தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  அடேங்கப்பா என்னா நடிப்பு.. கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறியேம்மா.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

அடேங்கப்பா என்னா நடிப்பு.. கம்பி கட்டுற கதை எல்லாம் விடுறியேம்மா.. சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்

Nov 05, 2024, 08:04 AM IST

google News
அன்பு வீட்டிற்கு முஸ்லீம் பெண்ணாக மாறி தீபாவளி கொண்டாட வரும் ஆனந்தி, அவரின் அம்மாவை நம்ப வைக்க சரளமாக பொய் சொல்லி நடிக்கிறார்.
அன்பு வீட்டிற்கு முஸ்லீம் பெண்ணாக மாறி தீபாவளி கொண்டாட வரும் ஆனந்தி, அவரின் அம்மாவை நம்ப வைக்க சரளமாக பொய் சொல்லி நடிக்கிறார்.

அன்பு வீட்டிற்கு முஸ்லீம் பெண்ணாக மாறி தீபாவளி கொண்டாட வரும் ஆனந்தி, அவரின் அம்மாவை நம்ப வைக்க சரளமாக பொய் சொல்லி நடிக்கிறார்.

வேலைக்காக ஹாஸ்டலில் தங்கி இருக்கும் ஆனந்திக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து வந்த துயரம் இருந்துகொண்டே இருந்தது. இதற்கிடையில், கடத்தல்காரர்களால் ஏற்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஹாஸ்டலில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆனந்தி, அன்புவின் அம்மாவிற்கு தெரியாமல், அவரது வீட்டில் இருக்கிறார்.

பக்கா யோசனை தந்த யமுனா

இந்நிலையில், அன்பு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட நினைக்கும் ஆனந்திக்கு பக்கா யோசனை ஒன்றை தந்துள்ளார் அன்புவின் தங்கை யமுனா. இதையடுத்து, ஆனந்தி அன்புவிடம் இதுபற்றி எதுவும் சொல்லிக் கொள்ளாமல், புர்கா அணிந்து முஸ்லீம் பெண்ணாக அன்பு வீட்டிற்குள் நுழைகிறார். அங்கு அன்பு மற்றும் அவரது அம்மாவிடம் தன்னை யமுனாவின் தோழி என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

கோபமான அன்பு

இதை உண்மை என நம்பிய அன்பு, வீட்டில் ஆனந்தி இல்லாததால் கோபத்தில் இருக்கிறார். எங்கு போனார், எப்போது வருவார், அவரை அம்மா பார்த்தால் என்ன ஆகும் என்ற பதற்றத்தில், யமுனாவிடம் ஆனந்தியை திட்டிக் கொண்டிருக்கிறார்.

அப்போது தான் யமுனா, முஸ்லீம் பெண்ணாக வந்துள்ளது ஆனந்தி தான் என உண்மையை கூறுகிறார். இந்நிலையில், அன்பு வீட்டில் உள்ளவர்களிடம் ஷகிலா பானுவாக ஒட்டிக் கொண்ட ஆனந்தி, அவரது அம்மாவிடம் நெருங்குகிறார்.

சிக்கிக் கொண்ட ஆனந்தி

அன்பு வீட்டில் உள்ள அனைவரையும் அமரவைத்து ஆனந்தி சாப்பாடு பரிமாறுகிறார். அப்போது அவருக்கு தும்மல் வரவே, வழக்கம் போல வெள்ளக்கா புலி கருப்பா என அவரது குலதெய்வத்தின் பெயரை கூறிவிடுவார். இதனால், அன்புவும் அவரது தங்கையும் ஆனந்தியால் மாட்டிக் கொள்வோமோ என்ற பயத்தில் வீட்டில் அமர்ந்திருப்பர்.

இதை கேட்ட உடன் அதிர்ச்சி அடைந்த அன்புவின் அம்மா, என்ன எங்களைப் போல ஊரில் உள்ள குலதெய்வத்தின் பெயரை எல்லாம் சொல்ற என சந்தேகத்துடன் கேட்பார்.

அப்போது, இந்தப் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளக்கூடாது என பேச நினைத்த அன்பு, என்ன சொல்லி சமாளிப்பது எனத் தெரியாமல் அமைதியாகி, ஷகிலா பானுவே பதில் சொல்வார் என்பார்.

வேற லெவல் ஆக்டிங் செய்யும் ஆனந்தி

பின், என்ன சொல்வது எனத் தெரியாமல் முழித்துக் கொண்டிருந்த ஆனந்தி, சின்ன வயதில் எனக்கு உடம்பு சரியில்லாமல் போனது. அப்போ, தர்காவிற்கு போற மாதிரி என்னை வெள்ளக்கா புலி கருப்பு சாமியிடம் அழைத்து சென்றனர். எனக்கு உடனே உடல்நலம் சரியாகி விட்டது. இதனால் அப்போது இருந்து இப்படி செய்வேன். அதுவும் இல்லாமல் என் அப்பா எல்லா கடவுளும் எல்லா மதமும் ஒன்றுதான் எனக் கூறுவார் என்றெல்லாம் சொல்லி நடிப்பில் அசத்தி இருப்பார்.

ஆனந்தியின் நடிப்பைப் பார்த்து யமுனாவும், அன்பும் ஒருவறை மாற்றி ஒருவர் பார்த்து பெருமை படுவர். இப்படியாக ஆனந்தி, அன்பு வீட்டில் தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகி வருகிறார்.

மகேஷை விட அன்புவை பிடிச்சிருக்கு

முன்னதாக , அன்பு ஆனந்திக்காக வாங்கிய புடவையை, அன்புவின் தங்கை ஆனந்தியிடமே கொடுப்பார். அதை வாங்கிக் கொள்ளுமாறும் கூறுவார். அப்போது, புடவை பிடித்திருக்கிறதா என அன்புவின் தங்கை கேட்க, மகேஷ் சார் எடுத்துக் கொடுத்த புடவையை விட எனக்கு இதுதான் பிடித்திருக்கிறது எனக் கூறுவார். இதைக் கேட்ட அன்புவிற்கு சந்சோஷம் தாங்க முடியாமல் இருக்கும்.

மொட்டை மாடியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில், ஆனந்தி, அன்புவின் தங்கைக்கு மருதாணி வைத்துவிடுவார். அதன் பின், ஆனந்திக்கு மருதாணி வைத்துவிடுமாறு அவரது தங்கை வற்புறுத்துவார்.

ஆனந்திக்கு மருதாணி வைத்த அன்பு

அன்பு, இதெல்லாம் வேண்டாம். அமைதியாக இருக்குமாறு கூறுவார். ஆனால், அவரது தங்கையோ, விடாப்பிடியாக இது நம்ம ஆனந்தி நீ மருதாணி வைத்துவிட்டால் எதுவும் சொல்ல மாட்டார்கள் எனக் கூறி இருவரையும் சமாதானப்படுத்துவார். இதனால், ஆனந்தியும் சந்தோஷத்தில் மருதாணி வைக்க தனது கைகளை அன்புவிடம் கொடுத்தார்,

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.
அடுத்த செய்தி