உறவை சொல்ல முடியாமல் தவிக்கும் ஆனந்தி.. கட்டிப் பிடிக்கும் சமயத்தில் பார்த்த மகேஷ்.. சிங்கப்பெண்ணே இந்த வார ஸ்பெஷல்!
பட்டாசுவிற்கு பயந்து ஆனந்தி, அன்புவை கட்டிப் பிடித்து நின்று கொண்டிருப்பதை, மகேஷ் பார்க்கிறார். இதனால், மகேஷ்- அன்புவிற்கு இடையே என்ன நடக்கப் போகிறது என்பதை இந்த வார சிங்கப் பெண்ணே சீரியலில் பார்க்கலாம்.

ஹாஸ்டலில் இருந்து வெளியே அனுப்பப்பட்டது, வேலை செய்யும் இடத்தில் தீபாவளி போனஸ் பிரச்சனை, அன்புவின் அம்மாவிற்கு தெரியாமல் அவர்கள் வீட்டில் தங்கி இருப்பது என சிங்கப் பெண்ணே சீரியலில் ஆனந்தி வாழ்க்கையில் விதி சுற்றி சுற்றி அடிக்கிறது.
ஆனந்திக்காக போட்டி போடும் அன்பு, மகேஷ்
இருந்தாலும், அவரை பிரச்சனைகளில் இருந்து காப்பாற்ற அன்புவும், மகேஷும் போட்டிப் போட்டுக் கொண்டு வந்துவிடுவர். அப்படித்தான், ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய ஆனந்தியை மகேஷ் பத்திரமாக அழைத்து வந்தார். பின், ஆனந்தியை அவர் வீட்டில் தங்க வைத்தால் நல்லதல்ல என நினைத்து, அன்புவின் வீட்டில் தங்க வைத்து பார்த்துக் கொண்டு வருகிறார்.
அன்பு வீட்டை நேசிக்கும் ஆனந்தி
அன்பு மேல் உயிரையே வைத்திருக்கும் அவரது அம்மா, குறும்புத் தனமான அன்புவின் தங்கை யமுனா ஆகியோரைப் பார்த்து ஆனந்தி ஏங்குகிறார். தன் குடும்பத்தைப் போலவே, அன்புவின் குடும்பத்தை பார்த்த ஆனந்தி, அதனை கோயில் போல நேசிப்பதாக அவருக்குள்ளாகவே சொல்லிக் கொள்கிறார்.