தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  காமெடியும், கிரிக்கெட்டும் இவர் படங்களில் பிரதானம்..தமிழ் சினிமா ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் வெங்கட் பிரபு

காமெடியும், கிரிக்கெட்டும் இவர் படங்களில் பிரதானம்..தமிழ் சினிமா ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் வெங்கட் பிரபு

Nov 07, 2024, 10:30 AM IST

google News
தனது படங்களில் காமெடியும், கிரிக்கெட்டும் பிரதானம் என்ற பாலிசியை கடைப்பிடிக்கும் இயக்குநராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. தமிழ் சினிமா ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனக்காகவே படம் பார்க்க வரும் தனியொரு ரசிகர் வட்டத்தையும் வைத்திருப்பவராக இருக்கிறார்.l
தனது படங்களில் காமெடியும், கிரிக்கெட்டும் பிரதானம் என்ற பாலிசியை கடைப்பிடிக்கும் இயக்குநராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. தமிழ் சினிமா ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனக்காகவே படம் பார்க்க வரும் தனியொரு ரசிகர் வட்டத்தையும் வைத்திருப்பவராக இருக்கிறார்.l

தனது படங்களில் காமெடியும், கிரிக்கெட்டும் பிரதானம் என்ற பாலிசியை கடைப்பிடிக்கும் இயக்குநராக இருந்து வருபவர் வெங்கட் பிரபு. தமிழ் சினிமா ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் என்ற ரசிகர்களால் அழைக்கப்படும் இவர் தனக்காகவே படம் பார்க்க வரும் தனியொரு ரசிகர் வட்டத்தையும் வைத்திருப்பவராக இருக்கிறார்.l

சினிமாக்களில் தங்களது அபிமான ஹீரோக்களை வெள்ளித்திரையில் தரிசனம் செய்வதற்காக இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை போல், சில இயக்குநர்களுக்கும் தனியொரு ரசிகர் வட்டமும், கூட்டமும் இருக்கிறது. அப்படி தனக்கென ஒரு ரசிகர் கும்பலை கொண்டிருக்கும் இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் வெங்கட் பிரபு.

தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநராக தன்னை நிருபித்து முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சினிமா பயணம்

இசைஞானி இளையராஜா சகோதரரும், பாடலாசிரியர் இசையமைப்பாளர் மற்றும் இயக்குநர் என பன்முக கலைஞராக தமிழ் சினிமாவில் வலம் வந்த கங்கை அமரன் மூத்த மகனான வெங்கட் பிரபு, தனது தந்தையை போல் கலை உலகில் தனது திறமையை நிருபிக்க விரும்பியுள்ளார்.

சினிமாவில் ஹீரோவாக தனது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என சில முயற்சிகள் எடுத்தார். ஆனால் அது தோல்வியில் முடிந்தது. பின்னர் ஏப்ரல் மாதத்தில், ஜி, சிவகாசி, தம்பி, உன்னைச் சரணடைந்தேன், ஜி போன்ற சில படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

மலேசியாவில் இசை ஆல்பம் இயக்கிய இவருக்கு சினிமா இயக்கம் மீது ஆர்வம் தொற்றிக்கொள்ள, 2007ஆம் ஆண்டு 11 புதுமுகங்களை வைத்து கிரிக்கெட் விளையாட்டை பின்னணியாக வைத்து இயக்கிய சென்னை 600028 மிகப்பெரிய ஹிட் படமாக மாறியது. இந்த படம் வெளியான ஆண்டில் தான் இந்தியா முதல் முறையாக டி20 உலகக் கோப்பை தொடரை தோனி தலைமையில் வென்றது. எதார்த்த காமெடியுடன் அமைந்திருந்த அந்த படத்தின் பார்முலா கெட்டியாக பிடித்து கொண்ட அவர், அதன் பிறகு தனது எல்லா படங்களிலும் அதை அப்ளை செய்து வெற்றிகரமாக இயக்குநராக உருவெடுத்தார்.

