எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு.. அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன்
Dec 08, 2024, 02:56 PM IST
எதிரிகளிடம் இருந்து காப்பாற்றிய அழகர்கோயில் பதினெட்டாம்படி கருப்பு.. அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்திய சிவகார்த்திகேயன் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம்.
மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தி நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு நடத்தினார்.
சிவகார்த்திகேயன் நடித்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வெளிவந்த படம் ’அமரன்’. இப்படம் ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய மேஜர் முகுந்த் வரதராஜனின், ’இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்’ என்ற புத்தகத்தில் இருந்து, திரைக்கதை எழுதி இயக்கியிருந்தார், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி.
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தைத்தயாரித்து இருந்தது. அதுமட்டுமின்றி, சோனி பிக்ஸர்ஸ் நிறுவனம் இணைத்தயாரிப்பில் ஈடுபட்டிருந்தது.
நிஜ கேரக்டரில் நடித்து நடிகர்கள்:
சிவகார்த்திகேயன், மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இந்தப் படத்தில் சாய் பல்லவி மேஜர் முகுந்தின் மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் என்னும் நிஜ கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
மேலும் இப்படத்தில் பாலிவுட் நடிகர் புவன் அரோரா மற்றும் ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கேரக்டர்களிலும், குடும்ப உறுப்பினர்களைக் கவரும் விதமாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன், இந்த ’அமரன்’ படத்தில் முழுக்க அதிரடி ஹீரோவாகத் தோன்றியிருந்தார்.
இந்திய அளவில் பேசப்பட்ட அமரன்:
இந்நிலையில் அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளிக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி பரவலான வரவேற்பினைப் பெற்றது. இதுவரை உலகளவில் ரூ.320 கோடி வசூலித்து தயாரிப்பாளர்களுக்கு லாபமான படமாக மாறியிருக்கிறது. அமரன் படத்தின் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இப்படத்துக்காக நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.20 கோடி வரை சம்பளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில், அமரன் திரையிடப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கும் மகிழ்ச்சியான வசூலைத் தந்தது. ராணுவ வீரரின் வாழ்க்கை கதையை படமாகக் கொண்டுள்ளதால் இப்படம் இந்திய அளவில் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இப்படத்தை பார்த்த பலர் சிவகார்த்திகேயன் ராணுவத்தில் சேர வேண்டும் எனவும் கூறி வருகின்றனர். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனின் நடிப்பு இயல்பாக இருப்பதாகவும் கூறுகின்றனர். மேலும் இராணுவ வீரர் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சமீபத்தில் பாதுகாப்புத்துறை ராஜ்நாத் சிங் கூட, இப்படத்திற்கு படக்குழுவினரை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
ரிப்பீட் ஆடியன்ஸ்:
தாங்கள் எதிர்பார்க்காத ஒன்றை அமரன் படம் வழங்கியதால், நாளுக்கு நாள் தியேட்டருக்கு சென்று அமரன் படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. அதுமட்டுமின்றி, இந்தப் படத்தை திரும்பத் திரும்ப குடும்பத்தோடு வந்து தியேட்டரில் பார்க்கும் ரசிகர்களும் அதிகரிக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே வெளியான நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் அமரன் படத்தின் வசூலை பாதிக்குமோ என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குவா படத்தை அடித்து நகர்த்தி தொடர்ந்து அமரன் முன்னேறியது.
இப்படி பலரின் இதயங்களை வென்ற அமரன் திரைப்படம், வரும் டிசம்பர் 5ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் திரையிடப்பட்டது. அதன்பின்னும் பல திரையரங்கில் இப்படத்தை எடுக்காமல் திரையரங்கு உரிமையாளர்கள் ஓட்டி வருகின்றனர்.
சர்ச்சைகளில் இருந்து மீண்ட சிவகார்த்திகேயன்:
சில மாதங்களுக்கு முன்பு, சிவகார்த்திகேயன் செய்த துரோகத்தை தன்னால் மன்னிக்கமுடியாது என்று தெரிவித்து இருந்தார். அதேநேரம் பத்திரிகையாளர் வலைப்பேச்சு பிஸ்மி, சிவகார்த்திகேயன் - டி.இமானின் முன்னாள் மனைவியிடம் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கருத்துரைத்தார்.
இதனால், சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் முடிந்துவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. மேலும், சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் திரைப்பயணத்தை நினைத்து மிகுந்த கவலையடைந்தனர். இதனால் சிவகார்த்திகேயன் மிகுந்த மன உளைச்சலுடன் எதனையும் கண்டுகொள்ளாது, தன் பணியில் மட்டும் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த'அமரன்' திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. எதிரிகள் தொல்லை குறைந்துள்ளது. இதனால், மதுரை - அழகர்கோயில் கள்ளழகர் திருக்கோயிலில் உள்ள பதினெட்டாம்படி கருப்புவிற்கு அரிவாள் நேர்த்திக்கடன் செலுத்தி நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ஆகியோர் வழிபாடு நடத்தினர்.
டாபிக்ஸ்