தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடுத்தடுத்து வெளியாகும் புரோமோக்கள்! பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆக்ரோஷ நிலை!

அடுத்தடுத்து வெளியாகும் புரோமோக்கள்! பிக்பாஸ் போட்டியாளர்களின் ஆக்ரோஷ நிலை!

Suguna Devi P HT Tamil

Dec 04, 2024, 03:30 PM IST

google News
இன்றைய டாஸ்க் தொடர்பாக இன்று மட்டும் தொடர்ந்து ஆறு ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ஆறு ப்ரோமோக்களிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டும் கத்திக் கொண்டும் இருக்கின்றனர்.
இன்றைய டாஸ்க் தொடர்பாக இன்று மட்டும் தொடர்ந்து ஆறு ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ஆறு ப்ரோமோக்களிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டும் கத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

இன்றைய டாஸ்க் தொடர்பாக இன்று மட்டும் தொடர்ந்து ஆறு ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ஆறு ப்ரோமோக்களிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டும் கத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

தமிழ் பிக் பாஸ் சீசன் 8 கடந்த அக்டோபர் மாதம் ஆறாம் தேதி தொடங்கி பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த முறை தொகுப்பாளராக கமலஹாசனுக்கு பதிலாக நடிகர் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்பத்தில் இந்த போட்டியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக சிலரும் கலந்து கொண்டனர். ஆரம்பத்திலிருந்து பிக் பாஸ் சீசன் 8 முற்றிலும் குளறுபடியாகவே இருந்து வருகிறது. ரசிகர்களும் பல குற்றங்களை சாட்டி வருகின்றனர்.

ரசிகர்கள் அதிகம் இல்லை

 அதிலும் கடந்த சீஷன்களில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பது வழக்கம். ஆனால் இந்த சீசன் 8 கலந்து கொண்ட போட்டியாளர்களில் எந்த ஒரு குறிப்பிட்ட போட்டியாளருக்கும் அதிக ரசிகர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தொகுப்பாளராக களம் இறங்கியுள்ள விஜய் சேதுபதியின் மீதும் பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் ”நானும் பொம்மை நீயும் பொம்மை என்ற பொம்மை’ என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதனை போட்டியாளர்கள் மிகவும் கடுமையாகவும் சண்டையிட்டும் விளையாடினர். மீண்டும் இந்த வாரம் தற்போது டெவில் ஏஞ்சல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

 இந்த டாஸ்க் தொடர்பாக இன்று மட்டும் தொடர்ந்து ஆறு ப்ரோமோக்களை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அந்த ஆறு ப்ரோமோக்களிலும் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டும் கத்திக் கொண்டும் இருக்கின்றனர். இந்த வீடியோ வெளியானதில் இருந்து ரசிகர்கள் பலர் பிக்பாஸ் 8 கடுமையாக விமர்சித்து வருகின்றனர். ஒரு போட்டியாளரும் நிதானமாக விளையாடவில்லை எனவும் தெரிவித்து வருகின்றனர்.

சூடு பிடிக்கும் வாக்குவாதம்

பிக் பாஸ் சீசன் 18 இன்று கொடுக்கப்பட்ட டெவில் விஷஸ் ஏஞ்சல் டாஸ்க் ஏஞ்சல்களை டெவிலாக இருப்பவர்கள் கோபப்படுத்தவோ, அழுக வைக்கவோ அல்லது நிதானம் இழக்கச் செய்யவோ செய்ய வேண்டும். அப்படி செய்யும் பட்சத்தில் ஏஞ்சல்களாக இருப்பவர்கள் தங்களது ஹார்ட்களை இழக்க நேரிடும். இவ்வாறு இழந்தால் அதனை பெறும் டெவில் போட்டியாளருக்கு நாமினேஷனில் இருந்து விலக்கு அளிக்கப்படும். இதுவே இந்த டாஸ்கின் முக்கிய நோக்கமாகும்.

 இந்த டாஸ்கில் ஜெஃப்ரி, சத்யா அன்ஷிதா, பவித்ரா உள்பட பலர் ஏஞ்சல்களாகவும், தீபக், தர்சிகா, மஞ்சரி, ஜாக்குலின் ஆகியோர் டெவில்களாகவும் உள்ளனர். இது தொடர்பான வெளியான முதல் ப்ரோமோவலையே  ஏஞ்சலாக இருக்கும் அன்சிதா மிகவும் கோபமாக கத்துகிறார். மேலும் டெவில்களாக இருக்கும் ஜாக்குலின் மற்றும் சௌந்தர்யா ஆகிய இருவரும் சேர்ந்து தர்ஷிகா உடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். மேலும் இருவரும் போடி என அழைத்து மிகவும் வசைப்பாடுகின்றனர். இந்த நிலையில் அடுத்தடுத்த ப்ரோமோக்களிலும் போட்டியாளர்கள் தங்களை ஒருவருக்கொருவர் மட்டம் தட்டி பேசுவது மட்டுமல்லாமல் கீழ்த்தரமான வார்த்தைகளை உபயோகித்தும் பேசுகின்றனர். இதன் காரணமாக பிக் பாஸை ரசிகர்கள் முழுவதும் கலாயத்து பதிவிட்டு வருகின்றனர். இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் மோசமாக போட்டியில் விளையாடுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வார இறுதி எபிசோடில் தொகுப்பாளராக இருக்கும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை மிகவும் கண்டிக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி