Story of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள்..தற்கொலை செய்த காதல் ஜோடி! கும்கி பாடல் பிறந்த கதை சொன்ன யுகபாரதி-lyricwriter yugabharathi talks about making of kumki movie songs - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Story Of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள்..தற்கொலை செய்த காதல் ஜோடி! கும்கி பாடல் பிறந்த கதை சொன்ன யுகபாரதி

Story of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள்..தற்கொலை செய்த காதல் ஜோடி! கும்கி பாடல் பிறந்த கதை சொன்ன யுகபாரதி

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Sep 04, 2024 12:13 AM IST

Story of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள் வைத்து கும்கி படத்தின் பாடல்கள் எழுதினாலும், கடைசி அறுவடை பாடலுக்கு தற்கொலை செய்த காதல் ஜோடி செய்தியின் தாக்கத்தால் பாடல் எழுதியதாக பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார்.

Story of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள்..தற்கொலை செய்த காதல் ஜோடி! கும்கி பாடல் பிறந்த கதை சொன்ன யுகபாரதி
Story of Songs Kumki: சிம்பிளான பாடல் வரிகள்..தற்கொலை செய்த காதல் ஜோடி! கும்கி பாடல் பிறந்த கதை சொன்ன யுகபாரதி

கும்கி படத்தின் பாடல்கள் எழுதியதன் பின்னணி குறித்து பிரபல நிகழ்ச்சி ஒன்றில் யுகபாரதி விரிவாக பேசியுள்ளார். படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களையும் எளிதாக எழுதிய அவர், அறுவடை பாடலை மிகவும் சிரமம்பட்டு எழுதியதாக கூறியுள்ளார்.

கும்கி பாடல்கள் பிறந்த கதை

கும்கி படத்தின் பாடல்கள் பற்றி திருச்சியில் நடைபெற்ர புத்தக நிகழ்வு நிகழ்ச்சியில் யுகபாரதி பேசியதாவது, "பிரபு சாலமன் என்னிடம் சொல்லும்போது தமிழில் இதுவரை வரவே வராத மாதிரி ஒரு பாடல் இருக்க வேண்டும் என்றார். அப்போதே நாம் வந்த மாதிரியே பாட்டு எழுத வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.

எப்போதும் டைரக்டர் சொல்ற விஷயத்தை மாற்றி எழுதினால் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது. அப்படிதான் நிறைய பாடல் எழுதி இருக்கிறேன். ஆனால் நாம் மாற்றியதை இயக்குநரிடம் சொல்லாமல் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஈகோ பிரச்னை வரலாம்.

அப்படித்தான் கும்கி படத்தின் முதல் பாடலாக அவர் சொல்லலை என்றார். ஆரம்பத்திலேயே நெகடிவ் ஆக உள்ளது. பாசிடிவாக சொல்லும்படி சொன்னேன். யானையில் ஊருக்குள் வரும் ஹீரோ, ஹீரோயினா பார்க்கிறான். அப்போ அவனுக்கு ஒன்னும் புரியல, எக்பிரஸ் பன்ன முடியலுன்னு சொல்லும்போது இமான் ட்யூன் போட்டார்.

ஒன்னும் புரியல, சொல்ல தெரியல என்ற வார்த்தையில் தொடங்கி பல்லவியை கூறினான். நான் சொன்னதே சொல்றேன் என பிரபு சாலமன் ஷாக்காக பார்த்தால். ஆனால் இமான் இந்த வார்த்தை பொருத்தமாக இருக்கும் என கூறினார்.

இதன் பின்னர் அடுத்த பாட்டாக யானை மேல் ஹீரோயின் ஏறுனவுடன் வரும் சந்தோஷத்தை கூறும் விதமான பாடல் என்றார். அதற்கு ஏற்றார் போல் ஜய்யய்யோ ஆனந்தமே என்ற வரிகளை கூறினேன். முதலில் ஐய்யயோ என்ற வார்த்தையை கேட்டு பிரப சாலமன் ஆட்சோபனை தெரிவித்தார்.

கம்பர் எழுதிய கவிதை சிலவற்றை சொல்லி, தமிழ் மக்கள் சாதரணமாக இலக்கியம் பேசுகிறார்கள் என சமாதானப்படுத்தினேன். அற்புதம் என ஒகே செய்தார்.

மூன்றாவது பாடல் அடுத்த பாடலுக்கான கம்போசிங்கில் உட்கார்ந்தோம். பிரியும் பாடல் பற்றி ஏற்கனவே அவர் சொல்லி இருந்ததால் எப்போ புள்ள சொல்ல போற என்ற வரியை மனதில் வைத்து எழுதியிருந்தேன். இதைப்பற்றி இமானிடம் முன்னரே நான் கூற, அதற்கு ஏற்ப ட்யூன் இமான் போட்டிருந்தார். டைரடக்டர் வந்தவுடம் அதை கேட்டு ஒகே சொல்லிட்டார்.

சொல்லை பற்றி எழுதிய காதல் பாடல்

அடுத்த பாடல் காதல் சொல்லிவிட்டால் அந்த இடத்தில் ஒரு பாடல் வேணும் என்று கூறினார். செல்லிட்டாலே அவ காதல சொல்லும் சுகம் தாங்கல என்ற அடுத்தடுத்த அந்த பாடலின் வரிகளை அடுத்தடுத்து சொன்னேன்.

