HBD Mysskin: கருப்பு கண்ணாடி, தடாலடி ஓபன் டாக்..தமிழ் சினிமாவின் ட்ரெண்ட் செட்டிங் இயக்குநர் மிஷ்கின்
Sep 20, 2024, 06:00 AM IST
HBD Mysskin: கருப்பு கண்ணாடி, தடாலடி ஓபன் டாக், தனக்கென தமிழ் சினிமாவில் ஒரு பிரத்யேக திரைமொழியைக் கொண்டவரும், ட்ரெண்ட் செட்டிங் இயக்குநராகவும் இருப்பவர் இயக்குநர் மிஷ்கின். நடிகராகவும் பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் தோன்றி முத்திரை பதித்தும் வருகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக இருந்து வருபவர் மிஷ்கின். இயக்குநராக சினிமாவில் அறிமுகமாகி தற்போது நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முக தோற்றத்துடன் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார். பொதுவாக திரையில் தோன்றும் நடிகர்களின் பெயரை சொன்னால் அவரது தோற்றம், நடை உடை பாவனை, ஸ்டைல் போன்ற அடையாளம் ரசிகர்கள் மனதில் நினைவுக்கு வருவதுண்டு.
ஆனால் திரைக்கு பின்னால் இயங்கி வரும் கலைஞனான இருக்கும் மிஷ்கின் பெயரை உச்சரித்தாலே, கூலிங் கிளாஸ் அணிந்தி உலக சினிமா முதல் உள்ளூர் சினிமா வரை பல விஷயங்களை பேசும் அவரது மோதாவிதனமான பேச்சை யாராலும் அவ்வளவு எளிதாக மறக்க முடியாது.
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகி, கடைசியாக இயக்கியிருக்கும் சைக்கோ வரை இவர் இயக்கிய ஒவ்வொரு படங்களும் காலம்கடந்தும் தமிழ் ரசிகர்களை கொண்டாட வைக்கும் படங்களாக இருக்கின்றன.
த்ரில்லர் ஜானரிலேயே அதிகம் பயணிக்கும் இவரை தமிழ் சினிமாவின் ஹிட்ச்ஹாக் என்று சொல்லும் அளவும் தனது ஒவ்வொரு படத்திலும் ஏதாவதொரு சம்பவத்தை நிகழ்த்தக்கூடியவராக இருந்துள்ளார்.
மிஷ்கின் பின்னணி
மிஷ்கினின் நிஜப்பெயர் சண்முக ராஜா. சென்னையை சேர்ந்த இவர் தனது ஊரைப் பற்றி தெரிந்தால், தனது தெரு அறியப்படும். அதன்மூலம், தன் சாதி வெளியில் தெரியும் எனப் பட்டவர்த்தனமாக, தனது சொந்த ஊரைப் பற்றி மனம் திறந்து பேசாதவர், இயக்குநர் மிஷ்கின்.
இவருடைய பல்வேறு பேட்டிகளில் இருந்து காரைக்குடியிலும், திண்டுக்கல்லிலும் மிஷ்கின் தனது இளமைப் பருவத்தில் வாழ்ந்து இருக்கிறார் என அறியப்படுகிறது. இவரது தந்தை தையல் மிஷின் தைக்கும் தொழிலாளி மற்றும் அவருடன் வசித்த தாய், தம்பி என மிகவும் பின் தங்கிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராக இருந்துள்ளார்.
சினிமா பயணம்
சினிமா மீது மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். சினிமாவில் உதவி இயக்குநராக பணியாற்றுவதற்கு முன்னர் புத்தக கடை ஒன்றில் பணியாற்றியுள்ளார் மிஷ்கின். ரஷ்ய எழுத்தாளர் ஃபியோடர் தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய தி இடியட் நாவலில் இடம்பிடித்திருக்கும் பிரின்ஸ் மிஷ்கின் கதாபாத்திரத்தில் ஈர்க்கப்பட்டு தனது பெயரை மிஷ்கின் என மாற்றிக்கொண்டார்.
இதயம், உழவன், காதல் தேசம், காதலர் தினம் போன்ற காதல் படங்களின் இயக்குநரான கதிரிடம் உதவியாளராக மிஷ்கின் பணியாற்றினார். தனக்கு புத்தகங்கள் வாங்க ஆசைப்பட்டு, மிஷ்கின் பணிபுரியும் கடையில் சென்று, சில புத்தகங்களின் பெயரைக் குறிப்பிட, அதுதொடர்புடைய எண்ணற்ற புத்தகங்களை எடுத்து வெளியில் போட்டிருக்கிறார்,மிஷ்கின். இதைக் கண்டு வியந்த இயக்குநர் கதிர், மிஷ்கினுக்குள் இருக்கும் வாசிப்புத்திறனை அடையாளம் கண்டு, அவரை தனது உதவியாளர் ஆக்கிக்கொண்டார்.
அதன் பிறகு பிரியமுடன், யூத், ஜித்தன் படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வாவிடம் இணை இயக்குநராக பணிபுரிந்து பின்னர் இயக்குநர் ஆனார்.
