Yuvan: என் அப்பாவின் எல்லா பாடல்களையும் யூஸ் செய்ய முடியாது.. காப்பி ரைட்ஸ் இருக்கு.. புலம்பிய யுவன்சங்கர் ராஜா
Yuvan: என் அப்பாவின் எல்லா பாடல்களையும் யூஸ் செய்ய முடியாது என்றும், காப்பி ரைட்ஸ் இருக்கிறது எனவும் இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா பேசியுள்ளார்.
Yuvan: தமிழ் சினிமாவில் 25ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசையால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களின் மனதில் இருப்பவர், யுவன் சங்கர் ராஜா. லிட்டில் மேஸ்ட்ரோ, யங் மேஸ்ட்ரோ, பிஜிஎம் கிங் எனப் பல பெயரால் ரசிகர்களை இவரை செல்லமாக அழைக்கிறார்கள்.
1996இல் தமிழில் வெளியான அரவிந்தன் படத்தில் தொடங்கி தற்போது வரை 170க்கும் மேற்பட்ட படங்களில் இவரது இசைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழ் தவிர தெலுங்கு, கன்னடா, இந்தி மொழிகளில் இசையமைத்துள்ள இவர் பாடல்கள் பெரும்பாலானவை 2கே ஆரம்பகட்டத்தில் இளைஞர்களின் மனதை ரீங்காரமாய் ஒலித்த பாடல்களாக அமைந்தன.
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா:
இந்நிலையில் கோவையில் இசை நிகழ்ச்சி நடத்துவது குறித்த ஒரு மீட்டிங்கிறாக வந்த இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்டப் பல்வேறு கேள்விகளுக்கு யுவன் சங்கர் ராஜா சுவை பட பதில் கூறினார்.
அந்த பேட்டியில் அவர், ‘’இந்த கோட் தான் அந்த கோட் படத்துக்கு மியூஸிக் பண்ணுச்சு. விசில் போடு பாடலின் தியேட்டர் வெர்ஷன், எனது கோவை கச்சேரியில் ஃபெர்ஃபார்ம் பண்ணுவாங்க. மக்கள் சொன்னதைக் கேட்டுட்டுதான், நான் ரீவொர்க் பண்ணி தி கோட் படத்தில் பயன்படுத்தினேன். அஜித் சார் இசையைக் கேட்டுட்டு ஆல் தி பெஸ்ட்ன்னு சொன்னார்.
நான் எந்தெந்த ஊருக்குப் போறேனோ, அந்த ஊரில் இருக்கும் அந்த ஊரைச் சுற்றியிருக்கும் ஒரு சிங்கரை என் மேடைக்கச்சேரியில் பாட வைக்கணும் அப்படி நினைக்குறேன். அதை உறுதியாக கோவையில் இருந்து தொடங்கலாம் என நினைக்கிறேன். அவர்களோட வாய்ஸ் பெர்மான்ஸை இனி நீங்கள் என்னோட இடைக்கச்சேரி மேடைகளில் பார்க்கலாம்.
என் அப்பாவின் எல்லா பாட்டையும் யூஸ் செய்ய முடியாது.. காப்பி ரைட்ஸ் இருக்கு.. புலம்பிய யுவன்சங்கர் ராஜா
காப்புரிமை விவகாரத்தைப் பொறுத்தவரை, அப்பா - பையனாக இருந்தாலும் என் அப்பாவின் எல்லா பாடல்களையும் என்னால் பயன்படுத்திட முடியாது. சில பாடல்கள், சில லேபிளின் கீழ் இருக்கும். அதைப் பேசி அனுமதி வாங்கியபின், என் அப்பாவின் பாடல்களையே நான் பயன்படுத்தமுடியும். இப்போது காப்புரிமை விவகாரத்தில் நிறைய விழிப்புணர்வு வந்திருச்சு. அது நல்ல விஷயம் என்று நினைக்கிறேன்.
பழைய பாடல்களை மாற்றி, கொஞ்சம் புதுப் பாடல்களில் போடுவது என்பது அதை சிதைப்பதாக கருதமுடியாது. பழைய பாடலின் இன்னொரு வடிவமாகத்தான் அதை நான் பார்க்கிறேன். அதை நான் நல்ல விஷயமாகத்தான் நினைக்கிறேன். பழைய பாட்டில் ரீ-வொர்க் ஒருவர் செய்திருந்தால், வாவ்.. இவர் இப்படி அந்தப் பாடலைப் பார்த்திருக்கார், அப்படின்னு தான் பார்ப்பேன்.
செயற்கை நுண்ணறிவு மூலமாக ஒரு பாட்டு பண்ணியாச்சு. அது படத்தைப் பொறுத்துதான் நான் எப்படி பயன்படுத்தணும், ஏ.ஐ. என்னும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பாடலை உருவாக்கணுமான்னு தோணும்.
ஏ.ஐ-ஆல் மியூஸிக் டைரக்டருக்கு வேலை இருக்காது - யுவன் சங்கர் ராஜா
ஏ.ஐ என்னும் செயற்கை நுண்ணறிவு மூலமாக பாட்டு போடுவதால், பல இசையமைப்பாளர்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக குறைகிறது. இன்னும் 5- 10 வருடங்களில் இசையமைப்பாளர்களுக்கே வேலை இல்லை. அவ்வளவுதான். சீரியஸாக சொல்கிறேன். ஏ.ஐ.எல்லாத்தையும் எடுத்துக்கும். யார் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்தி இசையமைக்க கத்துக்கிறாங்களோ, அவங்க தான் உச்சத்துக்குப் போவாங்க.
மனிதர்களால் செய்யக்கூடிய இசையை ஏ.ஐ.தொழில் நுட்பத்தால் நிச்சயம் செய்யமுடியாது. இசையால் மனிதர்கள் கொடுக்கும் உணர்வை ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் கொடுக்கமுடியாது என ஏ.ஆர்.ரஹ்மான் சொன்னதை நானும் ஒப்புக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இசை தொடர்பான ஏ.ஐ. நுட்பங்கள் அதிகமாக இறக்கப்படும். அதற்கு இன்னும் காலங்கள் இருக்கு'’ என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தெரிவித்தார்.
டாபிக்ஸ்