பார்வதி தேவியை ஏமாற்றிய பிரம்மதேவர்.. பைரவரை அனுப்பிய சிவபெருமான்.. தனித்துவமாக காட்சி கொடுக்கும் வைரவன்
தமிழ் செய்திகள்  /  ஜோதிடம்  /  பார்வதி தேவியை ஏமாற்றிய பிரம்மதேவர்.. பைரவரை அனுப்பிய சிவபெருமான்.. தனித்துவமாக காட்சி கொடுக்கும் வைரவன்

பார்வதி தேவியை ஏமாற்றிய பிரம்மதேவர்.. பைரவரை அனுப்பிய சிவபெருமான்.. தனித்துவமாக காட்சி கொடுக்கும் வைரவன்

Suriyakumar Jayabalan HT Tamil
Nov 16, 2024 06:00 AM IST

Vairavar: சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டி அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலின் சிவபெருமான் வளரொளிநாதர் அல்லது வைரவன் சுவாமி என்றும், தாயார் வடிவுடை அம்பாள் என்ற திருநாமத்தோடு காட்சி கொடுத்த வருகின்றனர்.

பார்வதி தேவியை ஏமாற்றிய பிரம்மதேவர்.. பைரவரை அனுப்பிய சிவபெருமான்.. தனித்துவமாக காட்சி கொடுக்கும் வைரவன்
பார்வதி தேவியை ஏமாற்றிய பிரம்மதேவர்.. பைரவரை அனுப்பிய சிவபெருமான்.. தனித்துவமாக காட்சி கொடுக்கும் வைரவன்

மன்னர்கள் காலம் தொட்டு இன்று வரை சிவபெருமானுக்கு பக்தர்கள் குறைந்தபாடு கிடையாது. குறிப்பாக இந்தியாவில் தங்கள் வாழ்க்கையை சிவபெருமானுக்காக அர்ப்பணித்து அவரை மட்டுமே சிந்தித்து வாழக்கூடிய எத்தனையோ மகான்கள் இங்கு உள்ளனர். அன்றைய காலம் தொட்டு இன்று வரை தொன்று தொட்டு பக்தர்கள் சிவபெருமானை வழிபட்டு வருகின்றனர்.

மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாகவே பல உயிரினங்கள் சிவபெருமானை வணங்கியதாக புராணங்களில் கூறப்படுகின்றன. மண்ணுக்காக மன்னர்கள் ஒருபுறம் போரிட்ட வந்தாலும் அனைத்து மன்னர்களும் சிவபெருமானை குலதெய்வமாக வணங்கி வந்துள்ளனர். அனைத்தையும் வழங்கக்கூடிய நாயகனாக சிவபெருமான் விளங்கி வந்துள்ளார்.

இறைவனோடு தங்களது கலை நயத்தை வெளிப்படுத்தி வான் உயரம் வரை பல கோயில்களை கட்டிச் சென்றுள்ளனர். சில கோயில்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டது என்பது கூட இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை. பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அந்த கோயில்கள் இன்று வரை கம்பீரமாக நின்று வருகின்றன. சோழர்களின் சாம்ராஜ்யத்தில் மிகப்பெரிய மன்னனாக திகழ்ந்து வந்த ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோயில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்று வரை கம்பீரமாக வரலாற்று சரித்திர குறியீடாக திகழ்ந்து வருகின்றது.

அந்தக் கோயிலின் மூலவமூர்த்தியாக சிவபெருமான் லிங்க வடிவில் காட்சி கொடுத்து வருகிறார். திரும்பும் திசை என்றும் சிவபெருமானுக்கு தமிழ்நாட்டில் கோயில்கள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அப்படிப்பட்ட சிறப்பு மிகுந்த கோயில்களில் ஒன்றுதான் சிவகங்கை மாவட்டம் வைரவன் பட்டி அருள்மிகு வைரவன் சுவாமி திருக்கோயில். இந்த திருக்கோயிலின் சிவபெருமான் வளரொளிநாதர் அல்லது வைரவன் சுவாமி என்றும், தாயார் வடிவுடை அம்பாள் என்ற திருநாமத்தோடு காட்சி கொடுத்த வருகின்றனர்.

தல பெருமை

இந்த கோயிலில் மிகப்பெரிய சிறப்பு என்னவென்றால் பைரவர் தான் சிறப்பு. அம்பாள் சன்னதிக்கு முன்பாக பைரவர் தனி சன்னதியில் காட்சி கொடுத்து வருகிறார். குறிப்பாக நாய் வாகனத்தோடு காட்சி கொடுத்து வருகிறார். இந்த திருக்கோயிலின் பிரதான மூர்த்தியாக பைரவர் திகழ்ந்து வருகின்றார். கோயிலுக்கு வெளியே உள்ள தீர்த்தம் இவரால் உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது.

இந்த கோயிலில் அடுத்த சிறப்பு என்னவென்றால் அம்பால் சன்னதியில் கருவறைக்குப் பின்னால் இரண்டு பல்லி சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த பள்ளி சிற்பங்களை வழிபட்டால் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.

இந்த கோயில்களில் சிறப்பு என்னவென்றால் சிற்பக் கலைதான். தட்சிணாமூர்த்தி ஏழிசை மண்டபத்தில் காட்சி கொடுக்கின்றார். ஒரே பாறையில் செதுக்கப்பட்ட குடவரை கோயில் போன்ற அமைப்பில் சந்திகீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது.

தல வரலாறு

சிவபெருமானை போலவே பிரம்ம தேவரும் ஐந்து தலைகளோடு இருந்தார். அதனால் சிவபெருமானுக்கு நிகராக தன்னை நினைத்துக் கொண்டு மிகவும் அகந்தையோடு பிரம்ம தேவர் வலம் வந்தார். ஒருமுறை பார்வதி தேவி பிரம்ம தேவரை தனது கணவர் சிவபெருமான் என்று நினைத்துக் கொண்டு அவருக்குரிய மரியாதைகளை தெரியாமல் பிரம்மனுக்கு செய்தார்.

பிரம்மதேவரும் மறுப்பு தெரிவிக்காமல் அவர் செய்த மரியாதையை அப்படியே ஏற்றுக்கொண்டார். நான் மரியாதை செலுத்தியது பிரம்மதேவர் தான் தனது கணவர் சிவபெருமான் இல்லை என பார்வதி தேவி அறிந்து கொண்டார். இதுகுறித்து உடனே பார்வதி தேவி சிவபெருமானிடம் தெரிவித்தார்.

இதனால் கோபமடைந்த சிவபெருமான் தனது அம்சமான பைரவரை அனுப்பி பிரம்ம தேவனின் ஒரு தலையை கொய்து எறிந்தார். அந்த பெயரிலேயே சிவபெருமானுக்கு இங்கு கோயில்கள் அமைக்கப்பட்டு வைரவர் என்ற பெயரில் பைரவர் காட்சி கொடுத்து வருகிறார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்