தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of Song : மேஜையை தட்டி மெட்டு போட்ட வித்யாசாகர்..வைப் சாங் கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி?

Story Of Song : மேஜையை தட்டி மெட்டு போட்ட வித்யாசாகர்..வைப் சாங் கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி?

Divya Sekar HT Tamil

Sep 10, 2024, 12:26 PM IST

google News
Story Of Song : கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி தெரியுமா? இதற்கு ஒரு சுவாரசிய கதையே உண்டு. இந்த பாடலை எழுதியவர் யுகபாரதி.இப்பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.
Story Of Song : கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி தெரியுமா? இதற்கு ஒரு சுவாரசிய கதையே உண்டு. இந்த பாடலை எழுதியவர் யுகபாரதி.இப்பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

Story Of Song : கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி தெரியுமா? இதற்கு ஒரு சுவாரசிய கதையே உண்டு. இந்த பாடலை எழுதியவர் யுகபாரதி.இப்பாடல் உருவான கதை குறித்து பார்க்கலாம்.

2004ஆம் ஆண்டு, ஏப்ரல் 17ஆம் தேதி, தரணி இயக்கத்தில் விஜய், திரிஷா,பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம், கில்லி.கில்லி படத்தில் த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி, தாமு, மயில்சாமி, ஜானகி சபேஷ், நான்சி ஜெனிபர், நாகேந்திர பிரசாத், பொன்னம்பலம் மற்றும் பாண்டு ஆகியோர் நடித்து உள்ளனர். படத்திற்கான இசையை வித்யாசாகர் இசையமைத்துள்ளார், கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார், பரதன் வசனம் எழுதினார்.

புயல் கிளப்பிய படம்தான் கில்லி

பெயருக்கு ஏற்றாற்போல் புயல் கிளப்பிய படம்தான் கில்லி. இயக்கம் மற்றும் திரைக்கதை தரணி. பரபரப்பான திரைக்கதை, படம் துவங்கியது முதல் முடியும் வரை ஒரு இடத்தில் கூட தொய்வு இருக்காது. பரபர காட்சிகள் பரவசப்படுத்தும். காதல் காட்சிகள் கவரும் வகையில் இருக்கும். படம் முழுவதுமே அனல் கிளப்பிய அனைவரும் ரசித்த ஒரு படமாக கில்லி இருந்தது.

இப்படத்தில் வேலுவின் தந்தை தனலட்சுமியை கண்டுபிடிப்பாரா? தனலட்சுமி அமெரிக்கா செல்வாரா? வேலு கபடி போட்டியில் வெல்வாரா? முத்துப்பாண்டி, தனலட்சுமியை கரம் பிடிப்பாரா? என்பதுதான் படத்தின் பரபரப்பான கிளைமேக்ஸ். படம் துவங்கியது முதல் இறுதி வரையே பரபரபப்பு, விறுவிறுப்புதான்.

வித்யாசாகரின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட்

வித்யாசாகரின் இசையில் அத்தனை பாடல்களும் ஹிட். கபடி கபடி, அர்ஜீனரு வில்லு, ஷாலாலா, அப்படிப்போடு போடு, சூரத்தேங்காய், கொக்கரக்கொக்கரக்கோ, காதலா காதலா ஆகிய பாடல் அனைத்தும் இன்றளவும் விரும்பி கேட்கப்படும் பாடல்களாக உள்ளது.c

கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி

கொக்கரக் கொக்கரக்கோ பாடல் உருவானது எப்படி தெரியுமா? இதற்கு ஒரு சுவாரசிய கதையே உண்டு. இந்த பாடலை எழுதியவர் யுகபாரதி. தெலுங்கு வெர்ஷனில் செப்பவே சிறுகாலி என்று மெல்லிசையாக வரும் இந்த பாடலை இசைமைப்பாளர் வித்யா சாகர் கில்லி படத்தில் துள்ளல் இசையாக மாற்றினார்.

செப்பவே சிறுகாலி என்றால் பொழுதுவிடிந்து விட்டது நல்லகாலம் பொறந்துவிட்டது என்று அர்த்தமாம். அதாவது அப்பெண்ணுக்கு நம்பிக்கை தரும் வகையில் அந்த வார்த்தையை பயன்படுத்தி தெலுங்கில் அந்த பாடலை உருவாக்கினார்களாம். ஆனால் கொக்கர கொக்கரகோ என மாற்றி துள்ளல் இசையாக நாம் பயன்படுத்தி இருப்போம். அதேபோல இப்பாடலின் மெட்டை ஆர்மோனிய பெட்டியை வைத்து வித்தியசாகர் வாசிக்கவில்லையாம்.

இசைக்கூடத்திற்கு வெளியே உள்ள மேஜையை தட்டி அதற்கான மெட்டை போட்டு காண்பித்தாராம். பின்னர் யுகபாரதி அந்த மெட்டுக்கேற்ப தெலுங்கு பாடலின் அர்த்தத்தை உணர்ந்து கொக்கர கொக்கரகோ என வார்த்தையை போட்டு பாடலை எழுதினாராம். 

அதாவது விடியலை உணர்த்த கோழி கூவும் அந்த ஒலியை வைத்து அந்த வார்த்தையை பயன்படுத்தினாராம் யுகபாரதி. அப்படி உருவான பாடல் கொக்கர கொக்கரகோ பாடல். இன்று வரை இப்பாடலை கேட்டால் வைப் பண்ணாதவர்கள் இருக்க முடியாது. என்றும் மவுசி குறையாத துள்ளல் பாடல் தான் இந்த கொக்கர கொக்கரகோ பாடல்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.
அடுத்த செய்தி