இதில் காதல் என்ற சொல்லை எடுத்துவிட்டால் மற்ற வரிகள் சொல்லை பற்றியே வருவதாக கேட்டார். எனக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் தெரிஞ்சேதான் இப்படி வரிகளை எழுதியுள்ளேன் என்றார். அப்போது சரணத்துக்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டார்.

ஏகப்பட்ட இலக்கியங்கள் தமிழில் எழுதி வைத்துள்ளார்கள். அதில் எதில் எடுக்கப்போகிறேன் என்பது எனக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது, கேக்கிறவங்களுக்கும் தெரியாது என்று நகைச்சுவையாக கூறினேன்.

அந்த பாடல் முழுவதுமே காதல் என்ற வார்த்தையை நீக்கி விட்டு கேட்டால் முழுக்க சொற்களின் பயன்பாடுகளை எப்படி வேணாலும் கையாளலாம் என்பது தெரியும். ஒரு பாடலை கேட்கும்போது பாடலாசிரியர் எப்படி நுட்பமான யுக்தியை கையாள்கிறார்கள் என்பது புரியும்.

வரிகள் எழுத சிரமம்பட்ட அறுவடை பாடல்

கடைசி பாடலாக வரும் அறுவடை நீகழும் காலகட்டத்தில் கோமாளி யானையை கும்கியாக அழைத்து வந்ததும், காதலும் தெரிய போகிறது என்கிற சிச்சுவேஷனை டைரக்டர் சொன்னார். இந்த படத்தில் மற்ற பாடல்கள் எல்லாம் எளிதாக எழுதினேன். ஆனால் செய்ங் செய்ங் பாடல் மிகவும் கடினமாக இருந்தது.

ரொம்பவும் வெகுஜன ரசனையோடு இருக்கும் எந்த பாடலும் எளிதாக எழுதிவிட முடியாது. ஏனென்றால் மிகவும் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். சாதரணமாக இருக்கும் என நினைக்கும் பாடல் கஷ்டமாகத்தான் இருக்கும்.

இதுவெறும் ஆட்டம், கொண்டாட்டம் பாடல் மட்டுமல்ல. இதில் காதல் விஷயம் தெரிந்தால் என்ன ஆகும் என்பது தான் விஷயம். ஊருக்காக காதலை விட்டுவிடுவதா அல்லது ஓடிவிடுவதா என்பது தான் மையம்.

இந்த ஊருக்காக காதலை விட்டுறேன் என்பதை பாடலாக சொல்ல வேண்டும் என்றேன். இதற்கான் ட்யூனும் அமைக்கப்பட்டது. ஒரு வாரம் தொடர்ச்சியாக அந்த பாடலை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம். பல விவாதங்கள் செல்கின்றன.

கையளவு நெஞ்சத்திலேயே பாடலில் முக்கிய வரியாக "நம்ம மாண்டு போனாலும் தூக்கி தீ வைக்க உறவு வேண்டும் மச்சான்" என்று வரி அமைந்திருக்கும்.

பெண் பார்வையில் இந்த வரிகளை எழுதியிருப்பேன். அதை எழுதுவதற்கு தினத்தந்தியில் வந்த செய்தி காரணமாக இருந்தது. வேலூர் பக்கத்தில் ஒரு ஊரை சேர்ந்த இளம் காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள ஊரை விட்டு ஓடி சென்று, வாழாமல் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அவர்களின் பிரேதத்தை வாங்க இரு குடும்பத்தினரும் சண்டை செய்யாமல் மருத்துவமனையில் இருக்கிறார்கள். இந்த செய்து மிகவும் தொந்தரவு செய்தது. இதன் தாக்கத்தினால் அந்த வரிகளை உருவானது. இதைக்கேட்டு டைரக்டரும் என்னை ஆரத்தழுவி கட்டிப்பிடித்தார்.

விக்ரம் பிரபு இறப்பதுதான் க்ளைமாக்ஸ்

இந்த படத்துக்காக எடிட் செய்யப்பட்ட க்ளைமாக்ஸ் ஆறு வெர்ஷன்கள் இருந்தன. எல்லா வெர்ஷன்களையும் பார்த்தேன். அப்போது திருக்குறளில் இருக்கும் பொய் அதிகாரத்தை படித்து விட்டு ஒவ்வொரு வெர்ஷனுக்கும் பார்த்து விளக்கினேன்.

அப்படித்தான் ஒரு வெர்ஷனில் எல்லாம் எரிந்து போகும் போது, விக்ரம் பிரபும் எரிந்து விடுவதுபோல் க்ளைமாக்ஸ் இருக்கும். இதை நடிகர் பிரபு பார்த்து ஆட்சோபனை தெரிவித்தார். கடைசியாக ரசிகர்கள் பார்க்கும் க்ளைமாக்ஸை முடிவு செய்தோம்."

இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

கும்கி படத்துக்கு பின்னர் கயல், தொடரி ஆகிய படங்களிலும் பிரபு சாலமன் - யுகபாரதி ஆகியோர் கூட்டணி அமைத்தனர்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.