கார்த்தியின் சர்ப்ரைஸ் என்ட்ரி..ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா!நிச்சயம் பிளாக்பஸ்டர்-கங்குவா ட்விட்டர் விமர்சனம்
Kanguva Twitter Review: கார்த்தியின் சர்ப்ரைஸ் என்ட்ரி, ஐந்து கெட்டப்பில் மிரட்டிய சூர்யா, வெறித்தனமான ஆக்ஷன், விஷுவல் எபெக்ட்ஸ் காட்சிகள் என ஏகத்தும் கங்குவா படத்தை பார்த்த பலரும் புகழ்ந்து வருகிறார். படம் நிச்சயமாக பிளாக்பஸ்டர் என கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள்.
Kanguva Twitter Review: ரசிகர்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முடிவு கட்டும் விதமாக சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்ககத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் பீரியட் ஆக்ஷன் த்ரில்லர் படமான கங்குவா இன்று வெளியாகியுள்ளது.
இந்த படத்தின் முதல் காட்சி தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு திரையிடப்படும் நிலையில், அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் காலை 5 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டுள்ளது. அத்துடன் பல்வேறு வெளிநாடுகளிலும் படம் முன்னரே வெளியாகியுள்ளது. இதையடுத்து ரூ. 350 கோடிபட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் கங்குவாவின் எக்ஸ் பக்க விமர்சனத்தை பார்க்கலாம்
இரண்டு ஆண்டுகள் கழித்து திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் சூர்யாவின் திரைப்படமான கங்குவா தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியிருக்கிறது. படத்தில் நாயகியாக திஷா பதானி, வில்லனாக அனிமல் புகழ் சன்னி தியோலும் நடித்துள்ளனர்.