சூலம்.. அரிவாள்.. குதிரை.. அடுத்த மூக்குத்தி அம்மனுக்கு தயாராகிவிட்டாரா ஆர்.ஜே. பாலாஜி? சூர்யா 45 அப்டேட்
கங்குவா படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

சூலம்.. அரிவாள்.. குதிரை.. அடுத்த மூக்குத்தி அம்மனுக்கு தயாராகிவிட்டாரா ஆர்.ஜே. பாலாஜி? சூர்யா 45 அப்டேட்
கங்குவா திரைப்படத்திற்குப் பின் நடிகர் சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், சூர்யா தரப்பிலிருந்து வந்ததோ வேறு பதில்கள்.
சூர்யா கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சூர்யாவின் இந்த 45வது படத்தை நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி இயக்கவுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, இந்தத் திரைப்படத்திற்குப் பின்னரே சூர்யா வாடிவாசல் திரைப்படத்தில் நடிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா 45
இப்போது இந்தத் தகவலை படக்குழு உறுதி செய்தது மட்டுமின்றி, தற்போது இந்தப் படத்திற்கான அடுத்த அப்டேட் ஒன்றையும் கொடுத்துள்ளது.