தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  போராட்டம், சர்ச்சைக்கு மத்தியில் ரூ. 200 கோடி வசூல்..காஸ்ட்லி பரிசு! உச்சகட்ட ஹாப்பி மோடில் சிவகார்த்திகேயன்

போராட்டம், சர்ச்சைக்கு மத்தியில் ரூ. 200 கோடி வசூல்..காஸ்ட்லி பரிசு! உச்சகட்ட ஹாப்பி மோடில் சிவகார்த்திகேயன்

Nov 10, 2024, 08:30 PM IST

google News
அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், சர்ச்சை என ஒரு புறம் இருந்தாலும், இதற்கு மத்தியில் படம் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. உச்சகட்ட ஹாப்பி மோடில் இருக்கும் சிவகார்த்திகேயன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு காஸ்ட்லி பரிசை அளித்துள்ளார்.
அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், சர்ச்சை என ஒரு புறம் இருந்தாலும், இதற்கு மத்தியில் படம் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. உச்சகட்ட ஹாப்பி மோடில் இருக்கும் சிவகார்த்திகேயன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு காஸ்ட்லி பரிசை அளித்துள்ளார்.

அமரன் படத்துக்கு எதிராக போராட்டம், சர்ச்சை என ஒரு புறம் இருந்தாலும், இதற்கு மத்தியில் படம் ரூ. 200 கோடி வசூலித்துள்ளது. உச்சகட்ட ஹாப்பி மோடில் இருக்கும் சிவகார்த்திகேயன், படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷுக்கு காஸ்ட்லி பரிசை அளித்துள்ளார்.

தீபாவளிக்கு வெளியான நான்கு பாடங்களில் ரேஸில் வென்ற படமாக சிவகார்த்திகேயன் - சாய்பல்லவி நடித்த அமரன் படம் உள்ளது. திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிவரும் இந்த படம் தற்போது வரை பாக்ஸ் ஆபிஸில் ரூ. 200 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தகவல்கள் உலா வருகின்றன. தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக வைத்து அமரன் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார்.

காஸ்ட்லி பரிசு

அமரன் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக படத்தின் திரைக்கதை, சிவகார்த்திகேயன், சாய்பல்லவி ஆகியோரின் நடிப்புக்கு இணையாக ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசையும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. படத்தின் பாடல்கள் மட்டுமல்லாமல், பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. அத்துடன் எமோஷனலாக படத்துடன் கனெக்ட் செய்துள்ளது.

இதையடுத்து படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு, காஸ்ட்லி வாட்சை நடிகர் சிவகார்த்திகேயன் பரிசாக அளித்துள்ளார். சிவகார்த்திகேயன் பரிசளித்த டேக் ஹீட்டர் மென்ஸ் ஃபார்முலா-1 பிராண்ட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஸ்டைலிஷ் வாட்சை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஜி.வி. பிரகாஷ் குமார்.

இதையடுத்து இந்த வாட்சின் விலை ரூ. 3 லட்சம் இருக்கும் என நெட்டிசன்கள் தெரிவித்திருப்பதோடு, ஜி.வி. பிரகாஷ்குமாருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.

జీవీ ప్రకాశ్

அமரன் ஓடிடி ரிலீஸ்

ரசிகர்களை கவர்ந்திருக்கும் அமரன் படம் நவம்பர் மாதம் இறுதியில் ஓடிடியில் வெளியாகும் என தெரிகிறது. நெட்பிளிக்ஸ் நிறுவனம் அமரன் படத்தின் ஓடிடி வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் அமரன் படத்தை தயாரித்துள்ளது.

அமரன் படத்துக்கு எதிராக போராட்டம்

இந்த படத்தில் ராணுவத்தினர் போர் காட்சிகளில் இஸ்லாமியர்களை தவறாக சித்திரித்திப்பதாக கூறி இஸ்லாமிய அமைப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். படம் திரையிடப்படும் திரையரங்குகளில் முற்றுகை போராட்டமும் நடத்தி வருகின்றனர். இதனால் அமரன் திரையிடப்படும் திரையரங்குகளில் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

காஷ்மீரில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட இராணுவப் படை வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை கதையாக அமரன் உருவாகியுள்ளது.

அமரன் படம் சர்ச்சைகள்

இந்தப் படத்தில் சிபிஆர்எஃப் வீரர்கள் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது, மேஜர் முகுந்த் வரசதராஜனின் சாதி அடையாளத்தை காட்டாமல் திரித்து உள்ளனர். அவர் குடும்பத்தினர் குறித்த தவறான தகவல்கள் உள்ளது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் போல் சித்தரித்து உள்ளது என பல எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.

ஜிவி பிரகாஷ் புதிய படங்கள்

நடிப்பு, இசையமைப்பு என இரண்டு பணிகளையும் மேற்கொண்டு வரும் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் தீபாவளி ரிலீஸ் படங்களாக அமரன், லக்கி பாஸ்கர் வெளியாகின. இந்த படங்களுக்கு முன்னர் இந்த ஆண்டில் இவரது இசையமைப்பில் கேப்டன் மில்லர், மிஷன் சாப்டர் 1, சைரன், ரெபல், கல்வன், டியர், தங்கலான், இந்தியில் சர்ஃபிரா உள்ளிட்ட படங்கள் வெளியாகின.

இதுதவிர ஜிவி பிரகாஷ் குமார் இசையமைப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரவிருக்கும் படங்களாக வணங்கான், வீரா தீரா சூரன், இட்லி கடை, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் மற்றும் தெலுங்கு, இந்தியில் ஒரு சில படங்களும் உள்ளன.

சூர்யா 43 படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் நிலையில், இது அவரது 100வது படமாக உள்ளது

 

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி
கவனம் பெற்றவை