பிக்பாஸ் வீட்டில் 28 நாட்கள்.. கவலையோடு வெளியேறிய சிவகுமார்.. அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  பிக்பாஸ் வீட்டில் 28 நாட்கள்.. கவலையோடு வெளியேறிய சிவகுமார்.. அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பிக்பாஸ் வீட்டில் 28 நாட்கள்.. கவலையோடு வெளியேறிய சிவகுமார்.. அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Divya Sekar HT Tamil
Dec 03, 2024 01:15 PM IST

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்ட சிவக்குமார். 28 நாட்களில் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி இருக்கிறார். அவர் வாங்கிய சம்பளம் குறித்து பார்க்கலாம்.

பிக்பாஸ் வீட்டில் 28 நாட்கள்.. கவலையோடு வெளியேறிய சிவகுமார்.. அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் வீட்டில் 28 நாட்கள்.. கவலையோடு வெளியேறிய சிவகுமார்.. அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சுவாரசியமே இல்லாத பிக் பாஸ் போட்டியாளர்களை வெளியேற்றும் விதமாக பிக் பாஸ் 8 ஆவது சீசன் வீட்டில் வாரம் வாரம் எலிமினேஷனுக்கான நாமினேஷன் நடக்கும். நாமினேஷன் பட்டியலில் உள்ள மற்ற போட்டியாளர்கள் மக்களின் வாக்குகளின் அடிப்படையில் காப்பாற்றப்படுவர். குறைவான வாக்குகளை பெற்றவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர்.

வைல்டு கார்டு என்ட்ரி

இதுவரை, பிக்பாஸ் தமிழ் 8 இல் நான்கு பெண் மற்றும் இரண்டு ஆண் போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சிவகுமாரையும் சேர்த்து தற்போது மூன்று ஆண் போட்டியாளர்கள் வெளியேறி இருக்கிறார்கள். பிக் பாஸ் தமிழ் 8 இல் 18 போட்டியாளர்கள் பங்கேற்ற நிலையில் 24 மணி நேரத்தில் சாச்சனா முதல் போட்டியாளராக எலிமினேட் செய்யப்பட்டார். பின்னர் அடுத்த வாரமே மீண்டும் என்டிரி கொடுத்தார்.

வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர்களாவது பிக் பாஸ் வீட்டினை சுவாரசியமாக மாற்றுவார்கள் என எதிர்பார்த்த நிலையில், அவர்கள் நிகழ்ச்சியை இன்னும் சொதப்பி வந்தனர். இதனால், பிக் பாஸ் மீதான விருப்பம் மக்கள் மத்தியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வந்தது.

சிவகுமார் எலிமினேஷன்

இப்படி 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் இதுவரை ரவீந்தர், அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா ஆகிய 5 போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி உள்ளனர். 6 ஆவதாக சிவகுமார் வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராக கலந்துகொண்ட சிவக்குமார். 28 நாட்களில் இந்த நிகழ்ச்சியை விட்டு எலிமினேட் ஆகி இருக்கிறார். அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி அவர் தங்கி இருந்த 28 நாட்களுக்கு மொத்தமாக அவருக்கு 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த சம்பள பணம் முழுமையாக அவர்கள் கைக்கு கிடைக்காது. இதில் ஜிஎஸ்டி எல்லாம் பிடித்தம் போக இன்னும் ஒரு சில வாரங்கள் கழித்து தான் சிவகுமாருக்கு பணம் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

சுஜா வருணி

முன்னதாக சிவகுமார் வெளியேற்றப்பட்டது தொடர்பாக சிவகுமாரின் மனைவியும், நடிகையுமான சுஜா வருணியும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது அதிருப்தியை பகிர்ந்து உள்ளார். அதில், ஆறாவது இடத்தில் இருந்த சிவகுமார் எவிக்ட் செய்யப்பட்டு இருக்கிறார். ஆனால் கடைசி இடத்தில் இருந்த சாச்சனா காப்பாற்றப்பட்டு இருக்கிறார். அவரை விஜய் சேதுபதி காப்பாற்றிவிட்டார் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.