34 நாள் ஆனாலும் நான் தான் நம்பர் 1.. கலெக்ஷன் லிஸ்டில் முதல் ஆளாக நிற்கும் அமரன்.. தவிக்கும் கங்குவா..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  34 நாள் ஆனாலும் நான் தான் நம்பர் 1.. கலெக்ஷன் லிஸ்டில் முதல் ஆளாக நிற்கும் அமரன்.. தவிக்கும் கங்குவா..

34 நாள் ஆனாலும் நான் தான் நம்பர் 1.. கலெக்ஷன் லிஸ்டில் முதல் ஆளாக நிற்கும் அமரன்.. தவிக்கும் கங்குவா..

Malavica Natarajan HT Tamil
Dec 04, 2024 01:25 PM IST

அமரன் படம் திரையரங்கில் வெளியாகி ஒரு மாதம் ஆன பின்னும் பல புது படங்களின் வசூலை இது முறியடித்து வருகிறது.

34 நாள் ஆனாலும் நான் தான் நம்பர் 1.. கலெக்ஷன் லிஸ்டில் முதல் ஆளாக நிற்கும் அமரன்.. தவிக்கும் கங்குவா..
34 நாள் ஆனாலும் நான் தான் நம்பர் 1.. கலெக்ஷன் லிஸ்டில் முதல் ஆளாக நிற்கும் அமரன்.. தவிக்கும் கங்குவா..

ஆனால், கங்குவா அதிகளவு விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதால், ஏற்கனவே வசூலில் கெத்து காட்டி வரும் அமரனுக்கு வரும் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால், அமரன் படம் வார நாட்களிலும் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

அமரன் வசூல் நிலவரம்

அமரன் திரைப்படம் வெளியான 34வது நாளான நேற்று, தமிழ்நாட்டில் மட்டும் 0.38 கோடி ரூபாய் வசூலப் பெற்றுள்ளது. இதுவரை படம் வெளியான 34 நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 166.49 கோடி ரூபாய் வசூலைப் பெற்று சிவகார்த்திகேயனின் சினிமா வரலாற்றில் மாபெரும் வெற்றிப் படமாக மாறியுள்ளது.

மேலும், அமரன் படம் வெளியான 34 நாட்களில் இந்தியாவில் மட்டும் 249.15 கோடி ரூபாய் வசூலையும், உலகளவில் 328.25 கோடி ரூபாய் வசூலையும் பெற்று பிளாக் பஸ்டர் படமாக ஓடிக் கொண்டிருக்கிறது என்பது sacnilk.com எனும் இணையதளம் வெளியிட்ட தகவலின் அடிப்படையில் தெரிய வந்துள்ளது.

பட்ஜெட்டில் பாதி கூட வசூலிக்காத கங்குவா

ஆனால், 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா திரைப்படம் வெளியான 20 நாட்களில் இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் 38.96 கோடி ரூபாயும் உலகளவில் ரூ.106.41 கோடி ரூபாயும் வசூலித்ததாகக் கூறப்படுகிறது. அதாவது கங்குவா படத்தின் பட்ஜெட்டில் பாதியைக் கூட வசூலிக்க முடியாமல் தவித்து வருகிறது.

படத்தின் தாக்கம் எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் எழுந்தது என்றால், தயாரிப்பாளர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் திரையரங்குகளில் பப்ளிக் ரிவியூ எடுக்க வருபவர்களைத் தடை விதிக்கும் அளவுக்கு பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது.

சொர்க்கவாசலின் நிலை என்ன?

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி வித்தியாசமான முறையில் நடித்துள்ள சொர்க்கவாசல் திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 6 நாட்கள் நிறைவடைந்துள்ளது. 6ம் நாளான நேற்று மட்டும் இந்தப் படம், 3.99 கோடி வசூலை இந்திய அளவில் பெற்றுள்ளது.

சக்கை போடு போடும் அமரன்

எனவே, இதுவரை வெளியான தகவல்களை வைத்துப் பார்க்கும் போது, சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் தான் தியேட்டர்களில் அதிகமான வசூலை பெற்று வரும் திரைப்படமாக இருந்து வருகிறது. இன்னும் சில நாட்களில் அமரன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ள நிலையிலும், தியேட்டர் வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது.

இதனால், சிவகார்த்திகேயனுக்கு தமிழ் சினிமாவில் மவுசு கூடியுள்ளது. அதுமட்டுமின்றி, இவரைத் தேடி பல பட வாய்ப்புகளும் வந்த வண்ணமே இருக்கிறது.

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.