விஜய்யின் யூத் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்
விஜய் நடித்த யூத் திரைப்படத்தின் பாடல் ஒலிப்பதிவின்போது, கவிஞர் வாலி எழுதிய பாடலை இயக்குநர் வின்சென்ட் செல்வாவுக்கு தெரியாமல் மாற்றிவிட்டார், மிஷ்கின். பாடல் ரெக்கார்டிங் எல்லாம் முடிந்தபிறகு, வேறு வழியில்லாமல் தர்மசங்கடத்தில் அப்படி எழுதப்பட்ட பாடலை இயக்குநர் வின்சென்ட் செல்வா படமாக்கியுள்ளாராம் . அந்த பாடல் தமிழ்நாடு முழுவதும் ஒலித்த ட்ரெண்டிங் பாடலாக மாறிய ஆல்தோட்ட பூபதி. இந்த பாடலை எழுதியவர், கவிஞர் கபிலன். திரையரங்குகளில் அதிகமுறை ஒன்ஸ்மோர் கேட்கப்பட்ட பாடலாக அது மாறியது. இப்பாடல் தந்த மைலேஜ், படத்தை சூப்பர் டூப்பர் ஹிட்டாக்கியது. அப்படி ஒரு சம்பவக்காரன் மிஷ்கின்.
மிஷ்கினின் திரைமொழி
மிக சிறிய பட்ஜெட்டில் உருவாகி பெரிய ஹிட்டான சித்திரம் பேசுதடி படம் தான் மிஷ்கினின் முதல் படம். ஆக்சன் காதல் கலந்த இந்த படத்தில் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் ஈர்த்தார். படத்தில் கமர்ஷியல் விஷயங்களுக்காக எடுக்கப்பட்ட ’வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம்’ பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. இப்படத்தின் பெயரை ஒவ்வொரு பொதுமக்களிடம் கொண்டுசென்று திரையரங்குகள் ஹவுஸ்புல்லாகின.
இதன் பின்னர் இவர் இயக்கிய அஞ்சாதே என்கிற த்ரில்லர் படம் இளம் பெண்களை கடத்தும் கும்பல் பற்றிய கதையாக அமைந்திருந்தது. மூன்று மணி நேரம் ஓடக்கூடிய விறுவிறுப்பான திரைக்கதையுடன் இருக்கும் இந்த படத்தில் பல்வேறு எமோஷன்களை வைத்து கலங்கடித்திருப்பார்கள். குறிப்பாக மேக்கிங்கில் கால்களுக்கு வைத்த லோ ஆங்கிள் ஷாட், மூலம் திரையில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்களை புரிந்து கொள்ள வைக்கும் இவரது வித்தியாசமும், புதுமையுமான மேக்கிங் அப்போது வெகுவாக பேசப்பட்டது.
இந்த படத்துக்கு மிஷ்கின் படம் என்றாலே மிஸ் செய்யமுடியாது என்கிற அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் தனது தனித்துவ மேக்கிங்கால் சபாஷ் பெற்றிருப்பார்.
தான் இயக்கிய நந்தலாலாவில் மனம்பிறழ்ந்தவருக்கும் சிறுவனுக்கும் இருக்கும் பந்தம் பற்றியும் எடுத்து தான் ஒரு வித்தியாசமான கதைசொல்லி என்பதை நிரூபித்தார். யுத்தம் செய் படத்தில்,பெண்களை வன்புணர்வுக்கு ஆளாக்கும் கும்பலை பழிவாங்கும் நடுத்தர வர்க்கத்தின் கதையையும், முகமூடியில் ஒரு சூப்பர் ஹீரோவைப் பற்றியும், ஓநாயும் ஆட்டுக்குட்டியில் இருள் சூழ்ந்த மனிதர்களின் வாழ்வியல் தடத்தையும், பிசாசுவில் நாம் பாசம்செய்யச்செய்யும் பிசாசுவையும், ஷெர்லாக் ஹோம்ஸ் கதையை அடிப்படையாக வைத்து துப்பறிவாளன் படத்தை ஒரு டிடெக்டிவ் புலனாய்வுக் கதையையும், சைக்கோவில் ஒரு பார்வையற்றவரின் வழி கதை சொல்லியும் என ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
நடிகனாக மிஷ்கின்
தான் இயக்கிய நந்தலாலா படம் மூலம் நடிகராக உருவெடுத்தார் மிஷ்கின். தொடர்ந்து சவரக்கத்தி படத்தில் தாதா, சூப்பர் டீலக்ஸ் போன்ற படத்தில் கடவுள் பற்றாளர், மாவீரன், லியோ போன்ற சில படங்களில் வில்லன் என பல்வேறு விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதேபோல் எந்தவொரு படத்தின் நிகழ்ச்சியில் மேடையில் இவர் பேசினாலே ஏதாவதொரு சர்ச்சையை கிளப்புவதோடு, இவரது பேச்சு ட்ரெண்டிங் டாப்பிக்காகவும் மாறிவிடும்.
ட்ரெண்டிங் செட்டிங் இயக்குநர்
சினிமாக்களில் இருக்கும் வழக்கத்துற்கு மாறான காட்சி அமைப்புகள் (ஷாட்கள்), மேடை நாடக நுட்பங்கள், மினிமலிசம், நீளமான ஷாட்கள் என பல்வேறு திரை மொழிகளை தனது படங்களின் காண்பித்து பார்வையாளர்களை மெய் சிலர்க்க வைக்கும் இயக்குநராக திகழ்ந்துள்ளார்.
ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ட்ரெண்ட் செட் இயக்குநர்கள் இருப்பர். அவர்களது கதைக்காகவோ, தேர்ந்தெடுக்கும் கதைக்களத்திற்காகவோ, காட்சி அமைப்புகளுக்காகவோ பிரத்யேகமாக விளங்குவார்கள்.
அப்படி தமிழ் சினிமாவில் மேக்கிங்கில் புதுவிதான ட்ரெண்ட் செட்டிங்கை அமைத்து கொடுத்த நபர், இயக்குநர் மிஷ்கின்.
டிருக்கும் மிஷ்கினுக்கு இன்று பிறந்தநாள்
டாபிக்ஸ்