தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  விஜய் செய்யும் Work From Home அரசியல்.. 2026ல் எடுபடுமா? ஸ்கோர் செய்ய தவறியது ஏன்!

விஜய் செய்யும் Work From Home அரசியல்.. 2026ல் எடுபடுமா? ஸ்கோர் செய்ய தவறியது ஏன்!

HT Tamil HT Tamil

Dec 05, 2024, 08:36 PM IST

google News
எதுவுமே செய்யாமல், ட்விட்டர் என்கிற எக்ஸ் தளத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு, 2026 தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா விஜய்? மாற்று சக்தியாக வரத்துடிக்கும் விஜய், நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது
எதுவுமே செய்யாமல், ட்விட்டர் என்கிற எக்ஸ் தளத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு, 2026 தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா விஜய்? மாற்று சக்தியாக வரத்துடிக்கும் விஜய், நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது

எதுவுமே செய்யாமல், ட்விட்டர் என்கிற எக்ஸ் தளத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு, 2026 தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா விஜய்? மாற்று சக்தியாக வரத்துடிக்கும் விஜய், நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது

விக்கிரவாண்டியில் வி.சாலையில் விஜய் மாநாடு. இப்படி தான், விஜய் கட்சியின் தொடக்கம், ஒவ்வொரு நாள் அறிக்கையில், பரபரப்பானது. ஒருவழியாக மாநாடு நடத்தி, கட்சியின் கொள்கையை அறிவித்த தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அதன் பிறகு, அனல் பறக்கும் அரசியலில் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் நடித்து வரும் படங்களின் அப்டேட் மட்டும் தான் வருகிறதே தவிர, அரசியல் சத்தம் அறவே இல்லாமல் போனது. 

ஸ்கோர் செய்ய தவறிய விஜய்

இந்த நேரத்தில் தான், ஃபெஞ்சல் புயல் வடமாவட்டங்களில் ஒரு காட்டு காட்டிச் சென்றத. கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி என பெரும்பாலான மாவட்டங்கள், புயலின் தாக்கத்தாலும், திறக்கப்பட்ட அணை நீரின் கோரத்தாலும், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

பிரதான எதிர்கட்சிகள் களத்தில் இறங்கி, சம்பவம் செய்து கொண்டிருக்கிறார்கள். சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய், சத்தமே இல்லாமல் இருந்தார். தாமதமாக ஒரு அறிக்கை வந்தது. அத்தோடு முடித்திருந்தால் கூட பரவாயில்லை. பாதிக்கப்பட்ட மக்களை தனது தலைமை கழக அலுவலகமான பனையூருக்கு வரவைத்து, அவர்களுக்கு நிவாரணம் வழங்கியிருக்கிறார் விஜய். 

இதை செய்திருக்க வேண்டாமா?

உண்மையில் இது பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் செய்த அவமரியாதை என்று தான் பலரும் பார்க்கின்றனர். நேரடியாக களத்தில் சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மக்களுடன் இருப்பது தான் தலைவனுக்கு அழகு. நடிகராக விஜய்யிடம் இதை யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். ஆனால், ஒரு கட்சியின் தலைவராக விஜய்யிடம் அந்த எதிர்பார்ப்பு கட்டாயம் இருக்கும். அதை செய்ய தவறிவிட்டார் விஜய். 

‘தான் களத்திற்கு சென்றால் கூட்டம் கூடும், சிரமமாகும்’ என்கிறார் விஜய். அரசியலில் முதல் படியே கூட்டம் தான். கூட்டம் கூடினால் என்ன? விஜய் ஒரு அவலத்தை பார்வையிட வருகிறார், அவரை பார்வையிட வருவோரும், அந்த அவலத்தை அறியட்டுமே? அது எதிர்கட்சியாக, விஜய்க்கு இன்னும் மைலேஜ் தரும் விசயம் தானே. ‘கூட்டம் கூடும் என்பதற்காக, மாநாட்டை தவிர்த்தாரா விஜய்? மாநாட்டிற்கு கூட்டம் வேண்டும்? கள ஆய்வுக்கு வேண்டாமா?’ என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். நியாயமான கேள்வி. 

கமல் செய்ததைக் கூட செய்யாமல்!

கேரவேன் அரசியல் தான், கமலுக்கு பின்னடைவை தந்தாலும். இருந்தாலும், அதே கமல், முன்னாளில், புயலால் பாதிக்கப்பட்ட கொடைக்கானல் மலைப்பகுதியில் பம்பரம் போல் சுற்றி வந்து களஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார். அது அவருக்கு, பின்னாளில் வாக்கு சதவீதத்திற்கும் உதவியது. அப்படி இருக்கு, விஜய், இன்னும் வீட்டில் இருந்து அரசியல் செய்வது, Work From Home அரசியலாக தான் இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும், ரசிகர்களை அழைத்து விருந்து வைப்பதைப் போல இல்லை அது. ரசிகர்கள் உங்களைத் தேடி வருவார்கள். மக்களை நீங்கள் தான் தேடிச் செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர்., என்டிஆர் அரசியலை மேடையில் பேசிய விஜய், அவர்களைப் போல, அரசியல் செய்ய வேண்டாமா? பெரும்பாலான வடமாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் போது, அங்கு தன் தலத்தை நிறுவிட இதைவிடவா விஜய்க்கு வாய்ப்பு கிடைத்துவிடப்போகிறது?

எதுவுமே செய்யாமல், ட்விட்டர் என்கிற எக்ஸ் தளத்தில் மட்டும் அறிக்கை வெளியிட்டு, 2026 தேர்தலை எதிர்கொள்ளப் போகிறாரா விஜய்? மாற்று சக்தியாக வரத்துடிக்கும் விஜய், நிறைய மாற்றங்களை செய்ய வேண்டியிருக்கிறது. அதுவும் அவருக்குள். அதை செய்தால் தான், தமிழக அரசியல் களத்தில் தமிழக வெற்றிக் கழகம், தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி