Kayal serial: பத்திரிகை வைத்த கயல்.. கொக்கரித்த வேதவள்ளி.. விருந்தாளியாக வந்த நெஞ்சுவலி! - கயல் சீரியலில் இன்று!
Aug 20, 2024, 01:39 PM IST
Kayal serial: அங்கே கயலை பார்த்த வேதவள்ளி, அவளை கடுமையாக சாடினாள். அந்த சாடலில் கொந்தளித்த வேதவள்ளிக்கு, திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. இதையடுத்து அனைவரும் பதறிப் போய் நிற்கின்றனர். - கயல் சீரியலில் இன்று!
Kayal serial: இன்றைய கயல் சீரியல் புரோமோவில், கயலும் அவரது குடும்பமும், வேதவள்ளியை திருமணத்திற்கு அழைக்க பத்திரிகையோடு அவளது வீட்டிற்கு சென்றிருந்தார்கள்.
ஆனால், அங்கே கயலை பார்த்த வேதவள்ளி, அவளை கடுமையாக சாடினாள். அந்த சாடலில் கொந்தளித்த வேதவள்ளிக்கு, திடீரென்று நெஞ்சுவலி வந்துவிட்டது. இதையடுத்து அனைவரும் பதறிப் போய் நிற்கின்றனர்.
நேற்றைய எபிசோடில் நடந்தது என்ன?
நேற்றைய கயல் எபிசோடில், கௌதம்தான் கயலுக்கு பெரிய டார்ச்சர் ஆக இருந்திருக்கிறான். அதுமட்டுமில்லாமல், அவளை அடைய ஆசைப்பட்டு இருக்கிறான் என்பதை கீதா மூலம் எழில் தெரிந்து கொண்டான்.
இதையடுத்து எழில் கோபத்தின் உச்சிக்கே சென்றான். இதற்கிடையே, ஒரு பெண்ணிடம் தன்னுடைய கேபினில் வைத்தே, கௌதம் தன்னுடன் இரவு படுக்கைக்கு வருமாறு வற்புறுத்திக் கொண்டிருந்தான். இதையடுத்து அவன் பின்னால் இருந்து துணியை போர்த்திய எழில், கௌதமை வெளு வெளு என்று வெளுத்து தள்ளி விட்டான்.
கயலுக்கு தெரியக்கூடாது
இதில் கௌதமுக்கு பலத்த காயம் ஏற்பட, அவனை அப்படியே அங்கேயே விட்டுச் சென்றான் எழில். இதையடுத்து, மருத்துவமனையில் இருந்த செவிலியர் ஒருவர், மிகவும் சந்தோஷத்துடன், எதுவும் தெரியாது போல, கௌதமுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்தார். இது ஒரு கட்டத்தில் கயலுக்கு தெரிய வருகிறது. ஆனால், எழிலோ இது கயிலுக்கு தெரியக்கூடாது என்று நினைத்து இருந்தான். ஆனால் ஒரு கட்டத்தில் அது கயலுக்கு தெரிந்து விட்டது.
இதையடுத்து கயல், எனக்கு ஒன்று என்றால், உனக்கு கோபம் இப்படி வருகிறது. அவனை அப்படி போட்டு மொத்து, மொத்து என மொத்திருக்கிறாய். எனக்கு இது மிகவும் பிடித்திருக்கிறது. என்னை பாதுகாக்க ஒருவன் வந்திருக்கிறான் என்று நினைக்கும் பொழுது சந்தோஷமாக இருக்கிறது என்று காதலை வெளிப்படுத்தினாள்.
தொடர்ந்து பேசிய அவள், ஒரு பெண்ணுக்கு ஒரு ஆண் துணையாக இருக்கிறான் என்பது எவ்வளவு பெரிய நிம்மதியாக இருக்கிறது என்று சொன்னாள். அத்துடன் எனக்கு ஒரு எழில் கிடைத்திருப்பது போல இங்குள்ள எல்லா செவிலியர்களுக்கும், ஒரு நல்ல துணை கிடைத்து அவர்கள் அனைவரும் கௌதமை மொத்த வேண்டும் என்றாள்.
இதையடுத்துப் பேசிய எழில், என்னுடைய கோபத்திற்கு இன்றே அவனை கொன்று போட்டு இருப்பேன். ஆனால் கல்யாண வேலை இருக்கிறது. இந்த நேரத்தில் போலீஸ் ஜெயில் என்று அலைந்து கொண்டிருந்தால் நன்றாக இருக்காது. அதனால்தான் அவனை விட்டு வைத்தேன் என்றான்.
அப்போது பேசிய கயல், நான் கௌதமை திட்டி பார்த்து விட்டேன். அடித்து கூட பார்த்து விட்டேன். ஆனால், அவன் கடைசி வரை என்னிடம் தவறாகவே நடந்து கொண்டிருந்தான். அவன் இந்த மருத்துவமனையில் பெரிய மருத்துவர். அதனால் அவனால் என்னுடைய வேலைக்கு ஆபத்து வந்து விடுமோ, அதன் காரணமாக குடும்பம் கஷ்டப்பட்டு விடுமோ என்பதற்காகத்தான் எல்லாவற்றையும் தாங்கி, பொறுமையாக சென்று கொண்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவளிடம் இருந்து தப்பித்து சம்பளத்தை வாங்குவதற்குள் உயிரே போய்விடும் என்று சோகமாக சொன்னாள். தொடர்ந்து இருவரும் பைக்குச் சென்றார்கள் என்றாள்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்