Singappenne serial: சுயம்பு முகத்தில் கரி; ஆனந்திக்கு ரூட் விடும் மகேஷ், அன்பு! சிங்கப்பெண்ணே சீரியலில் இன்று!
Aug 20, 2024, 12:58 PM IST
Singappenne serial: இன்னொரு பக்கம் சுயம்புடம் பேசும் மித்ரா, இது ஒன்று போதும் ஆனந்தியை மகேஷிடம் இருந்து நான் பிரித்து விடுவேன் என்ற சபதம் ஏற்கிறாள். -
Singappenne serial: இன்று வெளியாகி இருக்கும் சிங்க பெண்ணே சீரியல் புரோமோவில் மித்ராவிடம் மகேஷ், நான் ஆனந்தியை கல்யாணம் செய்து கொள்வதில் உனக்கு விருப்பம் இல்லையா என்று கேட்கிறான்.
இதை அன்பு பார்த்து விடுகிறான். இன்னொரு பக்கம் சுயம்புடம் பேசும் மித்ரா, இது ஒன்று போதும் ஆனந்தியை மகேஷிடம் இருந்து நான் பிரித்து விடுவேன் என்ற சபதம் ஏற்கிறாள். மற்றொரு பக்கம் அப்பா அம்மா சொன்னதை நினைத்து, வேலு வருந்தி தன்னுடைய நண்பனிடம் புலம்பி அழுகிறான்.
கடந்த எபிசோடில் நடந்தது என்ன?
செவரக்கோட்டை நடக்கும் திருவிழாவிற்கு ஆனந்தியும் அவர்களது அலுவலகத்தில் வேலை பார்க்கும் மகேஷ், அன்பு உட்பட அனைவரும் வந்திருந்தார்கள். அப்போது ஆனந்திக்கு பரிசம் போட்ட சுயம்பு லிங்கம், அவர்களுக்கு பிரச்சினை கொடுக்க, அந்த பிரச்சினை அவனை மித்ராவுடன் கைகோர்க்க வைத்து ஆனந்தியை எதிர்க்க வைத்தது.
அதன் பலன் மித்ரா, திட்டமிட்டு கோயில் பானையை தட்டி விட, அது அவபகுணம் என்று பேச வந்த சுயம்புலிங்கம் ஆனந்தியை வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசினான். இதை அன்பும் எதிர்த்து கேள்வி கேட்க சுயம்புவிற்கும் அவர்களுக்கும் இடையில் மோதல் வெடிக்கிறது. அந்த மோதல் கடைசியில் கோயில் திருவிழா கயிறு இழுக்கும் போட்டியில் வந்து நின்றது.
கயிறு இழுக்கும் போட்டியில் வென்ற அன்பு
இந்த நிலையில் நேற்றைய தினம் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது. பரபரவென விறுவிறுவென நடைபெற்ற இந்த போட்டியில், சுயம்புலிங்கம் தரப்பு தோல்வியை தழுவியது. இதையடுத்து அந்த வெற்றியை ஆனந்தியும், அவர்களது குழுவும் பெரும் கொண்டாட்டமாக கொண்டாடி, அன்பையும் மகேஷையும் பாராட்டி தள்ளினார்கள்.
இதற்கிடையே, போட்டியில் தோற்ற கடுப்பில் இருந்த சுயம்புவிடம் வந்த மகேஷ், ஆனந்தியை தொட வேண்டும் என்றால், எங்களைத் தாண்டித்தான் உன்னால் தொட முடியும் என்று சவால் விட்டான். ஏற்கனவே பொங்க பானை கீழே விழுந்ததால், அது வீட்டில் உள்ளவர்கள் சொத்த பத்தமாக இல்லை என்பதை குறிக்கும் என்று ஆனந்தியை தீ மிதிக்க பூசாரி மறுத்தார். ஆனால் எதிர்பாராத விதமாக சுயம்பு ஆனந்தி பக்கம் நின்ற நிலையில், ஊர் தலைவர் என்பதால், பூசாரி ஏதும் சொல்ல முடியாமல் நிற்கிறார்.
தீ மிதிக்க ரெடியான ஆனந்தி
கடைசியாக, ஆனந்தி தீ மிதிப்பதற்கு அவர் ஒத்துக் கொண்டார். இதையடுத்து ஆனந்தி தீ மிதிப்பதற்காக காப்பு கட்டும் வரிசையில் நின்றாள். அப்போது பூசாரி நன்றாக வேண்டிக் கொண்டு காப்பைக் கட்டிக் கொள் என்று சொல்ல, ஆனந்தியோ முதலில் என்னுடைய அக்காவிற்கு திருமணம் நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் காப்பு கட்டி, இரண்டு வருடமாக தீ மிதித்தேன்.
ஆனால், இந்த வருடம் என்னுடன் வந்திருக்கும் இவர்களின் கனவு நிறைவேறுவதற்கும் சேர்த்தும் என்னுடைய அண்ணன் வேலுவிற்காகவும், நான் தீ மிதிக்கிறேன் என்று சொல்ல, ஆனந்தியின் அம்மா இதைக் கேட்டு கடுப்பானாள். நாம் இப்படிப்பட்ட நிலைக்கு கொண்டு வந்தவனே வேலுதான்.
மனம் எப்போதும் தயாராக இருக்காது
அப்படி இருக்கும் பொழுது, அவனுக்காக நீ தீ மிதிக்கிறேன் என்கிறாயே என்று சொன்னாள். இதையடுத்து பொங்கிய ஆனந்தியின் அப்பா, ஆனந்தியிடம் நீ என்ன சொன்னாலும் சரி, அவன் என்னுடைய பிள்ளையே கிடையாது. அவனை ஏற்றுக் கொள்ள என்னுடைய மனம் எப்போதும் தயாராக இருக்காது என்றார். அதையே ஆனந்தியின் அம்மாவும் அப்படியே வழி மொழிந்தார்.
இதற்கிடையே ஆனந்தி மீது காதல் வைத்திருக்கும் அன்பு, ஒரு பக்கம் நான்தான் அழகன் என்று ஆனந்தியிடம் திருவிழா முடிவதற்குள் சொல்லி, அவளிடம் சம்மதம் வாங்க வேண்டும் என்று அம்மனிடம் வேண்டிக் கொள்ள, இன்னொரு பக்கம் மகேஷ் ஆனந்தியின் அப்பா எனக்கு ஆனந்தியை கட்டிக் கொடுக்க நீ தான் உதவ வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறான். இங்கே இப்படி ஒரு முடிச்சு விழ, இன்னொரு பக்கம் வேலு, அப்பா, அம்மா தன்னை சாடியதை தூரத்தில் நின்று பார்த்து அழுது கொண்டிருந்தான். அத்துடன் நேற்றைய எபிசோட் முடிவடைந்தது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
டாபிக்ஸ்