தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Ramki : ஹீரோ பெயர் ராஜா என்று வந்தாலே அது இவர்தான்.. 90களில் கலக்கிய நாயகன்.. நடிகர் ராம்கி பிறந்தநாள் இன்று!

HBD Ramki : ஹீரோ பெயர் ராஜா என்று வந்தாலே அது இவர்தான்.. 90களில் கலக்கிய நாயகன்.. நடிகர் ராம்கி பிறந்தநாள் இன்று!

Divya Sekar HT Tamil

Mar 31, 2024, 05:45 AM IST

google News
Happy Birthday Actor Ramki : நடிகர் ராம்கி மீண்டும் கம்பேக் கொடுத்தது 2013இல் வெளியான பிரியாணி, மாசானி ஆகிய படங்களின் மூலம் தான். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
Happy Birthday Actor Ramki : நடிகர் ராம்கி மீண்டும் கம்பேக் கொடுத்தது 2013இல் வெளியான பிரியாணி, மாசானி ஆகிய படங்களின் மூலம் தான். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

Happy Birthday Actor Ramki : நடிகர் ராம்கி மீண்டும் கம்பேக் கொடுத்தது 2013இல் வெளியான பிரியாணி, மாசானி ஆகிய படங்களின் மூலம் தான். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

1962 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பிறந்தவர் நடிகர் ராம்கி. 1980களின் இறுதி காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். இவர் முழு பெயர் ராமகிருஷ்ணன். இவர் 1987 ஆம் ஆண்டு இரட்டை இயக்குநர்களான ராபார்ட் - ராஜசேகர் இயக்கிய சின்ன பூவே மெல்ல பேசு படத்தில் தான் அறிமுகமானார். இப்படத்தில் பிரபு கதாநாயகனாகவும், ராம்கி இரண்டாவது நாயகனாகவும் நடித்திருப்பார்கள். முதல் படமே ஹிட் ஆன நிலையில் இவருக்கு ராசியான நடிகர் என படவாய்ப்புகள் வர தொடங்கியது.

பின்னர் 1988இல் இவரது கைவசம் நிறைய படங்கள் குவிந்தன. அந்த ஆண்டு மட்டும் மனைவி ஒரு மந்திரி, செந்தூர பூவே என 5 படங்களில் கமிட் ஆகி இருந்தார். இதில் விஜய்காந்துடன் இவர் நடித்த செந்தூர பூவே, பூவிழி ராஜா, பரவைகள் பலவிதம் ஆகிய படங்கள் ஹிட்டானது. மற்ற படங்கள் தோல்வியை சந்திக்காமல் லாபத்தை அளிக்கொடுத்தது.

பின்னர் அடுத்த ஆண்டு ராம்கிக்கு பல படங்கள் குவிந்தது. ஆனால் படங்கள் பெரிதாக ஓடவில்லை. ஆனாலும் தயாரிப்பாளர்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து இயக்குநர்களின் நடிகராக இருந்தார்.இதனாலயே இவருக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

இப்படி தொடர் தோல்வியை சந்தித்த நிலையில் 1990இல் இவர் நடிப்பில் வெளியான மருது பாண்டி, இணைந்த கைகள் நல்ல ஹிட்டானது. இப்படம் இவருக்கு மாஸ் வெற்றியை கொடுத்தது. இதேபோல இவருக்கு வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்தது. தொடர்ந்து ஹீரோவாகவே படங்களில் நடித்து வந்தார். தன்னுடன் ஜோடியாக நடித்த நிரோஷாவிடம் சிறந்த கெமிஸ்ட்ரியை வெளிப்படுத்தி வந்த ராம்கி, அவரை1995இல் திருமணமும் செய்து கொண்டார்.

இவர்கள் காதல் எவ்வாறு மலர்ந்தது என்பது குறித்து ராம்கி ஒரு பேட்டியில் கூறி இருப்பார். அதில், “ஒரு நாள் ஒரு பெரிய காட்சி ஒன்று எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். பரபரவென படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

முதலில் நான் ஓடிச் சென்று முதலில் ட்ரெயினில் ஏற வேண்டும். அதன் பின்னர் இவர் ஓடி வந்து ட்ரெயினில் ஏறுவார். நான் இவரை உள்ளே பிடித்து தூக்க வேண்டும் இதுதான் காட்சி. காட்சி நடித்துக்கொண்டிருக்கும் போது அவர் கீழே போடப்பட்டிருந்த கற்கள் தடுக்கி கீழே விழப்போனார். நான் உடனே அவரை லாவகமாக தூக்கி விட்டேன். அப்போது என்னிடம் மயங்கியவர்தான். அதன் பின்னர் நாங்கள் இருவரும் பயங்கர பிஸியாகி விட்டோம். அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவானது. அப்படியே எங்களுடைய காதல் மலர்ந்தது”என பேசி இருப்பார்.

இவரது நடிப்பில் வெளியாகி கவனிக்கத்தக்க படங்கள் சில

மாயா பஜார்

கருப்பு ரோஜா

இரட்டை ரோஜா

தடயம்

ஆஹா என்ன பொருத்தம்

பாளையத்து அம்மன்

விஸ்வநாதன் ராமமூர்த்தி போன்றவை உள்ளன.

ராம்கி நடித்த பல படங்களில் அவரது கதாபாத்திரம் பெயர் ராஜா என்றே இருக்கும். ஹீரோ பெயர் ராஜா என்ற வந்தாலே அதிகமாக அந்த கதாபாத்திரத்தில் ராம்கியே நடித்திருப்பார். அனைத்து ஜானர் படங்களிலும் நடித்த இவர் ஒருகட்டத்தில் பக்தி படங்களில் நடிக்க தொடங்கினார்.

அவர் நடித்த பக்தி படங்கள்

பாளையத்து அம்மன்ப்

ஸ்ரீ ராஜ ராஜேஷ்வரி

படைவீட்டு அம்மன் என அடுத்தடுத்து அம்மன் படங்களில் நடித்தார்.

இதையடுத்து அவர் வாய்ப்புகள் இல்லாமல் கேப் எடுத்துக்கொண்டார். அவர் மீண்டும் கம்பேக் கொடுத்தது 2013இல் வெளியான பிரியாணி, மாசானி ஆகிய படங்களின் மூலம் தான். இவர் தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

தெலுங்கில் 2018இல் வெளியான ஆர்எக்ஸ் 100 என்ற படத்துக்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான சந்தோஷம் விருதை வென்றார் ராம்கி. தனுஷ் நடிப்பில் வெளியான மாறா படத்தில் தனுஷின் அப்பா கதாபாத்திரத்தில் நடித்தார். இவருக்கு இன்னொரு ப்ள்ஸ் பாய்ண்ட் மக்கள் மனதில் பக்கத்து வீட்டு பையன் போன்ற உணர்வை தனது நடிப்பாலும், முகத்தோற்றத்தாலும் இவர் கொடுத்தது. இவருக்கு இன்று பிறந்தநாள். இன்றைய நாளில் அவருக்கு வாழ்த்து கூறுவோம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி