Alangudi Somu Memorial Day : இந்த பாடல்களை எழுதியவர் இவர் தானா! மனங்களை வென்ற பாடலாசிரியர்.. ஆலங்குடி சோமு நினைவு தினம்!
எம்.ஜி ஆருக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் ஆலங்குடி சோமு. இவரின் நினைவு தினமான இன்று அவரை நினைவுகூறிவோம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த ஆலங்குடியில், 1932ஆம் ஆண்டு டிசம்பர் 12ல் பிறந்தவர் சோமு. இவர் ஆலங்குடி சோமு என்றால் தான் அனைவருக்கும் தெரியும். பாடலாசிரியர், கவிஞர், திரைப்படத் தயாரிப்பாளர் என, பன்முக தன்மை கொண்டவர் ஆலங்குடி சோமு.
திரையுலகில் இவரை பாடலாசிரியராக அறிமுகப்படுத்தியவர் அவரின் நண்பர் புரட்சிதாசன். தமிழ் திரையுலகில், 1960 முதல்1997 வரை 80 படங்களுக்கு 200 பாடல்கள் எழுதியுள்ளார். சின்னப்ப தேவரின் யானைப்பாகன் படத்தில் இடம்பெற்ற, 'ஆம்பளைக்குப் பொம்பளை அவசியம் தான்’என்ற நகைச்சுவை பாடல் தான் இவர் எழுதிய முதல் பாடல். இப்பாடலை எல் ஆர் ஈஸ்வரி, ராகவன் பாடியிருப்பார்கள்.
இரவு வரும் பகலும் வரும் உலகம் ஒன்று தான், மலருக்குத் தென்றல் பகையானால், ஆடலுடன் பாடலை கேட்டு, துள்ளுவதோ இளமை தேடுவதோ தனிமை உள்ளிட்ட ஏராளமான ஹிட் பாடல்களை எழுதியுள்ளார். கே.பாலசந்தரின் இயக்கத்தில், பத்தாம்பசலி என்ற படத்தையும், ஜெய்சங்கர் நடிப்பில், வரவேற்பு என்ற படத்தையும் சொந்தமாக தயாரித்தார். இவருக்கு, 1973-74ம் ஆண்டில், தமிழக அரசின், 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது.
பாடலாசிரியர் ஆலங்குடி சோமு படைப்பில் சிலவற்றை இங்கே காண்போம்.
குடியிருந்த கோவில் படத்தில் இடம்பெற்றுள்ள
”ஆடலுடன்
பாடலை கேட்டு
ரசிப்பதிலே தான்
சுகம் சுகம் சுகம்” என்ற பாடல் இன்றும் ட்ரெண்டிங் தான்.
இதே படத்தில் இடம்பெற்ற
“துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
துள்ளுவதோ இளமை
தேடுவதோ தனிமை
அள்ளுவதே திறமை
அத்தனையும் புதுமை”
அரச கட்டளை படத்தில் இடம்பெற்றுள்ள
”வேட்டையாடு விளையாடு
விருப்பம் போல உறவாடு
வீரமாக நடையை போடு -
நீவெற்றி எனும் கடலில் ஆடு”
எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியான எங்க வீட்டு பிள்ளை படத்தில் இடம்பெற்ற
”மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
மலருக்குத் தென்றல் பகையானால்
அது மலர்ந்திடக் கதிரவன் துணையுண்டு
நிலவுக்கு வானம் பகையானால்
அது நடந்திட வேறே வழி ஏது”
அடிமைப்பெண் படத்தில் இடம்பெற்றுள்ள அட்டகாசமாக பாடலான
”தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்
தாய் இல்லாமல் நான் இல்லை
தானே எவரும் பிறந்ததில்லை
எனக்கொரு தாய் இருக்கின்றாள்
என்றும் என்னை காக்கின்றாள்”
இந்த பாடலுக்கு எம்.ஜி.ஆர் ஒரு வீடு வாங்கும் அளவுக்கும் ஆலங்குடி சோமுக்கு பணம் கொடுத்தாரம். அவ்வளவு பிடித்ததாம் இந்த பாடல். இன்றும் தாய் என்றால் இப்பாடல் கண்டிப்பாக அனைவரின் மனதில் தோன்றும் முதல் பாடலாக இருக்கும்.இதுபோன்று இன்னும் பல வெற்றி பாடல்களை கொடுத்துள்ளார். 1990 ஜூன் 6ஆல் பக்கவாதம் வந்து காலமானார். பாடலாசிரியர் ஆலங்குடி சோமு இறந்த தினம் இன்று.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்