத்தனையோ கவிஞர்கள் பாடல் எழுதினர். ஆனால் எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை. கடைசியாக ஆலங்குடி சோமு எழுதியதுதான் எம்.ஜி.ஆருக்கு பிடித்து இருந்தது. 

அடிமைப்பெண் படத்தில் எம்.ஜி.ஆர் தனது தாயைப் மீட்க செல்கிறபோது, பார்க்கிற இடமெல்லாம் அவருடைய தாயின் உருவம் தெரியும். இந்த படத்தில், எம்.ஜி.ஆரின் தாயாக பண்டரிபாய் நடித்தார். பார்க்கும் இடமெல்லாம் தனது தாயின் உருவத்தைப் பார்க்கும் எம்.ஜி.ஆர் தாயைப் பற்றி பாடும் பாடல்தான் அது. 

'அடிமைப் பெண்' கதை சுருக்கம்

மன்னரான தன் தந்தையை கொன்று கொடூர ஆட்சி நடத்தி வரும் வில்லனை மகன் பழிவாங்குகிறான். 25 ஆண்டுகளாக அடிமைச் சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள தன் தாயை மீட்கும் கதை தான் 'அடிமைப் பெண்'. இந்தப் படத்தை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் தயாரித்து இருந்தது. கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். கருணாநிதியின் மைத்துனர் சொர்ணம் வசனத்தில் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் சம்பந்தி கே.சங்கர் இப்படத்தை இயக்கினார். இப்படத்தின் கதாநாயகன் எம்.ஜி.ஆர் தந்தை - மகன் என இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ஜெயலலிதா கதாநாயகி மற்றும் வில்லி என இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி