அன்பு குடும்பத்துடன் தீபாவளி கொண்டாட நினைக்கும் ஆனந்தி.. ஆசையை நிறைவேற்றுவாரா அன்பு? சிங்கப்பெண்ணே இன்றைய எபிசோட்
ஹாஸ்டலில் இருந்து வெளியேறிய ஆனந்தி, அன்பு குடும்பத்துடன் சேர்ந்து தீபாவளி கொண்டாட ஆசைப்படுவதாக அவரது தங்கையிடம் தனது ஆசையை ஆனந்தியிடம் கூறியுள்ளார்.

ஹாஸ்டலை விட்டு வெளியேற்றப்பட்ட ஆனந்தி, அன்புவின் வீட்டில் தான் தங்கி இருக்கிறார். அன்புவின் அம்மாவும் தங்கையும் வெளியூரில் இருந்து திரும்பி வந்ததால், வீட்டில் ஆனந்தி இருப்பதை கூற முடியாமல், ஆனந்தியையும் வெளியில் அனுப்ப முடியாமல் அன்பு தவித்து வந்தார்.
போனால் சிக்கும் அன்பு
இதற்கிடையில், ஆனந்தியை மகேஷிடம் அன்பு அழைத்துச் சென்ற சமயத்தில், ஆனந்தியின் அம்மா அவருக்கு போன் செய்துள்ளார். ஆனால், அன்புவும் ஆனந்தியும் வீட்டிலேயே போனை வைத்துவிட்டு சென்றதால், அது அடித்துக் கொண்டே இருந்தது. இதனால், போன் சத்தம் கேட்டு அன்புவின் அறைக்கு வந்த அவரது அம்மா திகைத்து போனார். இது அன்புவின் போன் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர், இது யாருடைய போன், எதற்காக அன்பு ரூமில் இருக்கிறது என சந்தேகதத்தில் இருக்கிறார்.
கார்மெண்ட்ஸில் பிரச்சனை
இந்நிலையில், மகேஷ் கார்மென்ட்ஸில் பணிபுரியும் ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் தர அறிவுறுத்திய நிலையில், கம்பெனி நஷ்டத்தில் செல்வதால் ஆயிரம் ரூபாய் மட்டும் போனஸ் தர அறிவுறுத்தியதாகக் கூறி திட்டமிட்டே சதி செய்தனர்.
