அலற வைக்கும் சிவகார்த்திகேயனின் அமரன்.. ஈடு கொடுத்து டஃப் கொடுத்தாரா துல்கர் - லக்கி பாஸ்கர் வசூல் எவ்வளவு?
அமரன் திரைப்படத்திற்கு டஃப் கொடுத்து இருக்கிறதா துல்கரின் லக்கி பாஸ்கர் என்பதை இங்கே பார்க்கலாம்.

அலற வைக்கும் சிவகார்த்திகேயனின் அமரன்.. ஈடு கொடுத்து டஃப் கொடுத்தாரா துல்கர் -
லக்கி பாஸ்கர் வசூல் எவ்வளவு?
தனுஷ் வாத்தி படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி பொருளாதார குற்றப் பின்னணியை மையமாக வைத்து இயக்கிய படம் லக்கி பாஸ்கர். இந்தப் படத்தில் துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி, ராம்கி, சச்சின் கடேக்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லக்கி பாஸ்கர் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. இந்தப்படத்தின் வசூல் விபரங்கள் தற்போது வெளியாகி இருக்கிறது.