ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகை.. புது சாதனை.. விஜய்க்கு கேக் ஊட்டி மகிழ்ந்த தி கோட் படக்குழு
ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகை ஈட்டித்தந்து புது சாதனை படைத்த் தி கோட் திரைப்படம் குறித்தும்; விஜய்க்கு கேக் ஊட்டி மகிழ்ந்த தி கோட் படக்குழு குறித்தும் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் நடிகர் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படமானது,ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகையை ஈட்டி தந்து சாதனைப் படைத்துள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து கடந்த செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், தி கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest Of All Time) என்பதின் சுருக்கமே ‘ தி கோட்’. இது விஜய்யின் 68ஆவது படமாகும். இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் சினேகா ஆகியோர் நடித்திருந்தனர்.
தவிர, இந்தப் படத்தில் பிரசாத், பிரபுதேவா, மோகன், லைலா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி அமரன், யுகேந்திரன் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இந்தப் படத்தின் மூலம் நடிகர் விஜய்யின் படத்துக்கு, பல ஆண்டுகளுக்குப் பின், யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சார்பாக, கல்பாத்தி அகோரம்,கல்பாத்தி கணேஷ், கல்பாத்தி சுரேஷ் என சகோதரர்கள் மூவர் இணைந்து தயாரித்தனர்.
தி கோட் தொழில்நுட்பக் குழுவினர் விவரம்:
‘’தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' படத்துக்கு உண்டான ஒளிப்பதிவினை சித்தார்த்தா நுனி புரிய, வெங்கட் ராஜின் என்பவர் எடிட் செய்திருந்தார். இப்படத்துக்குண்டான வசனத்தை விஜி மற்றும் வெங்கட் பிரபு ஆகிய இருவரும் இணைந்து எழுதியிருந்தனர்.
இப்படத்தில் கங்கை அமரன், மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, விவேக் ஆகிய நால்வர் சேர்ந்து, படத்துக்குண்டான பாடல்களை எழுதியுள்ளனர்.
தி கோட் படத்தின் கதை:
கென்யாவில் ரயிலில் கொண்டு செல்லப்படும் யுரேனியத்தையும், பயங்கவாதி ஓபரையும் பத்திரமாக கொண்டு வர Special Anti Terrorist Squad Team சார்பில் காந்தி ( விஜய்), அஜய் (அஜ்மல்), சுனில் (பிரசாந்த்), கல்யாண் ( பிரபு தேவா) ஆகியோர் கொண்டு செல்ல ஆயுதங்களுடன் களமிறங்க, அந்த சண்டையில் ரயில் வெடித்து தீவிரவாதி மேனன் ( மோகன்) இறந்துவிடுவதாக காட்டப்படுகிறது.
இதற்கிடையே தாய்லாந்திற்கு மனைவி அனு ( சினேகா) உடன் செல்லும் காந்தி, தன்னுடைய மகனைப் பறி கொடுப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பின்னாளில் அவனை காந்தி பிரச்னை ஒன்றில் சந்திக்கிறார். அந்தப் பிரச்னை என்ன? அதில் காந்திக்கு வில்லனாக மகன் மாறியது ஏன்? என்பது படத்தின் மீதிக்கதை.
தி கோட் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம்:
தி கோட் திரைப்படம் ரிலீஸான முதல் நாள் இந்தியாவில் ரூ.44 கோடி வசூல் செய்தது. அதன்படி, தமிழில் ரூ.39.15 கோடியும், இந்தியில் ரூ.1.85 கோடியும், தெலுங்கில் ரூ.3 கோடியும் என மொத்தமாக 44 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதையடுத்து பெரிய படங்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தொடர்ச்சியாக வசூல் வேட்டை நிகழ்த்தி வந்த இந்த படம் தற்போது வரை ரூ. 455 கோடி வசூலை ஈட்டியுள்ளது. இதனை தி கோட் படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் தளத்தில் உறுதி செய்திருந்தார்.
இந்நிலையில் ‘தி கோட்’ திரைப்படமானது, இன்று ரூ.100 கோடி வரை விநியோகஸ்தர்களுக்கு ஷேர் தொகையை ஈட்டி தந்து சாதனைப் படைத்துள்ளது.

டாபிக்ஸ்