Mysskin Speech: சரக்கு அடிச்சிட்டு பேசுறேனா?.. கெட்ட வார்த்தை பேசுனா பொறுத்து போங்க’ - கொந்தளித்த மிஷ்கின்!
Mysskin Speech: வாழை படத்தில் ஒரு 8,9 வயது பையனுக்குள் இருக்கும் நட்பு,காதல், சோகம் உள்ளிட்ட உணர்வுகளை மாரி நம்மிடையே காண்பித்து இருக்கிறான். ஒருவன் இறக்கும் தருவாயில் அவனுக்கு அவன் சிறுவயதில் சந்தோஷமாக இருந்த இமேஜும், சோகமாக இருந்த இமேஜும் நினைவுக்கு வரும். -கொந்தளித்த மிஷ்கின்!
Mysskin Speech: வாழை படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. அந்த நிகழ்ச்சியில் பேசிய மிஷ்கின், “கர்ணன் திரைப்படத்தில் ஒரு காட்சி வரும் அந்த காட்சியில் ஒரு அப்பாவும் மகளும் பேருந்து நிலையத்தில் நிற்பார்கள். அப்போது அங்கே வரும் சிலர் அவர்களிடத்தில் தவறாக நடந்து கொள்வார்கள். இதை பார்த்துவிட்டு, என்னுடைய உதவி இயக்குநர்களிடம் அந்த காட்சியை மாரி செல்வராஜ் நன்றாக எடுத்து இருக்கிறான். ஆனால் இதை இன்னும் கொஞ்சம் மெருகேற்ற வேண்டி இருக்கிறது என்று சொல்லி, நாங்கள் டிஸ்கஸ் செய்தோம்.
வாழை படத்தின் இசை வெளியீட்டு நேற்று சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய டைரக்டர் மிஷ்கின், “உண்மையில் ஒரு நல்ல படம் பார்த்தால், ஒரு வாரம் அந்த படத்தை பற்றி அலசி ஆராய்வதுதான் என்னுடைய வேலையாக இருக்கும். அதேபோல ஒரு மோசமான படத்தை பார்த்து விட்டால், அந்த ஒரு வாரம் முழுக்க எனக்கு காய்ச்சல் வந்தது போல இருக்கும். ஆனால் வாழை படத்தை பார்த்த பிறகு, மாரியின் கிராஃப்ட்டை பார்த்து நான் அப்படி அதிர்ச்சியாகி நின்றேன்.
வாழை படத்தில் ஒரு 8,9 வயது பையனுக்குள் இருக்கும் நட்பு,காதல், சோகம் உள்ளிட்ட உணர்வுகளை மாரி நம்மிடையே காண்பித்து இருக்கிறான். ஒருவன் இறக்கும் தருவாயில் அவனுக்கு அவன் சிறுவயதில் சந்தோஷமாக இருந்த இமேஜும், சோகமாக இருந்த இமேஜும் நினைவுக்கு வரும்.
கலைஞனால் மட்டும்தான் செய்ய முடியும்!
அதை சாதாரண மனிதர்கள் வெளியே சொல்லலாம் ஆனால் அதனை ஒரு கலைஞனால் மட்டும்தான் அதை ஒரு நாவலாகவோ அல்லது வேறொரு படைப்பாகவோ படைக்க முடியும். அகிரா குரசேவா உங்களுக்கு இந்தியாவைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், நீங்கள் பதேர் பாஞ்சாலி படத்தை பாருங்கள் என்று சொல்வார். நான் சொல்கிறேன், நீங்கள் தமிழ்நாட்டைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்றால், வாழை படத்தை பாருங்கள்.
இந்த படத்தில் ஒரு டீச்சர் கதாபாத்திரம் வருகிறது. அந்த கதாபாத்திரத்திற்கும், குழந்தை கதாபாத்திரத்திற்கும் இடையேயான உரையாடல்கள் அவ்வளவு அழகாக வந்திருக்கிறது. அந்த டீச்சரையும் அவன் மலையாளத்தில் இருந்து தான் கூட்டிக் கொண்டு வந்திருக்கிறான். தமிழ்நாட்டில் டீச்சர்களே இல்லை போல..
நாகரிகமாக பேசி இருக்கிறேன்
இன்று தான் நான் மிகவும் நாகரிகமாக பேசி இருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் மிகவும் சந்தோஷமாகவும், வருத்தமாகவும் இந்த மேடையை விட்டு இறங்குகிறேன். என்னைப் பற்றி திட்டுகிறவர்களுக்கு எதுவுமே கன்டென்ட் கொடுக்கவில்லையே என்று மனது வருத்தப்படுகிறது. கொட்டுக்காளி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் நான் ஆக்ரோஷமாக பேசினேன். குத்து டான்ஸ் ஆடினேன். அதற்கு பெரிய மரியாதை கிடைத்தது. கிட்டத்தட்ட 50 பேர் காணொளிகளை வெளியிட்டு என்னை பயங்கரமாக திட்டினார்கள்.
உண்மையில் மேடையில் பேசுவது போல போர் அடிக்கும் விஷயம் வேறு எதுவுமே கிடையாது. நான் அங்கு பெர்ஃபார்மன்ஸ் செய்தேன். நான் ஒரு சோகமான கோமாளி. ஆகையால் நான் கெட்ட வார்த்தைகளை பேசுவதை தயவு செய்து பொறுத்துக் கொள்ளுங்கள். நான் மேடையில் பேசுவதை பார்த்து விட்டு, நான் சரக்கு அடித்து விட்டு பேசுகிறேன் என்றெல்லாம் சொல்கிறார்கள். உண்மையில் நான் சரக்கடித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. நான் தற்போது வொர்க் அவுட் செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவில் முதலில் சிக்ஸ் பேக் கொண்ட டைரக்டராக நான் இருப்பேன். அதற்காக நான் ரெடியாகி கொண்டிருக்கிறேன்.” என்று பேசினார்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்