வெங்கட் பிரபு படங்கள்

ஆக்‌ஷன், த்ரில்லர், ரொமான்ஸ் என எந்த ஜானரில் படம் வெங்கட் பிரபு இயக்கினாலும் அதில் மையமாக காமெடியை வைத்திருப்பார். இதேபோல் அவரது படங்களில் மற்றொரு அம்சமாக கிரிக்கெட் விளையாட்டும் ஏதாவதொரு வகையில் இடம்பிடித்திருக்கும். இவரது இரண்டாவது படமாக நகைச்சுவை கலந்த த்ரில்லர் பாணியில் உருவான சரோஜா பாக்ஸ் ஆபிஸில் கல்லாகட்டியது. அதன் பின்னர் இவர் இயக்கியா ரெமாண்டிக் காமெடி கோவா சராசரி வெற்றியை பெற்றது.

டாப் நடிகரான அஜித்தின், 50வது படம் என்கிற மைல்கல் படமான மங்காத்தா தனது கிரிப்பிங்கான திரைக்கதை மூலமும் இயக்கிய வெங்கட் பிரபு மாபெரும் வெற்றியை கொடுத்தார். அதன்பின், இவர் கார்த்தியை வைத்து இயக்கிய பிரியாணி, சூர்யாவை வைத்து இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி ஆகியவை சுமாரான வெற்றியைப் பெற்றன.

மீண்டும் சென்னை 600028 மூலம் கம்பேக்

அடுத்தடுத்து இரண்டு படங்கள் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் அவ்வளவுதான் வெங்கட் பிரபு. அவரது ட்ரெண்ட் காலாவதியாகிவிட்டது என பேசப்பட்ட நேரத்தில் தனக்கு முகவரி கொடுத்த சென்னை 600028 படத்தின் இரண்டாம் பாகம் மூலம் கம்பேக் கொடுத்தார். இதைத்தொடர்ந்து சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்கி ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தார்.

தொடர்ந்து மன்மத லீலை என்ற ஏ சர்ட்டிபிக்கேட் படத்தையும், தெலுங்கும் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை இயக்கி அட்டர் பிளாப் கொடுத்த நிலையில், தளபதி விஜய்யை வைத்து தி கோட் படத்தை உருவாக்கி பாக்ஸ் ஆபிஸில் ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளிக்கொடுக்க காரணமான இயக்குநரானார்.

ஓடிடியிலும் கலக்கல்

சினிமா மட்டுமல்லாமல் ஓடிடியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கும் இவர், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான லைவ் டெலிகாஸ்ட், விக்டிம், குட்டிஸ்டோரி போன்ற வெப் ஆந்தாலஜி படங்களில் ஒரு கதையை இயக்கியுள்ளார். தயாரிப்பாளராகவும் ஆர்கே நகர், கசடதபற, நண்பன் ஒருவன் வந்த பிறகு போன்ற படங்களை தயாரித்திருக்கும் வெங்கட் பிரபு, அவ்வப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

எந்த விஷயத்தையும் கூலாக டீல் செய்யும் குணம் கொண்ட, தனது படங்களில் வரும் கதாபாத்திரங்களை போல் தனது படத்தின் செட்டையும் மிகவும் கலகலப்பாக வைத்துக்கொள்ளும் இயக்குநராக திகழ்கிறார். இவரது படங்களில் தனித்துவமான விஷயமாக க்ளைமாக்ஸ், அதை தொடர்ந்து வரும் ப்ளூப்பர் காட்சிகள் (ஷுட்டிங் சமயத்தில் நிகழ்ந்த வேடிக்கையான விஷயங்கள்), ஸ்பூஃப் காட்சிகள் இருக்கும்.

தனது பட க்ளைமாக்ஸ்களில் கதை ஏற்ப காட்சி வைத்திருந்தாலும், ஓபன் க்ளைமாக்ஸாக அமைத்து ரசிகர்களின் பார்வைக்கு எப்படி வேணாலும் எடுத்துக்கொள்ளலாம் என்று முடித்திருப்பார். இது எந்த இயக்குநரும் பெரும்பாலும் செய்யாத விஷயமாகவே இருந்து வருகிறது. இதைபோல் லேட்டஸ்ட் ட்ரெண்டிங் விஷயங்களை கதையுடன் இணைத்து காட்சியாக அமைக்கும் இவரது பாணி காரணமாக ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் என்றே அழைக்கப்படுகிறார்.

தமிழ்நாடு அரசின் விருது, மங்காத்தா படத்துக்காக ஐடிஎஃப்ஏ (சர்வதேச தமிழ் திரைப்பட விருது) விருதை வென்ற இயக்குநராக திகழும் வெங்கட் பிரபு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

 

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை