17 Years Of Chennai 600028: கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்.. ரகளையான கலாய்.. மேட்சில் கிளைமேக்ஸ் தான் ‘சென்னை 600028’
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  17 Years Of Chennai 600028: கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்.. ரகளையான கலாய்.. மேட்சில் கிளைமேக்ஸ் தான் ‘சென்னை 600028’

17 Years Of Chennai 600028: கிரிக்கெட் ஆடும் இளைஞர்கள்.. ரகளையான கலாய்.. மேட்சில் கிளைமேக்ஸ் தான் ‘சென்னை 600028’

Marimuthu M HT Tamil
Apr 27, 2024 09:29 AM IST

17 Years Of Chennai 600028:சென்னை 600028 திரைப்படம் வெளியாகி இன்றுடன் 17 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

சென்னை 600028
சென்னை 600028

சென்னை 600028 திரைப்படத்தின் கதை என்ன? சென்னையில் உள்ளூர் கிரிக்கெட் லீக் போட்டிகளில் பங்கேற்கும் ராயபுரம் ராக்கர்ஸ் அணியும், ஷார்க்ஸ் அணியும் பரம எதிரிகள். ஆனால், ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் லோக்கல் மேட்ச்சில் ராயபுரம் ராக்கர்ஸ் தான், கோப்பையை ஜெயிக்கிறது.

ரகு, சென்னை விசாலாட்சி தோட்டத்தில் வசிக்கும் கல்லூரி மாணவன். இவர் அப்பகுதியில் இருக்கும் ராயபுரம் ராக்கர்ஸ் அணியில் சேர்ந்து கிரிக்கெட் ஆடி வருகிறார். ரகு தனது அணிக்கு விசுவாசமாக இருக்கிறான். ஆனால், தூரம் காரணமாக, ரகு கிரிக்கெட் ஆட தாமதமாக வர, அவருக்குப் பதிலாக, புதிய பையனை ராயபுரம் ராக்கர்ஸ் அணியினர் மாற்றுகின்றனர். தூரம் மற்றும் தாமதத்தால் அணியில் தன்னை இருட்டடிப்பு செய்வதாக உணர்ந்த ரகு, ராயபுரம் ராக்கர்ஸ் அணியில் இருந்து விலகுகின்றான்.

இதனிடையே ஷார்க்ஸ் அணியின் கேப்டன், கார்த்திக்கை, பழனியின் சகோதரி செல்வி காதலிக்கிறாள். இந்த காதலை ரகு, கார்த்திக்கிடம் சொல்கிறான். ஆரம்பத்தில் பரமஎதிரி அணியான ராயபுரம் ராக்கர்ஸ் அணியின் வீரர் ரகு, செல்வியுடன் பேசுவதைத் தவறாக நினைக்கும், கார்த்திக், செல்வி தன்னை காதலிப்பதை அறிந்ததும் ரகுவுடன் நட்பு பாராட்டுகிறார். அந்த நட்பு மெல்ல ரகுவை, ஷார்க்ஸ் அணியில் ஒரு வீரராக சேர்க்கிறது. ரேடியோ மிர்ச்சி கோப்பைக்கான பயிற்சியில் இடம்பெறும் ரகு, ராயபுரம் ராக்கர்ஸ் அணியின் மைனஸ்களை, ஷாக்கர்ஸ் அணியிடம் கூறி, பயிற்சி செய்கிறார். இதற்கிடையே, கார்த்திக்கின் காதல் விவகாரத்தை அறிந்த பழனியால், ஷாக்கர்ஸ் அணி திடீரென உடைகிறது. பின்னர், கார்த்திக் பழனியிடம் மன்னிப்புக்கேட்க, ரேடியோ மிர்ச்சி கோப்பையை வெல்வதற்காக அனைவரும் ஒன்றிணைகின்றனர். பயிற்சியினைத் தொடங்குகின்றனர். இதற்கிடையே கார்த்திக்கை, அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கி ஏற்பட்ட காயத்தில், ரேடியோ மிர்ச்சி கோப்பைக்கான சீரிஸை விளையாட முடியாமல் போகிறது. பின், ஷாக்கர்ஸ் அணிக்கு பழனி பொறுப்பு கேப்டனாக இருந்து வழிநடத்துகிறார்.

இறுதியாக அரையிறுதியில் ராயபுரம் ராக்கர்ஸை ஜெயிக்கும் ஷார்க்ஸ் அணி, அதனை இறுதி வரை தக்கவைத்ததா, அப்போது என்ன கலாட்டாக்கள் நடக்கின்றனவா, இறுதியில் ஷாக்கர்ஸ் அணி கோப்பையை வென்றதா என்பதே படத்தின் கிளைமேக்ஸ்.

இப்படத்தில் ரகுவாக ஜெய் நடித்திருந்தார். கார்த்திக்காக சிவாவும், சீனுவாக பிரேம்ஜியும், ஜில்லுவாக வைபவ்வும், அரவிந்தனாக அரவிந்த் ஆகாஷூம், பழனியாக நிதின் சத்யாவும், கோபியாக விஜய் வசந்தும், ஏழுமலையாக அஜய் ராஜும் செல்வியாக விஜயலட்சுமியும், ஸ்வேதாவாக கிறிஸ்டின் செடெக்கும், வர்ணனையாளராக படவா கோபியும் நடித்திருந்தனர். ராயபுரம் ராக்கர்ஸ் அணியின் கேப்டன் ஜானாக இனிகோ பிரபாகரனும், மனோகராக இளவரசுவும், குணாவாக சம்பத் ராஜூம் நடித்திருந்தனர்.

இப்படத்திற்கு ஆரம்பத்தில் பிரேம்ஜி அமரன் இசையமைப்பாளராக இருந்தார். பின், அவரது பணிகளை மெருகேற்றி, யுவன் சங்கர் ராஜா இப்படத்துக்கு இசை அமைத்தார். இப்படத்தின் ஆல்பம் மிகப்பெரிய ஹிட்டானது. 

இன்னொரு புதுவிஷயம் என்னவென்றால், படத்தில் பெரும்பான்மையானவர்கள் புதுமுகங்களாக இருந்தும் காமெடியான வசனங்கள், யதார்த்தமான விளையாட்டினை இணைத்தால் அனைவரும் ரசிக்கலாம் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணமாக இருந்தது. 

படம் வெளியாகி 17 ஆண்டுகள் ஆனாலும், டிவியில் இப்படத்தைப் போடும்போது பலரையும் ரசிக்க வைக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.