Ramki love Story: எம்.ஆர்.ராதா பொண்ணுடா… பந்தா காட்டிய நிரோஷா.. அவமானப்படுத்திய ராம்கி.. - இதயங்களை இணைத்த ட்ரெயின்!
அப்போது ஸ்டாண்டர்ட் 2000 என்ற கார் ஒன்று இருந்தது அந்த கார் அப்போது மிகவும் பிரபலம். அந்த காரில் தான் அவர் படப்பிடிப்பிற்கு வருவார்.
பிரபல நடிகர் ராம்கி தன்னுடைய மனைவியும், நடிகையுமான நிரோஷாவுடன் காதல் உருவானது எப்படி என்று அண்மையில் பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு கொடுத்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ ஒரு படப்பிடிப்பில் திடீரென்று அவரின் புகைப்படத்தை எடுத்து வந்து இவர் தான் ஹீரோயின் என்று சொன்னார்கள்.
அப்போது அவர் கமல் சாருடன் சூரசம்ஹாரம் படத்தில் இணைந்து நடித்திருந்தார். இதனால் பத்திரிகைகள் அனைத்திலும் அவரது முகமாகவே இருந்தது.
அப்போது ஸ்டாண்டர்ட் 2000 என்ற கார் ஒன்று இருந்தது அந்த கார் அப்போது மிகவும் பிரபலம். அந்த காரில் தான் அவர் படப்பிடிப்பிற்கு வருவார்.
அவரின் புகைப்படத்தை என்னிடம் வந்து காண்பித்தபோது, நான் வேறு யாராவது நல்ல ஹீரோயினாக இருந்தால் சொல்கிறேனே என்று சொன்னேன். இதை யாரோ ஒருவர் அவரிடம் சென்று சொல்லிவிட்டார். இதனால் படப்பிடிப்பிற்கு வரும் பொழுதே முறைப்போடு தான் வந்தார்.
நமக்கு இந்த கெத்து காட்டுவதெல்லாம் சுத்தமாக பிடிக்காது. தொடர்ந்து அவர் என்னிடமிருந்து ஒரு வித இடைவெளியை கடைப்பிடித்ததை பார்க்க முடிந்தது. இதனையடுத்து படப்பிடிப்பு தொடங்கியது. நடன காட்சி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.
நான் பயங்கர வேகமாக ஆகிவிட்டேன். என்னுடைய வேகத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை இதனையடுத்து நான், அவரை வேண்டுமென்றால் பயிற்சி எடுத்துவிட்டு மீண்டும் ஆடச் சொல்லுங்கள்.
நான் ஒவ்வொரு ஷாட்டிற்கும் மீண்டும் மீண்டும் என்னா; ஆடிக் கொண்டிருக்க முடியாது என்று சொன்னேன் இதைக் கேட்டதும் அவருக்கு பெருத்த அவமானம் ஆகிவிட்டது.
இதையடுத்து கொந்தளித்த அவர் நான் கமல்ஹாசன் உடன் நடித்திருக்கிறேன். கார்த்திக் உடன் நடித்திருக்கிறேன். என்னை இப்படி நீ சொல்வாயா என்று கேட்டார்.
உடனே நான் நீங்கள் யாருடன் வேண்டுமென்றாலும் நடியுங்கள். இங்கு ஷாட்டிற்கு வந்தால் ஒழுங்காக நடிக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் கோபத்தில் சிவந்தே போனார்.
ஒரு நாள் ஒரு பெரிய காட்சி ஒன்று எடுத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் ரயில் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நான் ஓடிக்கொண்டிருக்கிறேன். பரபரவென படபிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
முதலில் நான் ஓடிச் சென்று முதலில் ட்ரெயினில் ஏற வேண்டும். அதன் பின்னர் இவர் ஓடி வந்து ட்ரெயினில் ஏறுவார். நான் இவரை உள்ளே பிடித்து தூக்க வேண்டும் இதுதான் காட்சி. காட்சி நடித்துக்கொண்டிருக்கும் போது அவர் கீழே போடப்பட்டிருந்த கற்கள் தடுக்கி கீழே விழப்போனார். நான் உடனே அவரை லாவகமாக தூக்கி விட்டேன். அப்போது என்னிடம் மயங்கியவர்தான். அதன் பின்னர் நாங்கள் இருவரும் பயங்கர பிஸியாகி விட்டோம். அடிக்கடி சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள் உருவானது. அப்படியே எங்களுடைய காதல் மலர்ந்தது” என்று பேசினார்.
டாபிக்ஸ்