chicken Chukka : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் கோழி சுக்கா! ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Chicken Chukka : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் கோழி சுக்கா! ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!

chicken Chukka : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் கோழி சுக்கா! ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Jul 25, 2024 09:09 AM IST

chicken Chukka : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் கோழி சுக்கா செய்வது எப்படி என்று தெரியுமா? அதை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இதோ ரெசிபி, செய்து அசத்துங்கள்.

chicken Chukka : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் கோழி சுக்கா! ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!
chicken Chukka : மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்பெஷல் கோழி சுக்கா! ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்!

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

வர மிளகாய் – 3

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு – தேவையான அளவு

சிக்கன் – கால் கிலோ

மிளகாய்த் தூள் – 1 ஸ்பூன்

மஞ்சள் தூள் – அரை ஸ்பூன்

மல்லித் தூள் – 2 ஸ்பூன்

மிளகுத் தூள் – ஒரு ஸ்பூன்

மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

சிக்கனை நன்றாக மஞ்சள், உப்பு தண்ணீரில் அலசி சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளிக்கவேண்டும். வெங்காயம் நன்றாக வெந்து கண்ணாடி பதம் வந்தவுடன், அதில் தக்காளியை சேர்த்து மசிக்கவேண்டும்.

பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், மிளகுத் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். நன்றாக மூடியிட்டு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவேண்டும்.

கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கினால், கோழி சுக்கா தயார். இதற்கு சேர்க்கும் மசாலாக்கள் அனைத்தும் வீட்டில் செய்ததாக இருந்தால், சுவை இன்னும் அருமையாக இருக்கும்.

இதை ரசம் சாதத்துடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும். இங்கு கொடுக்கப்பட்டுள்ள மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைல் கோழி சுக்காவை அனைவரும் கட்டாயம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சிக்கன் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. சிக்கனை நாம் ஏன் அன்றாட உணவில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சிக்கன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

மனஅழுத்தத்துக்கு மருந்து

சிக்கனில் டிரிப்டோஃபன் மற்றும் அமினோ அமிலம் உள்ளது. இவையிரண்டும் உடலில் செரோட்டினின் சுரக்க உதவுகிறது. இது உங்கள் மனநிலையை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு வேதிப்பொருள்.

இதில் உள்ள வைட்டமின் மற்றும் மினரல்கள் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது

வைட்டமின் பி12 மற்றும் சோலைன் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. நரம்பு மண்டலத்துக்கும் உதவுகிறது. வயோதிகர்களுக்கு நினைவாற்றலை வழங்குகிறது.

சாப்பிடுவதற்கு எளிதானது

சிக்கன் சாப்பிடுவது எளிதானது. கடித்து விழுங்க சிறந்தது. சுவை நிறைந்தது. இதில் அதிக புரதச்சத்து அதிகம் உள்ளது.

சிக்கன் தசையை வலுப்படுத்துகிறது

இதில் உயர்தர புரதச்சத்து உள்ளது. 30 கிராம் புரதச்சத்து தசை வளர்ச்சிக்கு உதவுகிறது.

எலும்பை வலுப்படுத்துகிறது

இதில் உள்ள புரதச்சத்து எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. இது இதய ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

எடை இழக்க உதவுகிறது

புரதச்சத்து நிறைந்தது. அது ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது. எடையை மேலாண்மை செய்ய உதவுகிறது.

சிக்கனை முழுமையாக சமைத்துதான் சாப்பிட வேண்டும். முறையாக சாப்பிடவேண்டும். அப்போதுதான் உணவில் இருந்து பரவும் நோய்கள் குணமாகும். 

165 டிகிரியில் அதை எப்போதும் சமைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது சளி, இருமலை குணப்படுத்த உதவுகிறது. இது சிங்க் மற்றும் புரதச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.