தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுக்கும் பார்வதி தேவி..அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி - இந்த வார சிவசக்தி திருவிளையாடல்

சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுக்கும் பார்வதி தேவி..அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி - இந்த வார சிவசக்தி திருவிளையாடல்

Nov 21, 2024, 03:55 PM IST

google News
ஆன்மிக புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் தொடரில் இந்த வாரம் சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுத்து காரத்திகை பெண்களை காப்பாற்றும் பார்வதி தேவி, சிவபார்வதியுடன் இணையும் கார்த்திகேயன், அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி என ஒளிபரப்பாக இருக்கிறது.
ஆன்மிக புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் தொடரில் இந்த வாரம் சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுத்து காரத்திகை பெண்களை காப்பாற்றும் பார்வதி தேவி, சிவபார்வதியுடன் இணையும் கார்த்திகேயன், அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி என ஒளிபரப்பாக இருக்கிறது.

ஆன்மிக புராண தொடரான சிவசக்தி திருவிளையாடல் தொடரில் இந்த வாரம் சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுத்து காரத்திகை பெண்களை காப்பாற்றும் பார்வதி தேவி, சிவபார்வதியுடன் இணையும் கார்த்திகேயன், அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி என ஒளிபரப்பாக இருக்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், மிக பிரமாண்டமாகவும் பார்ப்போரை ஈர்க்கும் வகையில் மிகுந்த சுவாரஸ்யத்தோடும் சிவசக்தி திருவிளையாடல் ஆன்மிக தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிப்பரப்பாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் முதல் ஒளிப்பரப்பாகி வரும் இந்த தொடர் ரசிகர்களின் அமோக ஆதரவுடன் வெற்றிதொடராக மாறியுள்ளது.

இந்த வாரம் எபிசோடில் என்னென்ன திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் இடம்பெறுகிறது என்பதை பார்க்கலாம்.ய

பார்வதியின் அவதாரம்

கார்த்திகை பெண்களைக் காக்க "சங்கராந்தி தேவியாக" ஆவதாரம் எடுக்கிறார் பார்வதி. சூரசம்ஹாரத்தில், கார்த்திகேயன் தாரகாசுரனை வாதம் செய்தபின் கைலாயம் செல்ல மறுக்கிறான். அதனால் கார்திகேயனுடன் கார்த்திகைப் பெண்களும் கைலாயம் செல்ல முடிவு செய்கிறார்கள்.

அதே சமயம் தரகாசுரனுக்கு பிறகு, சங்கசூரன் அசுர அரசனாக பதவியேற்றுக்கொள்கிறான். அசுரமாதா அவனிடம் தாரகாசுரன் மரணத்துக்கு பழிவாங்கச் சொல்கிறாள். ஆனால் சங்கசூரன் திதியின் பேச்சைக் கேட்காமல் தன்னிச்சையாக முடிவெடுக்கிறான். இதனால் திதிக்கும், சங்கசூரனுக்கும் இடையே மோதல் உருவாகிறது. இதில் திதியை, சங்கசூரன் சிறையில் தள்ளுகிறான்.

இதனிடையே, கார்த்திகேயனுடன் கைலாயம் செல்லும் கார்த்திகை பெண்கள், கார்த்திகேயனை கைலாயத்தில் விட்டு விட்டுச் செல்ல ஒரு நாடகம் ஆடுகிறார்கள். தாங்கள் இதுநாள் வரை கார்த்திகேயனை வளர்த்தது பணத்துக்காகத்தான் என்று அவர்கள் சொல்ல, அதை கார்த்திகேயன் கேட்டுவிடுகிறான். கார்த்திகைப் பெண்கள் தங்கள் ஆசரமத்துக்கு திரும்புகிறார்கள்.

தன்னை விட்டுச்சென்ற கார்த்திகை பெண்கள் மீது கோவம் கொள்ளும் கார்த்திகேயன் இனி அவர்களை பார்க்கமாட்டேன் என்று சபதம் கொள்கிறான்.

திதியிடம் சிக்கி கொள்ளும் கார்த்திகை பெண்கள்

சங்குசூரனால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் திதி, சிவபெருமானையும் சிவமைந்தன் கார்த்திகேயனையும் பழிவாங்குவதற்காக, கைலாயத்தை விட்டு ஆசிரமம் செல்லும் கார்த்திகை பெண்களை வழியில் கொலை செய்ய திட்டமிட்டு, கிங்கராசுரன், சங்காரசுரன் எனும் அசுரர்கள் இருவரை அனுப்புகிறார். அவர்கள் கார்த்திகை பெண்களை தாக்குகிறார்கள். அவர்களை காப்பாற்ற, கார்த்திகேயன் வருகிறான். ஆனால் அசுரர்களின் கை ஓங்குகிறது.

அப்போது, தேவி பார்வதி சங்கராந்தி தேவியாக அவதாரம் எடுத்து அசுரர்களோடு போரிட்டு கார்த்திகை பெண்களைக் காக்கிறார். சிவபார்வதியுடன் இணையும் கார்த்திகேயன், அசுரர்களின் அடுத்தகட்ட சூழ்ச்சி என இந்த வார சிவசக்தி திருவிளையாடல் தொடர் விறுவிறுப்பாக செல்கிறது.

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு ஒளிபரப்பகும் சிவசக்தி திருவிளையாடல் தொடரில் காணத் தவறாதீர்கள்.

