குலசாமியை வேண்ட சொல்லும் அன்பு.. சந்தேகத்தில் கேள்வி எழுப்பும் ஆனந்தி.. சிக்குவாரா ஆனந்தி?
Oct 22, 2024, 07:17 AM IST
அன்பு போல் உடையணிந்து அவர்கள் வீட்டிலிருந்து தப்பிக்க ஆனந்தி முற்படும் போது, அன்பின் அம்மா அவரை கூப்பிடுகிறார்.
ஹாஸ்டலில் இருந்த காயத்ரியை சிலர் கடத்தி வைத்திருந்ததை அறிந்த ஆனந்தி அவளைக் காப்பாற்ற முயன்று, ஹாஸ்டலுக்கு தாமதமாக வந்தார். அப்போது, ஹாஸ்டலுக்குள் நுழைய சுவர் ஏறி குதித்து வார்டனிடம் மாட்டிக் கொண்டார். இதனால், ஆனந்தியை ஹாஸ்டல் வார்டன் வெளியே அனுப்பி விட்டார்.
ஆனந்திக்காக போராடும் மகேஷ்
இதனால் செய்வது அறியாமல் தவித்த ஆனந்தியும் மகேஷும் அன்புவின் உதவியை எதிர்பார்க்கின்றனர். ஆனந்தியை ஒரு நாள் மட்டும் அன்பு வீட்டில் தங்க வைக்குமாறு மகேஷ் கேட்டுக் கொள்கிறார். இந்த சமயத்தில் தனது அம்மாவும் தங்கையும் வெளியே சென்றிருப்பதால், ஆனந்தியை வீட்டில் தங்கவைக்க அன்பு சம்மதம் தெரிவிக்கிறார்.
பாசமாக பார்த்துக் கொள்ளும் அன்பு
பின், நடு இரவில் வீட்டிற்கு வந்த ஆனந்திக்கு அன்பு தோசை எல்லாம் சுட்டுக் கொடுத்து பாசமாக பார்த்துக் கொள்கிறார், பின் அவர் இரவு தூங்குவதற்கு தன்னுடைய அறையையும் தருகிறார். அடுத்த நாள் காலை விடிந்து பார்த்தால், ஆனந்தி வீட்டை தூய்மையாக மாற்றி, சாம்பிராணி எல்லாம் போட்டு அன்புவை அசத்தியுள்ளார், இந்த நிலையில் தான் வெளியூர் சென்றிருந்த அன்புவின் அம்மாவும் தங்கையும் வீட்டிற்கு வந்து அன்புவிற்கும் ஆனந்திக்கும் ஷாக் கொடுத்தனர்.
அன்புவிற்கு போன் செய்யும் கோகிலா
ஆனந்தி நடு இரவில் சுவர் ஏறி குதித்து ஹாஸ்டலுக்கு வந்ததால், அவரை ஹாஸ்டலில் இருந்து வெளியே அனுப்பிவிட்டோம் என வார்டன் ஆனந்தியின் அக்கா கோகிலாவிற்கு போன் செய்கிறார். ஆனந்தி எப்படியும் அன்புவுடன் தான் இருப்பார் என்ற சந்தேகத்தில் கோகிலா அன்புவிற்கு போன் செய்கிறார். அப்போது, ஆனந்தி என்ன நடந்தது என அவரது அக்காவிடம் கூறுகிறார்.
அன்பை நினைத்து ஆச்சரியப்படும் ஆனந்தி
இனி என்ன நடக்கப் போகிறது என்பதை ப்ரோமோவாக சன் டிவி வெளியிட்டுள்ளது. அதில், ஆனந்தி வீட்டில் இருப்பதை மறைக்க அன்பு முயற்சி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல், வீட்டில் அவர் தங்கையுடன் வம்பு இழுத்து சண்டை போட்டு விளையாடுவதை பார்த்து ஆனந்தி பூரிக்கிறார். அன்புவிற்குள் இப்படி ஒரு முகம் இருப்பதைப் பார்த்து ஆச்சரியமும் படுகிறார்.
அன்புவாக மாறும் ஆனந்தி
இந்நிலையில், ஆனந்தியை தனது அம்மா மற்றும் தங்கையின் கண்களில் சிக்காமல் எப்படி வெளியே அனுப்பலாம் என அன்பு யோசித்து வருகிறார். அந்த சமயத்தில் வேறு வழி இல்லாமல் ஆனந்தியை அன்புவின் உடைகளை அணிந்து கொள்ள சொல்கிறார். அதற்கு சம்மதித்த ஆனந்தி, தான் யார் என்பதா மறைக்க தலையில் தொப்பியுடன் வெளியே வருகிறார்.
சிக்குவாரா ஆனந்தி?
இதனை அறையின் உள்ளே இருந்தவாறு அன்பு பாரத்துக் கொண்டுள்ளார். இந்த சமயத்தில் அன்புவின் அம்மா ஆனந்தி தான் அன்பு என நினைத்து அவரை கூப்பிடுகிறார்.
இனி சிங்கப்பெண்ணே சீரியலில் என்ன நடக்கும்? ஆனந்தியும் அன்புவும் அவரது அம்மாவிடம் சிக்குவார்களா? என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், பொருள் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்