அவ்ளோ பெரிய பணக்காரருக்கு உள்ளே இருந்த மனித தன்மை அது.. கவிஞர் வாலியை அன்பால் நனைய வைத்த ரத்தன் டாடா.. வீடியோ வைரல்
Oct 25, 2024, 07:00 AM IST
அவருக்கு நன்றி சொல்லி விட்டு. உங்கள் பெயர் என்ன என்று தெரிந்து கொள்ளலாமா என்றேன். மக்கள் எல்லோரும் என்னை டாடா என அழைப்பார்கள் என்றார். அவ்வளவு பெரிய பணக்காரருக்கு உள்ளே உள்ள மனித தன்மை அது. மிகச் சிறந்த மனிதாபிமானம் கொண்ட மனிதர் தான் ரத்தன் டாடா என்று வாலி கூறினார்.
தமிழ் திரை உலகில் 4 தலைமுறையினருக்கு பாட்டெழுதியவர் வாலி. இவர் பாட்டு எழுதியதோடு, சிறுகதை, கவிதை, நடிப்பு, சித்திரம் தீட்டுவது என பல்துறை வித்தகராக திகழ்ந்தார். அவர் திரைத்துறையில் சுமார் 15 ஆயிரம் பாடல்களை எழுதி உள்ளார். சுமார் 17 திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். வடைமாலை என்ற படத்தை மாருதி ராவுடன் இணைந்து இயக்கினார். தமிழக அரசின் சிறந்த பாடலாசிரியர் விருதை 5 முறை பெற்றவர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்றவர்.
பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரன்
எத்தனையோ அழைப்புகள் வந்தும் எந்த ஒரு வெளிநாட்டிற்கும் செல்லாதவர் வாலி. அதனாலேயே பாஸ்போர்ட்டே இல்லாத பாட்டுக்காரன் என புகழப்பட்டார். இந்த நிலையில் 18 ஜூலை 2013ல் இயற்கை எய்தினார். வாலி மறைந்தாலும் இன்றும் அவரது பாடல்கள் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க வைக்கின்றன. அந்த அளவிற்கு காதல், சோகம், தாய்மை, தாலாட்டு, சோகம், குத்து பாட்டு என எம்ஜிஆர் தொடங்கி சிவாஜி, ரஜினி, கமல், என தனுஷ் வரை பாட்டு எழுதியவர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வாலி பேசிய ஒரு வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
மழையும் டாடாவும்
அந்த வீடியோவில், மனிதத் தன்மை மனித நேயம் எவ்வளவு பெரிய ஆட்களுக்கு எல்லாம் இருக்கிறது என்பதை சொல்வதற்காக இதைச் சொல்ல வருகிறேன் என்று சொல்லி விட்டு வீடியோவில் வாலி தொடர்ந்து சொல்லும் தகவல் மனதை தொடுகிறது. ஒரு நாள் பயங்கரமான மழை.. இடி, மழை, மின்னல்.. நான் சௌபாத்தி பீச் வழியாக நடந்து வருகிறேன். அப்படி நான் மழையில் நனைந்து வரும்போது ஒரு சின்ன கார் என் பக்கத்தில் வந்து நின்றது. நல்ல கொட்டும் மழை. அந்த காரில் இருந்து கண்ணாடியை ஒரு ஆள் இறக்கி 'யெங் பாய் நீ எங்க போற.. வா கொண்டு போய் இறக்கி விடுகிறேன் என்றார். இல்லை நான் VT ஸ்டேஷன் போகணும் என்றேன். come on get in என்றார். நான் ஏறி உட்கார்ந்தேன். அவர் என்னை நான் செல்ல வேண்டிய இடத்தில் இறக்கி விட்டார்.
ரத்தன் டாடா சமீபத்தில் மறைந்த நிலையல் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யார் இந்த நோயல் டாடா?
•நோயல் டாடா, ஒரு ஐரிஷ் குடிமகன் ஆவார். பொதுமக்களின் பார்வையில் இருப்பதைக் காட்டிலும் செயல்பாடுகளில் கவனம் செலுத்துபவராக திகழ்கிறார். இதன் காரணமாக அவர் பற்றிய சுயவிவரமானது வெளி உலகுக்கு குறைவாகவே தெரியவந்துள்ளது. அவர் பல டாடா குழும நிறுவனங்களின் வாரியங்களில் தலைமை பொறுப்புகளில் இருந்து வருகிறார்.
•நேயல் டாடா மற்றும் சிமோன் டாடா ஆகியோரின் மகன்தான் நோயல் டாடா. முதலில் சூனூ கமிசாரியட்டை என்பவரை மணந்திருந்தார் நேவர் டாடா. அவருக்கு ரத்தன் மற்றும் ஜிம்மி டாடா என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். நோயல், மறைந்த பல்லோன்ஜி மிஸ்திரியின் மகளும், மறைந்த சைரஸ் மிஸ்திரியின் சகோதரியுமான ஆலு மிஸ்திரியை மணந்தார். இந்த தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்: மகள்கள் லியா மற்றும் மாயா, மற்றும் மகன் நெவில்.
* நோயல் டாடா, டாடா இன்டர்நேஷனலில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் 1999இல் ட்ரெண்டின் நிர்வாக இயக்குனர் ஆனார், அங்கு அவர் வெஸ்ட்சைட் சில்லறை சங்கிலியின் விரிவாக்கத்துக்கு தலைமை தாங்கினார்.
* நோயல் தற்போது ட்ரெண்ட், டாடா இன்டர்நேஷனல், வோல்டாஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் தலைவராக உள்ளார். டாடா ஸ்டீல் மற்றும் டைட்டன் கம்பெனி லிமிடெட் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
* 2019 முதல், சர் ரத்தன் டாடா அறக்கட்டளை மற்றும் சர் டோராப்ஜி டாடா அறக்கட்டளையின் குழுவில் நோயல் உள்ளார். அவரது குழந்தைகள் 2023இல் இந்த அறக்கட்டளைகளுடன் இணைக்கப்பட்டு, பின் பல்வேறு அறக்கட்டளைகளின் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ம் தேதி ரத்தன் டாடா மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்
டாபிக்ஸ்