சிவசக்தி திருவிளையாடல் முன்கதை

பிரஜாபதி தட்சண் செய்த தவத்தால் அவருக்கு மகளாக ஆதிபராசக்தி `தாட்சாயிணி சதி`யாக அவதரிக்கிறார். சிவன் மீது காதல்கொள்ளும் சதி, பிரஜாபதி தட்சண் தடைகளைத் தகர்த்தெரிந்து சிவனைக் கரம்பிடிக்கிறார். ஆனால், தட்சண் செய்யும் ஒரு யாகம், தாட்சாயிணி - சிவன் வாழ்வில் ஆறாத்துயரத்தை நிகழ்த்துகிறது.

சதி தன் உடலை அக்னிக்கு இரையாக்குகிறார். இதனால் கோபம் அடையும் சிவன் வீரபத்ரராக உருவெடுத்து பிரஜாபதி தட்சன் ஆணவத்தை அடக்கி, தலையைக் கொய்கிறார். இன்னும் கோபம் அடங்காத சிவன் பிரபஞ்சத்தை அழிக்கும் அளவுக்குச் செல்கிறார். அதை நாராயணர் தடுக்கிறார். சிவன் ஆழ்ந்த தவத்துக்குள் மூழ்குகிறார்.

இந்த பிரபஞ்ச சுழற்சிக்கு சிவன் - சக்தியின் சேர்க்கை தேவை என்பதை உணர்ந்த நாராயணர், பிரம்மன் மற்றும் தேவர்கள் ஆதி சக்தியை வேண்ட, அவள் இமயமலை அரசன் ஹிம்மான் - மைனாதேவி தம்பதிக்கு மகளாக பார்வதி என்ற பெயரில் உருவெடுக்கிறார். சிவபக்தியில் வளர்ந்து, திருமண வயதை அடையும் பார்வதி சிவனை திருமணம் செய்ய முடிவெடுக்கிறாள். ஆனால் சிவன் செய்யும் தவம் அதற்குத் தடையாக இருக்கிறது. நாராயணர் ஏற்பாட்டில் மன்மதனும் ரதியும் சிவன் தவத்தைக் கலைக்கிறார்கள். தவம் கலைந்ததில் கோபத்தில் சிவன் தன் நெற்றிக்கண் திறந்து மன்மதனை எரிக்கிறார்.

காதல் கணவனை இழந்த ரதி, "தான் இப்போது மன்மதனை இழந்து நிற்க காரணம், பார்வதி நீதான். உனக்கும் சிவனுக்கு திருமணம் நடந்தாலும் குழந்தை பாக்யம் கிடைக்காது” என்று சபித்துவிடுகிறார். ஒரு புறம் சிவன் மீதான காதல், மறுபுறம் ரதியின் சாபம், பார்வதி கலங்கிப் போகிறார். சதியின் மறைவை மறக்க முடியாமல் தவிக்கும் சிவனை - பார்வதியோடு சேர்த்துவைக்க நாராயணரும் மற்ற தேவர்களும் படாத பாடு படுகிறார்கள்.

அதே நேரத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தால் அரக்கர்களுக்கு நல்லதல்ல, எனவே இதைத் தடுக்க வேண்டும் என்று தாரகாசுரன் சுக்ராச்சாரியாரின் உதவியுடன் பல சதித்திட்டங்களை நிறைவேற்றுகிறான். ஒரு கட்டத்தில் மனம் மாறும் சிவன், பார்வதி தான் ஆதிபராசக்தி என்பதை உணர வேண்டும் என்பதற்காகப் பல சோதனைகள் தருகிறார்.

அரக்கன் தாரகாசுரனின் சதிகளைத் தகர்த்து, கடும் தவம் செய்து பார்வதி சிவனின் மனதில் இடம் பிடிக்கிறார். ஆனால் பார்வதியின் தாய் மைனாதேவி "ரதியின் சாபத்தினால் சிவனுக்கும் பார்வதிக்கு திருமணம் நடந்தால், பார்வதிக்கு குழந்தை பாக்யம் கிடைக்காது. அப்படியிருக்கும் போது ஒரு தாயாக பார்வதியை சிவனுக்கு எப்படி திருமணம் செய்து வைப்பது" என்று தன் வாதத்தை முன்வைக்கிறார்.

நாராயணர் மற்றும் தேவர்களால் மைனாதேவியின் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள். ஆதிபராசக்திதான் பார்வதியாகப் பிறந்திருக்கிறாள். அவன் சிவனைத் திருமணம் செய்துகொள்வதே பிரபஞ்சத்தின் விருப்பம் என்பது மைனாதேவிக்கு உணர்த்தப்படுகிறது. அவளும் சம்மதிக்கிறாள்.

திருமணத்தின்போது சிவனின் விருந்தினர்களை அசுர அரசன் தாரகாசுரன் சிறைப்பிடிக்க, அவர்களை மீட்கப்போகும் சிவன் சிவ தனுசுவை அளித்து, தனக்குப் பிறக்க இருக்கும் மைந்தன் உயிரையும் பணயம்வைத்து விருந்தினர்களைக் காக்கிறார். சிவன் பார்வதியின் அம்சமாக கார்த்திகைப் பெண்களிடம் பிறக்கிறார் சிவமைந்தன் கார்த்திக்கேயன்.

சிவமைந்தன் கார்த்திக்கேயனைக் கொல்ல தாரகாசுரன் உள்ளிட்ட அசுரக் கூட்டமும், அவனைப் பாதுகாக்க சிவனும் பார்வதியும் களத்தில் நிற்கிறார்கள்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை