தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  சூர்யா 45ல் அதிரடி மாற்றம்! இசைப் புயல் இடத்தை நிரப்ப வந்தது இவரா? என்ன நடந்தது?

சூர்யா 45ல் அதிரடி மாற்றம்! இசைப் புயல் இடத்தை நிரப்ப வந்தது இவரா? என்ன நடந்தது?

Dec 09, 2024, 11:09 AM IST

google News
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க இருக்கும் புதிய படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கரை அறிவித்து படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

கங்குவா திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சூர்யா தரப்பிலிருந்து வந்ததோ வேறு பதில்கள்.

சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் இந்த 45வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் திரைப்படத்திற்குப் பின்னரே சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அவர் கார்த்திக் சுப்புராஜா இயக்கத்தில் நடித்து முடித்த திரைப்படம் விரைவில் வெளியீட்டிற்கு வரவுள்ளது.

சூர்யா 45

இப்போது இந்தத் தகவலை படக்குழு உறுதி செய்தது மட்டுமின்றி, சூர்யா 45 படத்திற்கான அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியிடப்பட்டு பூஜை, படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.

ஆர்.ஜே. பாலாஜி- சூர்யா கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என படக்குழு அதிகார்ப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இசையமைப்பாளர் மாற்றம்

இந்நிலையில், சூர்யா 45 படத்திலிருந்து ஏ.ஆர்.ரஹ்மான் விலகியதாக சில நாட்களாக சினிமா வட்டாரத்தில் தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அந்தத் தகவலை படக்குழுவே உறுதி செய்துள்ளது.

படக்குழு வெளியிட்டுள்ள புதிய தகவலின் படி, சாய் அபயங்கர் சூர்யா 45 படத்தின் புதிய இசையமைப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கட்சி சேர, ஆச கூட எனும் ஆல்பம் பாடல்கள் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர்.

முன்னதாக, லோகேஷ் கனகராஜ், பாக்யராஜ் கண்ணன், ராகவா லாரன்ஸ் கூட்டணியில் உருவாகிவரும் பென்ஸ் படத்திற்கு இவர் இசையமைக்க ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.ரஹ்மான் என்ன ஆனார்?

சூர்யா 45 படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசையமைக்க உள்ளார் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்பட்டு வந்த நிலையில், அவர் அப்படத்திலிருந்து விலகியதற்கு என்ன காரணம் என இதுவரை அறிவிக்கப்படவில்லை. அத்துடன், சிலர் அவரது மனைவி விவாகரத்து அறிவித்ததால், அவர் மன உளைச்சலில் இருப்பதாகவும் இதனால் அவர் ஏற்கனவே கமிட் ஆன படங்களுக்கு மட்டும் தற்போது இசையமைக்க உள்ளதாகவும் பல தகவல்களை கூறி வருகின்றனர். மேலும், சூர்யா 45 படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு அறிவிக்கப்பட்டுள்ளார்.

சூர்யா 45 பட பூஜை

முன்னதாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பிரசித்தி பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர்கள் பங்கேற்றார்கள். சூர்யா 45 படத்தின் பூஜை விடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொள்ளாச்சியில் ஷூட்டிங்

கடந்த சில நாள்களுக்கு முன் சூர்யா 45 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. விபூதி, குங்குமம் பூசப்பட்ட அரிவாள், ஈட்டியுடன் வித்தியாசமாக படத்தின் போஸ்ட்ர் அமைந்திருந்தது. தற்போது படம் பூஜையுடன் தொடங்கியிருக்கும் நிலையில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி