அல்லு அர்ஜூன் வீட்டிற்கு படையெடுக்கும் பிரபலங்கள்.. நோண்டி நொங்கெடுக்கும் நெட்டிசன்கள்..
Dec 14, 2024, 02:57 PM IST
நடிகர் அல்லு அர்ஜூன் சிறையிலிருந்து வீட்டிற்கு வந்ததை அடுத்து, அவரைக் காணவும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கவும் தெலுங்கு திரை பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜூன் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
புஷ்பா 2 தி ரூல் படத்தின் ப்ரீமியர் காட்சியின் போது தியேட்டருக்கு வந்த அல்லு அர்ஜூனைக் காண மக்கள் அலறி அடித்து வந்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டார்.
விடுதலை ஆன அல்லு அர்ஜூன்
இந்த விவகாரத்தில் அல்லு அர்ஜுனுக்கு தெலங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியும், அவர் நேற்று இரவு சிறை வைக்கப்பட்டு பின் இன்று காலை விடுதலை செய்யப்பட்டார்.
அல்லு அர்ஜூன் சிறைக்குச் செல்லும் பொழுது, தன்னுடைய மனைவியான சினேகா ரெட்டிக்கு முத்தம் கொடுத்து ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். அது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில் அவர் இன்று காலை சிறையில் இருந்து வீட்டிற்கு வந்த போது, அவரது மனைவி அவரைக் கட்டி அணைத்து, கதறி அழுதார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திரண்ட திரைப் பிரபலங்கள்
இதையடுத்து, சிறையிலிருந்து வீடு திரும்பிய அல்லு அர்ஜூனைக் காண திரைப் பிரபலங்கள் பலரும் அவரது வீட்டிற்கு படையெடுத்துள்ளனர். தெலுங்கு முன்னணி நடிகர்களான விஜய் தேவரகொண்டா, நாக சைதன்யா, ராணா, வம்சி பைடிபள்ளி, தில் ராஜு, கொரட்டலா சிவா, ஹரிஷ் சங்கர் மற்றும் பல ஹீரோக்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் அல்ல்லு ஆர்ஜூன் வீட்டிற்கு வரிசையாக வந்து அவரை சந்தித்தனர்.
ரசிகர்களின் கேள்வி
பின்னர், மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, அல்லு அர்ஜூன் வீட்டிற்கு தனியாக வந்து தன் ஆறுதலை தெரிவித்து சென்றார். இதுதான் தற்போது தெலுங்கு திரையுலகில் பேசுபொருளாக உள்ளது. சிரஞ்சீவி, நாக பாபு ஆகியோர் அல்லு அர்ஜூனைக் காண வந்த நிலையில் மற்ற நட்சத்திரங்கள் ஏன் அவரைக் காண வரவில்லை என தெலுங்கு திரையுலக ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ராம் சரணுக்கு என்ன ஆச்சு
அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டதற்கு பல முன்னணி ஹீரோக்களும் குரல் கொடுத்த நிலையில், ஏன் ராம் சரண் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. ராணாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், ஏன் ஒரு நடிகரின் கைது குறித்து பேசவில்லை எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஏற்கனவே அல்லு அர்ஜூனுக்கும் மெகா ஸ்டார் குடும்பத்திற்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக பலரும் கூறி வரும் நிலையில், ராம் சரணின் இந்த செயல் ரசிகர்களின் சந்தேகத்தை அதிகரித்துள்ளதாக கூறி வருகின்றனர்.
சந்தியா தியேட்டர் விவகாரம்
சந்தியா தியேட்டர் கூட்ட நெரிசல் வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் சனிக்கிழமை காலை வீடு திரும்பினார். இந்த வழக்கில் அல்லு அர்ஜுனை போலீசார் வெள்ளிக்கிழமை கைது செய்த நிலையில், நம்பள்ளி நீதிமன்றம் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிட்டது. பின், உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதை அடுத்து அல்லு அர்ஜுன் சனிக்கிழமை காலை சஞ்சல்குடா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்